Friday, July 11, 2008

டோண்டு சாருக்கு வந்த கேள்வியும் அதற்கான என் பதிலும்

//தென்காசி
நாடக குழுக்களில்'பிசி'யாக உள்ள குழு யாருடையது?
பதில்-நண்பர் காஞ்சனா ராதாகிருஷ்ணனுக்கு இக் கேள்வி அனுப்பி வைக்கப் படுகிறது//

இந்த கேள்விக்கு சற்று விரிவாகவே பதில் சொல்ல ஆசைப்படுகிறேன்.சமீபத்தில் 1985 வரை நாடகங்கள்
சக்கைப்போடு போட்டன.சாதாரண என்னைப்போன்ற அமைச்சூர் குழு நாடகங்ககளும் 100 தடவைகளுக்கும்
மேல் நடைப்பெற்றன.சிவாஜி.மனோகர்,பாலசந்தர்,கோமல்,சோ,மெரினா இவர்களின் நாடகங்களுக்கு
blackல் டிக்கட்டுகள் விற்கப்பட்டிருக்கின்றன.சென்னையில் 100க்கும் மேற்பட்ட சபாக்கள்,வெளியூர்களில்30
க்கும் மேற்பட்ட சபாக்கள் இருந்தன.ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாதம் 30 நாட்களில் 45காட்சிகள்
(சனி,ஞாயிறு 3 காட்சிகள்)நாடகங்கள் நடந்த காலங்கள் உண்டு.ஆனால் இன்றோ ஒரு டஜன் சபாக்கள் தான்.
அதுவும் தென் சென்னையில் மட்டும்.நாடகம் மூலம் வெள்ளித்திரைக்குப் போனவர்கள் நாடக மேடையை
மறந்தார்கள்.ஆனாலும்..சில அமெச்சூர் குழுக்கள் நாடகக்களையை I.C.U. வில் வைத்து காப்பாற்றிவருகிறார்கள்.
அவற்றுள் எனது சௌம்யா நாடகக் குழுவும் ஒன்று.(எனது சமீபத்திய நாடகம்'மாண்புமிகு நந்திவர்மன்' a political
satire)
இப்போது..உங்கள் கேள்விக்கான பதில்
இன்றும் பிசி யாக உள்ள குழுக்கள் S.Vee.சேகர்,கிரேசி மோகன் குழுவினர்.இவர்களுடன் எந்த நாளிலும்
நாடகத்தை மறக்காத Y.G.மஹேந்திரனின் குழு.ஆகிய 3 troupe தான்.T.V.வரதராஜனை அடுத்து கூறலாம்.மற்றபடி என் போன்றவர்களுக்கு நாடகத்தன்றுதான் பிசி.
R.S.மனோகரின் நாடகங்களை அவரது நேஷனல் தியேட்டர் குழுவைச் சேர்ந்த சில மூத்த கலைஞர்கள் நடத்தி
வருகின்றனர்.இவர்கள் நாடகங்களுக்கு ஆகும் செலவு பல ஆயிரங்கள்.அதைக் கொடுக்க சபாக்கள்தான் இல்லை.

டோண்டு..சார்..உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வியை எனக்கு அனுப்பிவைத்த உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

6 comments:

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே. நேரம் தவறாமைக்கு மனோஹர் பிரசித்தம் ஆயிற்றே. 6.30-க்கு நாடகம் என்றால் 6.30-க்கு சரியாக ஆரம்பிக்கும். என்ன முதல் நான்கைந்து காட்சிகளை சின்ன சின்னதாக வைப்பார். அவரது காடக முத்தரையன் நாடகம் இன்னும் நினைவில் இருக்கிறது. பல்லவ அரசியல் சூழலில் விளையும் குழப்பங்களை பற்றி அந்த நாடகம் எழுதப்பட்டது. முதல் நான்கு காட்சிகளிலும் காடக முத்திரையன் என்ற பெயரை உச்சரிப்பதுடன் முடியும். ஐந்தாவது காட்சியில் காடக முத்தரையனாக மனோஹர் உள்ளே வருவது காணக் கண்கொள்ளா காட்சி.

பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய எனது பதிவைப் பார்த்து உங்கள் கருத்துக்களை கூறவும்.

பார்க்க:
http://dondu.blogspot.com/2007/11/blog-post_20.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

thenkasi said...

தங்களின் விளக்க பதிலுக்கு நன்றி.1975-80 களில் சென்னையில் நாடகங்கள் சக்கை போடு போட்டன.
கட்டனம் கூட ருபாய் 5 தான்.ராஜா அண்ணமாலைமன்றம்,ம்யுசிக் அகடமி ஹால் சென்னைக்கு செல்லும் சமயத்தில் "கால் கட்டு" போன்ற சிறப்பான நாடகங்கள் பார்த்த நினைவலைகள் ஆனந்தத்தை தருகின்றன.

தற்சமய்ம் அலுவலக விசயமாக சென்னை சென்றபோது நாடகங்களுக்கு வரவேற்பு முன்புபோல் இல்லை என்பது புரிந்தது.

