1.எங்க தொகுதி M.L.A. இதுவரைக்கும் அசெம்பளிலே 40தடவை எழுந்து..
தொகுதி பற்றி பேசியிருக்கிறாரா?
இல்லை..அவிழ்ந்து போன வேட்டியை கட்டிக்கிட்டு இருக்கார்.
2.கோயிலுக்கு போறவங்க எல்லாம்..பொய் சொல்றவங்களாக இருப்பாங்க..
எப்படி சொல்ற.
'மெய்' மறந்து தானே சாமியை கும்பிடுவாங்க
3.
4.தலைவரோட கூட்டத்தில என்ன கலாட்டா?
மேடைக்கு வந்த கிழவியை எப்பவும் அணைச்சுக்கிற மாதிரி தலைவர் அணைச்சுக்கிட்டாராம்..ஆனா அது கிழவி
இல்லையாம்..மேக்கப் இல்லாமல் வந்த நடிகை பூஜாவாம்.
5.ஆஃபீஸ்ல கடைசி சீட்ல உட்கார்ந்துண்டு ஃபைல் பார்த்துக்கிட்டிருப்பாரே...அவரை ஆஸ்பத்திரில அட்மிட்
பண்ணியிருக்காங்களாம்..
என்ன உடம்பாம்
ஃபைல்ஸாம்
6.போன மாசத்துக்கு இந்த மாசம் எல்லாமே ஏறியிருக்கு..எதுலயும் இறக்கம் இல்லை
நம்ம பையனோட ப்ரொக்ரஸ் ரிபோர்ட் ல இறக்கம் இருக்கே..
3 comments:
எல்லாமே ரசித்து சிரிக்கும்படி இருந்தாலும்,
//ஒரு விதவையைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான்//
இதைத் தவிர்த்திருக்கலாம்.
வெண்பூ..உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்தான்.. எனக்கும் அது சரியில்லை என்று தோன்றியது.
அதனால் பதிவிலிருந்து அந்த ஜோக்கை நீக்கி விட்டேன்.
நன்றி
//அதனால் பதிவிலிருந்து அந்த ஜோக்கை நீக்கி விட்டேன்.//
மிக்க நன்றி காஞ்சனா...
Post a Comment