(தமிழ் பத்திரிகைகளில் கேள்வி-பதில் பகுதி..வலைப்பூவில் இப்போது டோண்டு சாரின் கேள்வி பதில்.
நாமும் அப்படி ஒரு பதிவு போட்டால் என்ன? என்ற ஆசை.ஆனால் நம்மை யாரும் கேள்விகள் கேட்கப்போவதில்லை.
அதனால்தான் கேள்வியும் நானே- பதிலும் நானே என்ற இப்பதிவு.)
1.இன்னிக்கு செத்தால் Naalaikkup Paal இது பற்றி...?
நீங்கள் சொல்வது அந்தக்காலம். இப்போதெல்லாம் எரிவாயு சுடுகாடானால் இன்னிக்கு செத்தா..இன்னிக்கே பால்.
2.சிலர் தானே கேள்விகள் கேட்டு..தானே பதில் சொல்வது பற்றி?
அது பற்றி எனக்குத்தெரியாது.ஆனால் என்னிடம் நிறைய பதில்கள் இருக்கிறது.அதற்கான கேள்விகள் தான் யாரும் கேட்கமாட்டார்களா என்ற ஆசை.
3.பத்திரிகைகளில் வரும் ராசிபலனை நம்புவது உண்டா?
நம்பிக்கை இல்லை.அது உண்மையெனில் நாட்டில் 12ல் ஒருவருக்கு பலன்கள் ஒன்றாக இருக்கும்.வாகனம் வாங்கு
வீர்கள் என ஒரு ராசிக்கு பலன் சொன்னால்..நாட்டில் 100கோடியில் கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் அன்று வாகனங்கள் வாங்கினால் என்னாவது.
(ஒரு உபரி செய்தி- கண்ணதாசன் தன் பெயரில் ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்.அதில் ராசிபலன் போடுவதுண்டு.ஒரு மாதம் உரிய நேரத்தில் ஜோதிடர் அனுப்பவில்லையாம்.பத்திரிகையோ அச்சுக்கு போக
வேண்டிய நேரம்.பார்த்தார் கண்ணதாசன்..பழைய நாலு இதழ்களை கொண்டு வரச்சொன்னார். அவற்றில் வந்திருந்த
பலன்களை ராசிகளுக்கு மாற்றி மாற்றி போட்டு பத்திரிகையை அச்சுக்கு அனுப்பினாராம்.)
4.உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்களே வருவதில்லையே..ஏன்?
சினிமா நடிக,நடிகை களுக்கு மட்டுமல்ல..இணைய பதிவாளர்களுக்கும் ரசிகர்களோ அல்லது அவர்களை தெரிந்துவைத்துள்ள மற்றைய பதிவாளர்கள் ஆதரவோ வேண்டும்.அதுஇல்லாவிட்டால் சிறந்த குணசித்திர நடிகராக இருந்தும் புகழ் பெறாத s.v.சுப்பையா கதிதான் நமக்கும்.
5.இப்பொழுதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா தமிழ் படங்களும் 100 நாட்கள் ஓடுவது போல இருக்கிறதே?
சென்னையில் கோபிகிருஷ்ணா என்று ஒரு தியேட்டர்.100days ஓடும் படங்கள் அதிகம் இங்கு தான் ஓடுகின்றன.அதுவும் 3ஆவதோ4ஆவதோ ரன்..அதுவும் தினசரி ஒருகாட்சி.
14 comments:
ரொம்ப நல்லாருக்குங்க உங்க கேள்வியும் பதிலும். ஆனா நானெல்லாம் உங்க பக்கத்தை படிக்கும் போதெல்லாம் பின்னூட்டம் போடறேங்க, இப்படி சொல்லிட்டீங்களே.
கண்ணதாசன் மட்டுமில்லை, குஷ்வந்த் சிங்கும் இப்படித்தான் செய்திருக்காராம், அதுவும் பல தடவை.
ஆஹா எனக்கு அந்தத் தியேட்டர் பத்தி ஒன்னுமே தெரியாததால நான் எஸ்கேப்
இன்னும் கொஞ்சம் நீட்டி முழக்கியிருக்கலாம். கேள்வி, பதில்கள் அருமை.
பின்னூட்டம் வரலைன்னு எல்லாம் வொர்ரி பண்ணாதீங்க நான் 20 பதிவு போட்டதுக்கப்புறம்தான் பின்னூட்டம் வர ஆரம்பிச்சது. இப்பல்லாம் ஆவரேஜா 30+ பின்னூட்டம்.
தொடர்ந்து பல்சுவையா எழுதுங்க.
ஹலோ, ஹலோ... வெறும் :-)) ஆனாலும், நான் நிறைய பின்னூட்டங்கள் போட்டிருக்கேன் உங்களுக்கு.
யாரது அரசியலுக்கு ஒரு கலைஞர் என்றால் வலைபதிவுக்கு நீங்களா?
கலைஞருக்கு போட்டியாக நீங்களா?
( வலைபதிவில் கேள்வி பதில் எழுதும் சிலர், தாங்களாகவே கேள்விகள் கேட்டுப் பதில் அளிப்பதாக வரும் செய்திகள் எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் முயற்சி , சிறப்பானது.)
போட்டு வாங்கறது கேள்விபட்டிருப்பீங்களே ராப்..அதுபோல இதுதான் பின்னூட்டம் கேட்டு வாங்கிறது.தொடர்ந்து என் பதிவுகளை படிக்கும் உங்களுக்கு நன்றி
சிவா..உங்கள் பதிவுகள்,பின்னுட்டங்கள் எல்லாம் தொடர்ந்து படிக்கிறேன்.எனக்கு ஒரு விஷயத்தை கூறுங்களேன்..உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது?
நான் உங்களை சொல்வேனா..ச்சின்னப்பையன்..:-)))
வருகைக்கு நன்றி பால்ராஜ்
/
Kanchana Radhakrishnan said...
சிவா..உங்கள் பதிவுகள்,பின்னுட்டங்கள் எல்லாம் தொடர்ந்து படிக்கிறேன்.எனக்கு ஒரு விஷயத்தை கூறுங்களேன்..உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது?
/
கம்பேனி ரகசியத்தை கேக்குறீங்களே நியாயமா???
கம்பேனி ரகசியம்....ஓஹோஹோ...புரிந்துக்கொண்டேன்
/
Kanchana Radhakrishnan said...
கம்பேனி ரகசியம்....ஓஹோஹோ...புரிந்துக்கொண்டேன
/
க.க.க. போ
:))))))
கருத்துக்களை கச்சிதமாக பிடித்துக்கொண்டீர்கள் போங்க :)
Post a Comment