1.தலைவர் இன்னிக்கு கூட்டத்திலே வாரிசு அரசியலை எதிர்த்து பேசப்போறாராம்
யார் தலைமை? யார் முன்னிலை?
அவர் மச்சான் தலைமையிலே..மாமா முன்னிலையிலே..மகன் வரவேற்புரை வழங்கியதும்.
2.எங்க தலைவர் எப்போதும் கைகளுக்கு கிளவ்ஸ் போட்டுட்டுத்தான் இருப்பார்
ஏன்?
தன் கை சுத்தம்ன்னு சிம்பாலிக்கா சொல்றாராம்.
3.போன மாசம் என் கிட்ட 100 ரூபாய் கடன் வாங்கினியே..மறந்துட்டியா?
சேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு..அதுக்குள்ள மறந்துடுவேனா?
4.நூறு ரூபாய் இருந்தா கை மாத்தா கொடேன்..
கொடேன்..கொடேன்..
5.என்னது..ஆவியை நீ பார்த்திருக்கியா? எப்போது?
இட்லி வேகும்போது..பிரஷர் குக்கர்ல வெயிட் போடும்பொது..தண்ணீர் கொதிக்கிறப்போது
இப்படி பல தடவை பார்த்திருக்கேன்.
6.குறவர்கள் கிட்ட ஓட்டு கேட்கப்போன தலைவர்..அவர்களது மூதாதையர் தமிழுக்கு செய்த
சேவைக்கு பாராட்டு தெரிவித்தாராமே!
சமயக்குரவர்கள் என்பதை..இவர்கள் தான் என நினைத்து விட்டார்.
4 comments:
:-))))
வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன் அவர்களே
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்....
//போன மாசம் என் கிட்ட 100 ரூபாய் கடன் வாங்கினியே..மறந்துட்டியா?
சேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு..அதுக்குள்ள மறந்துடுவேனா?
4.நூறு ரூபாய் இருந்தா கை மாத்தா கொடேன்..
கொடேன்..கொடேன்..//
நல்ல இயல்பான நகைச்சுவைகள்..(அனுபவம் பேசுகிறதோ..?)
கடன் கொடுத்த அனுபவம் தான்..வாங்கிய அனுபவம் இல்லை.
முதலில் உங்களிடம் முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது.
வருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை
Post a Comment