Wednesday, July 30, 2008

கன்னட திரைப்பட வர்த்தகசபைக்கு ரஜினி பக்தன் ஒருவன் கடிதம்

செயலாளர் அவர்களுக்கு,
ரஜினிகாந்த் ரசிகன் என்ற முறையில் இந்த வேண்டுகோள் கடிதம்.எனக்கு கன்னடம் தெரியாததால் தமிழில் எழுதுகிறேன்.
ரஜினி அவர்கள் ஒகேனக்கல் விவகாரத்தில் ..உதைக்க வேண்டாமா..என்று பேசியதெல்லாம் 'ஒளவாக்கட்டைக்கு"
தண்ணீருக்கு அழும் தமிழனுக்கு..வேடிக்கைக்காட்டி அவன் அழுகையை நிறுத்துவதற்கு.அதனால் அவரை தவறாக எண்ணக்கூடாது.
அவர் முன்னதாக..அம்மாவுக்கு(!!)ஓட்டுப் போட்டால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..என்று
கூறிவிட்டு..அடுத்த தேர்தலில் அம்மாவுக்கு ஓட்டுப்போட்டுவிட்டு..தன் இரு விரல்களை உயர்த்திக் காட்டியவர்.
காவேரி பிரச்னையில் சக திரைப்படத் துறையுடனருடன் சேராது தனியாக உண்ணாவிரதம் இருந்து தனது ஆதரவை(!)தெரிவித்ததோடு
அதற்கு ஒரு கோடி நன்கொடை தருவதாக தெரிவித்தவர்.
சிவாஜி படத்தில்..தான் அமெரிக்காவில் சம்பாதித்து கொணர்ந்த 200 கோடியை படிப்புக்கு செலவழிக்க..பொறியியல் கல்லூரியும்,மருத்துவக்கல்லூரியும்
கட்டுவதாகக்கூறியவர்..அவர் சம்பந்தப்பட்ட (மனைவியின்)பள்ளியில் இலவசமாக மாணவர்களை செர்த்துக்கொள்ளாதவர்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..அவர் சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..அதனால் அவர் அன்று 'உதைக்கலாம்"என்று பேசியதற்கு
எதிர்மறையான அர்த்ததை கன்னடர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.உங்களுக்கு இப்போது அவர் இயல்பு தெரிந்திருக்கும்.
எப்பாடுபட்டாவது குசேலன் படம் அங்கு வெளியாகவேண்டும் என்ற அவர் நல்ல எண்ணத்தை புரிந்துக் கொண்டு ஆதரவு தாருங்கள்.
இந்த வேளையில்..தமிழனான எங்களைப் பாருங்கள்..150,200 என்றெல்லாம் பட்ஜெட்டை மீறி செலவு பண்ணி படம்
பார்க்கவும்..அவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவும் தயாராகிவருகிறோம்.
தயவு செய்து..எங்கள் சூப்பர் ஸ்டாரின் இயல்பை புரிந்துக் கொள்ளுங்கள்.
நன்றி
இப்படிக்கு
அப்பாவி தமிழ் ரசிகன்

12 comments:

மகேஸ்வரன் S said...

:)

ஷெபின் said...

Too good!!!

Kanchana Radhakrishnan and T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி..மஹேஷ்வரன்

Kanchana Radhakrishnan and T.V.Radhakrishnan said...

நன்றி ஷெஃபின்

ச்சின்னப் பையன் said...

ஹாஹா. போட்டுத் தாக்குங்க....:-)))

அப்போ இமயமலைக்குப் போறென்னுட்டு பரங்கிமலையிலேயே தங்கிடுவாரா... அவ்வ்வ்வ்....

Kanchana Radhakrishnan and T.V.Radhakrishnan said...

யார் கண்டது?செய்தாலும் செய்வார்,,ஆனால் பரங்கிமலை போகமாட்டார்..நந்தி ஹில்ஸ் போவார்


நன்றி ச்சின்னப்பையன்

Anonymous said...

//தான் அமெரிக்காவில் சம்பாதித்து கொணர்ந்த 200 கோடியை படிப்புக்கு செலவழிக்க..பொறியியல் கல்லூரியும்,மருத்துவக்கல்லூரியும்
கட்டுவதாகக்கூறியவர்..அவர் சம்பந்தப்பட்ட (மனைவியின்)பள்ளியில் இலவசமாக மாணவர்களை செர்த்துக்கொள்ளாதவர்.//
இதை அவர் விசிறிகள் யோசிப்பரா?

kanchana Radhakrishnan said...

ரசிகர்களைத்தான் அப்பாவி என்று கூறிவிட்டேனே அனானி

ராஜ நடராஜன் said...

இன்னுமொரு ரஜனி வறுவல் சாப்பிட்டேன்.

நான் எங்க போனாலும் ச்சின்னப்பையன் எனக்கு முன்னால போட்டுத்தாக்கிகிட்டு இருக்காரு. இதைதான் கோ)இன்சிடன்ஸ் ன்னு சொல்றதா:)

kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

கோவி.கண்ணன் said...

//அவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவும் தயாராகிவருகிறோம்.
//

நான் கூட 10 லிட்டர் பாலுக்கு சொல்லி வச்சிருக்கேன்.

:)

kanchana Radhakrishnan said...

இவ்வளவு நேரம் அபிஷேகம் முடிஞ்சிருக்கணுமே..கோவி சார்