தமிழ் என்றாலே இயல்,இசை,நாடகம் எனும் முப்பரிமானத்தில், நாடகத்தை மீண்டும் பிரகாசிக்க செய்தல் நம் ஒவ்வொருவரின் கடமையன்றோ!

சினிமாக்களுக்கு மானியம் கொடுக்கும் அரசின் கருணை நாடகம் உலகம் பக்கம் திரும்புமா!

அரசின் பாராமுகம் காரணமாய் " சர்க்கஸ்" எனும் அற்புதக் கலை அழியும் நிலையில் உள்ளது.

நாடக உலகிலிருந்து சென்று தற்சமயம் அரசியல்,சினிமா,சின்னத்திரை,இசைத்துறை ஆகியவற்றில் பிரபலாமாய் உள்ளவர்கள் தங்கள் தாயை( பிறந்த வீட்டின் புகழை) மீண்டும் அழகு சிம்மாசனத்தில் அமரச் செய்தால் தமிழன்னை அகமகிழ்வாள்

Kanchana Radhakrishnan said...

நீங்கள் கூறியுள்ள பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய பதிவு எப்போது இடப்பட்டது..லேபிள் என்ன என்று சொல்லமுடியுமா?

Kanchana Radhakrishnan said...

தென்காசி அவர்களே..வருகைக்கு நன்றி.
தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம் நாடகத்துறைக்கென மான்யம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
ஆனால்..அவை சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு கிடைக்காமல்..வேறு யார்..யாருக்கோ போய் சேருகிறது.
தமிழ் சினிமாக்களுக்கு கோடி கணக்கில் பரிசுத் தொகை கொடுக்கும் அரசு..நாடகக்குழுக்களுக்கும்
அதுபோல ஏதாவது மான்யம் தரலாம்.

ஜோசப் பால்ராஜ் said...

திரைப்படங்களை எடுக்கும் போது, காட்சி சரியாக வரவில்லையென்றால் ஒரே காட்சியை 100 தடவை கூட எடுக்கலாம். ஆனால் நாடகம் அப்படியல்ல. இப்போது இருக்கும் பல நடிகர்களை மேடை நாடகங்களில் நடிக்க சொன்னால் காணமல் போய்விடுவார்கள். நடிகைகளைப்பற்றி சொல்லவே வேண்டாம்.
உண்மையிலேயே திறமைசாலிகள் நாடக நடிகர்கள்தான். ஆனால் மக்களின் ரசனை இப்போது திரைப்படங்களை நோக்கிப் போய்விட்டது. அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்யலாம்தான். ஆனால் இப்போது அரசின் உதவிகள் கிடைக்கவேண்டியவர்களுக்கு கிடைப்பதில்லையே.
எல்லாம் கணக்கு பார்த்துதான் உதவியெல்லாம். நாடக நடிகர்களால் எந்த பிரயோசனமும் இல்லை. சினிமாக்காரர்களுக்கு உதவி வழங்கினால் அவர்கள் ஒரு பாராட்டு விழா நடத்துவார்கள், நடிக, நடிகர்களின் ஆட்டம் பாட்டம் எல்லாம் இருக்கும். அதை அப்படியே எடுத்து முன்னர் சன் டிவி இப்போ கலைஞர் டிவியில் போட்டு காசாக்கலாம். ( இதே அதிமுக ஆட்சியாய் இருந்தால் ஜெயா டிவிக்கு) ஆனால் நாடக நடிகர்களுக்கு உதவி செய்தால் என்ன பலன்? நீங்கள் கூட பாராட்டு விழா நடத்தி நாடகம் போடுவீர்கள். ஆனால் இந்த நாடகங்களையெல்லாம் தொலைகாட்சியில் ஒளிபரப்பினால் அதிக விளம்பரம் கிடைக்காது பாருங்கள்.

இனிமேல் நான் கூட விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைப்பவர்களுக்கு ஒரு யோசனை சொல்லப்போகின்றேன். எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டால், நாங்களும் நடிகர்,நடிகைகளை கூட்டிவந்து 5 மணி நேர பாராட்டுவிழா நடத்துகிறோம் என்று சொல்ல சொல்லலாம்.

Kanchana Radhakrishnan said...

திரு.பால்ராஜ்..உங்கள் பின்னூட்டம் கண்டு..உங்கள் மனநிலையை உணர்ந்தேன்.சிங்க்கப்பூர்.மலேசியா.துபாய்
மக்களெல்லாம் சினிமா நடிக,நடிகர் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி என்று கொள்ளை அடிக்கப்படுகிறார்கள்.அதைப்பற்றியும் ஒரு பதிவு
போட இருக்கின்றேன்.விவசாயிகள் நிலை குறித்து நான் 'சொல்லக்கொதிக்குது நெஞ்சம்'என்ற நாடகம் போட்டேன்.
அதே நாடகத்தை சினிமா கலைஞர்கள் போட்டிருந்தால் தேசிய விருது கிடைத்திருக்கும்.அதை படமெடுக்க வேண்டி சில
தயாரிப்பாளர்களை நான் அணுகியும் பயனில்லை.