Thursday, July 10, 2008

புள்ளிவிவரத்துடன் விஜய்காந்த் பேச்சு

கழிவறை போய் திரும்பும்போதும்,வெளியில் போய் வீடு திரும்பும்போதும் கைகளை தண்ணீரால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் தொற்று நோய்களான வாந்தி,பேதி,காலரா,நிமோனியா போன்றவை ஏற்படும்.
இன்று கலைஞர் ஆட்சியில்..53% தான் ஒழுங்காக கை கழுவுகின்றனர்.அதிலும் உணவளிக்கும் முன் 30% தான்
கை கழுவுகின்றனர்.மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கை கழுவுவோர் எண்ணிக்கை குறைவு.இந்த சதவிகிதத்தை
அதிகரிக்க முதல்வர் என்ன செய்தார்?
இந்தியாவில் 18லட்சம் பேருக்கு வாந்தி பேதி ஏற்படுகிறது.இதில் 90%குழந்தைகள்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்
45% பாதிப்புகள் குறையும்.
இந்த முக்கிய பிரச்னையை விட்டு விட்டு..கலைஞர் என் கல்யாண மண்டபத்தை இடித்தார்.எனது கல்லூரியில் புறம்போக்கு நிலம்
எவ்வளவு சதவிகிதம் என்று பார்க்கிறார்.புதுச்சேரியில் உள்ள எனக்கு சம்பந்தமில்லாத..என் மனைவியின் சகோதரியின் மருத்துவ கல்லூரி
பற்றி பொன்முடியை தூண்டிவிட்டு..அது என்னுடயது என்று பேசச்சொல்லுகிறார்.
இதையெல்லாம் என் சொல்கிறேன் என்றால் மக்களில் 100% உண்மையை உணர வேண்டும் என்றுதான்.
இப்படி விஜய்காந்த் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
(உபரி செய்தி..புள்ளிவிவரங்கள் தினமலர் கொடுத்தது..விஜய்காந்த் பேச்சு ஹி...ஹி...நம்ம கைங்கர்யம்)

2 comments:

கோவி.கண்ணன் said...

மிக்ஸிங் நன்றாக வந்திருக்கு, பாராட்டுக்கள்.

அரசியல் வாதிகள் வாயைக் கழுவுவது பற்றியும் பேசினால் நன்றாக இருக்கும்.
:)

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோவி சார்