Thursday, July 24, 2008

பத்தை விட ஒன்பது பெரியது என்கிறார் சுப்பு தாத்தா

நவராத்தியையும்,தசாவதாரத்தையும் அடுத்து அடுத்து சமீபத்தில் பார்த்தாராம் சுப்பு தாத்தா.
அவர் கூறிய கருத்துக்கள்.
சமீபத்தில் 1964ல் வந்த சிவாஜியின் 100வது படம் நவராத்திரி.இதில் ஒன்பது மாறுபட்ட வேடங்க்களில்
சிவாஜி நடித்திருக்கிறார்.ஒரே வேடத்தில் நடித்திருந்தாலும் சாவித்திரி 9 மாறுபட்ட உணர்ச்சிகளை
வெளிப்படுத்தி சிவாஜிக்கு இணையாக நடித்திருப்பார்.சிவாஜி..கதாநாயகனாகவும்,அற்புதராஜ் என்ற
மனைவியை இழந்து ஒரு குழந்தையுடன் வசித்துவருபவராகவும்,குடிகாரனாகவும்,வயதான மனநல
மருத்துவராகவும்,கொலைகாரனாகவும்,கிராமத்து அப்பாவியாகவும்,குஷ்டரோகியாகவும்,கூத்துக்கலைஞனாகவும்,
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும் வருவார்.எந்த வெளிநாட்டு மேக்கப்காரனையும் நம்பாமல்..சாதாரண மேக்கப்புடன்
ஒவ்வொரு பாத்திரத்திலும் வந்து நடிப்பில் நவரசத்தையும் கொட்டி வேறுபாடுகளைக் காட்டி இருப்பார்.

ஆனால்..தசாவதாரமோ..நடிப்பைவிட ஒப்பனைக்கு முக்கியத்துவம் கொ டுக்கப்பட்டிருந்தது.சில பாத்திரங்கள்
ஒப்பனை..சப்பாத்திமாவை ஒட்ட வைத்ததுபோல இருந்தது. கஷ்டப்பட்டு மணிக்கணக்கில் ஒவ்வொரு பாத்திர மேக்கப்பும்
போடப்பட்டதாம்(?!)கமல் என்பதற்காக ஒப்புக்கு ஓகோ என பாராட்டுபவர்களை கமல் நம்பக்கூடாது.மனதைத்
தொட்டு அவர் தனியாக அமர்ந்து..தனிப்பட்ட சாதனை இதில் என்ன என்று யோசிக்கவேண்டும்.
சாவித்திரி ஒன்பது இரவுகளும் நடிப்போடு ஓடிக்கொண்டிருந்தார்..ஆனால் அசின்.. எதற்கு வீணாக
மலையையும், மடுவையும் ஒப்பிட வேண்டும்.
மொத்தத்தில்..நவராத்திரியின் அருகில் கூட தசாவதாரம் வர முடியாது.திரைக்கதையில் வேறு பல ஓட்டைகள்தசாவதாரத்தில்.
ஆகவே என்னைப் பொறுத்தவரை 10ஐ விட 9 பெரியது என்றார் சுப்பு தாத்தா.
எச்சுமிபாட்டியோ தன் பங்குக்கு சிவாஜி நவராத்திரியில் டாக்டராக வருவாரே..அந்த பாத்திரமும்..சாவித்திரியின்
பைத்திய நடிப்பையும் லேசில் மறக்க முடியுமா?என்றார்.

6 comments:

சகாதேவன் said...

அதாகப் பட்டது, "தங்கச் சரிகை சேலை எங்கும் பளபளக்க" என்று சாவித்திரி, சாவித்திரியாகவே கூத்தில் நடிப்பாரே, அருமையான நடிப்பு.
எனக்கும் நவராத்திரி ரொம்ப பிடிக்கும். சுப்பு தாத்தாவிடம் சொல்லுங்கள்
என்னுடைய தசாவதாரம் விமர்சனத்தையும் படியுங்களேன்.
சகாதேவன்

Kanchana Radhakrishnan said...

தாத்தா ஏற்கனவே படித்து விட்டாராம்.பாராட்டுகள் சொல்லச் சொன்னார்.
தசாவதாரத்தோடு கமலின் வேட்டையாடு விளையாடு நல்ல படமாம்.சொல்லச்சொன்னார்.

rapp said...

//"தங்கச் சரிகை சேலை எங்கும் பளபளக்க" என்று சாவித்திரி, சாவித்திரியாகவே கூத்தில் நடிப்பாரே, அருமையான நடிப்பு.
எனக்கும் நவராத்திரி ரொம்ப பிடிக்கும்//
ரிப்பீட்டு

சின்னப் பையன் said...

ஒத்துக்கறேன்... நீங்க சொல்றதை ஒத்துக்கறேன்..

அப்புறம் வரேன்...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி rapp

Kanchana Radhakrishnan said...

ஹா..ஹா..ஹா..
எப்பவும் என்பதிவுகளுக்கு :-) என்று பின்னூட்டமிடும் ச்சின்னப்பையன்
இரண்டு வரி எழுதிவிட்டார். நன்றி ச்சின்னப்பையன்