அமெரிக்காவில் மேல் படிப்புக்கு சென்று ...அங்கேயே வேலையும் கிடைத்து தங்கியிருக்கும் தன் மகன்/மகளுக்கு
ஒரு அன்னையின் கடிதம்.
அன்பு மகனுக்கு/மகளுக்கு
அம்மா அனேக ஆசிர்வாதத்துடன் எழுதிக்கொண்டது
இந்த காலத்துக் குழந்தையான உனக்கு அம்மா நான் சொல்லித் தெரிய வேண்டியது எதுவுமில்லை.உன் வயதில்
எங்களுக்கு தெரிந்த விஷயங்களை விட அதிகமாக உனக்கு இன்று தெரியும்.நாற்பது,ஐம்பது மதிப்பெண்கள்
பெற்று பள்ளிப்படிப்பில் கற்று தேறியவர்கள் நாங்கள்.ஆனால் இப்போதோகீழே போடப்படும் மதிப்பெண்களைவிட
மேேல் போடப்படும்மதிப்பெண்கள் அதிகரித்து விடுமோ(120/100)என்ற அளவில் படித்துத்தேறி ...ஓய்வு பெறும்
வயதில் கூட எட்டமுடியாத உன் அப்பாவின் சம்பளத்தை ஆரம்ப நிலையிலேயே 'சூப்பர்சீட்' பண்ணியவன் நீ.
கம்ப்யூட்டர் துறையில் உலக நாடுகளுடன் போட்டியிட...இல்லை...இல்லை...அந்த துறைக்கே சவால் விடும் அளவுக்கு அறிவை பெற்றவர்கள் இந்தியர்கள். ஆனால் உங்களை ஒரு இஞ்சினீயராகவோ,மென் பொருள் துறை
வல்லுனராகவோ உருவாக்க இந்திய அரசும் ஒரு கணிசமான தொகையை உங்களை நம்பி முதலீடு செய்கிறது அல்லவா?
கற்றுத்தேர்ந்ததும் உங்கள் செயல்திறனை இங்கே முதலீடு செய்ய வேண்டும்.உங்கள் கண்டுபிடிப்புகள் இங்குதான்
ஆரம்பிக்க வேண்டும்.ஆனாலும் பல காரணங்களுக்காக உன்னைப்போன்றோர் மேல் நாடுகளுக்கு படிக்க செல்கிறிர்கள்.அங்கேயே வேலைக்கும் சேர்கிறீர்கள்.
அப்படிப்பட்ட நிலை இன்று தவிர்க்கப்பட முடியாத ஒன்று.ஆனால் உங்களுக்கு படிப்பை தந்த நாட்டிற்கு உங்களால்
அந்நியச்செலவாணியை ஈட்டித்தரமுடியும்.ஆதலால் உங்கள் முதலீடுகள் இங்கேயே இருக்கட்டும்.உங்களைப்போன்றோரால்... இன்று இந்தியரை உலகளவில் மதிக்கின்றனர்.
இயற்கை சீற்றங்களான புயல்,மழை,சுனாமி வரும் நேரங்களில்...பாதிக்கப்பட்டவர்களுக்கு... கணிசமான நன்கொடைகளை நீங்கள்தான் தந்து இருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று.
கடைசியில் தாய் என்ற முறையில் உன் போன்றவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன்.
உங்களுக்கு சரியான உடலுழைப்பு இல்லை.ரத்தக்கொதிப்பு,சர்க்கரை என சிறு வயதிலேயே அவதிப்படுகிறீர்கள்.
இனியேனும் தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய்யுங்கள்.சரியான உணவை உட்கொள்ளுங்கள்.
உணவு பொருட்களை வாங்கும்போதே அதில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு இருக்கிறது,சோடியம் இருக்கிரது,கால்ஷியம் இருக்கிறது என பார்த்து பார்த்து வாங்காதீர்கள்.சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதமுடியும்.
இது நீங்கள் சாப்பிட வேண்டிய வயது.கல்லைத்தின்றாலும் ஜீரணம் ஆக வேண்டிய வயது.நீங்கள் சாப்பிடுவது
போதவே போதாது.அதுதான் என்னைப் போன்ற தாய் களின் ஏக்கம்.
உங்களுக்கெல்லாம் எங்களைவிடத்தெரியும் என்பது உண்மைதான்..ஆனால் அது உணவு விஷயத்தில் அல்ல என்ற எண்ணமே இந்த கடிதம்.
அன்பு அம்மா.
11 comments:
மீ த பஷ்டு!!!
நல்லா சாப்பிடு, உடற்பயிற்சி பண்னுன்றாங்க அம்மா. நல்ல அறிவுரைதான்.... நல்ல கடிதம்...
படிக்கற NRI களுக்கெல்லாம் அவங்க அம்மா எழுதின கடிதம் மாதிரியே இது இருக்கும்றது நிச்சயம் (எனக்கு அப்படித்தான்....)...
நன்றி..நன்றி..நன்றி..
ச்சின்னப்பையன்
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் அம்மா :))
நன்றி சதங்கா
// இது நீங்கள் சாப்பிட வேண்டிய வயது.கல்லைத்தின்றாலும் ஜீரணம் ஆக வேண்டிய வயது.நீங்கள் சாப்பிடுவது
போதவே போதாது.//
மக்களே காதுல விழுதா?
ஊதும் சங்கை ஊதி விடுவோம்..அதுதான் நம்மால் முடிந்தது raaja nataraajan
ஒரு நல்ல சமூக பொறுப்புள்ள அம்மா எழுதி இருப்பது போல இருக்கிறது. :)
வருகைக்கு நன்றி கயல்விழி
அருமை.
Post a Comment