பாரதரத்னா பற்றி இந்த ஆண்டு அதிகம் பேச்சு இருந்தது.
ஒரு நடிகன் தன் நடிப்பு தொழிலை செய்ய ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் .அதிலே ஒரு பகுதி கறுப்புப்பணம் .ஆனாலும் அவங்களுக்கு பத்மஸ்ரீ பத்மபூஷன் போன்ற நேஷனல் விருது.
ஒரு விளையாட்டு வீரர் தன் விளையாட்டு மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் .அதைத்தவிர
விளம்பரங்களிலே நடிச்சு ப்பணம் .அவங்களுக்கும் பத்மஸ்ரீ ,பத்மபூஷன் போல விருது கொடுக்கப்படுகிறது.ஆனால் ஆசிரியர் தொழிலில் உள்ளவங்களுக்கு ஏன் இது போல விருது கொடுப்பதில்லை?
இந்த சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு .பாரதரத்னா ...
அது நம் நாட்டின் உன்னத உயரிய தேசிய விருது .அது இதுவரைக்கும் எத்தனைப்பேருக்கு கொடுத்திருக்காங்க?
எம் எஸ் .,காமராஜ் ,சி எஸ் .,டாக்டர் அம்பேத்கர் .,எம் ஜி ஆர் .,அப்துல் கலாம் போல சில அவுட் ஸ்டாண்டிங் பெர்சொனாளிட்டிகளுக்கு மட்டும் தான் .
ஆசிரியர்கள் லே இப்படி அவுட் ஸ்டாண்டிங் பெர்சொனளிட்டி ன்னு யாரை சொல்ல முடியும்? எல்லோருமே அவுட் ஸ்டாண்டிங் தான்.
இந்த ஆசிரியர்கள் உருவாக்கும் விஞ்ஞானிகள் எத்த்தனைப்பேர் .,சாபிட் வேர் என்ஜீநீர்கள் எத்தனைப்பேர் ஐ எ இஸ் .,ஐ பி எஸ் அதிகாரிகள் எத்தனைப்பேர் .,
இப்படி அனைவரையும் உருவாக்கும் ஆசிரியர் களில் யாரை பாகுப்பாடு படுத்தி இவர் உயர்ந்தவர்,இவர் தாழ்ந்தவர்னு சொல்லமுடியும்?
ஆசிரியர்கள் அனைவரும் பாரதரத்னா க்கள் தான் .
அதனால்தான் அது போன்ற நேசனல் விருதுகள் அவர்களுக்கு வழங்க ப்படுவதில்லை என நினைக்கிறேன் .
11 comments:
super :):):)
//இப்படி அனைவரையும் உருவாக்கும் ஆசிரியர் களில் யாரை பாகுப்பாடு படுத்தி இவர் உயர்ந்தவர்,இவர் தாழ்ந்தவர்னு சொல்லமுடியும்?//
கண்டிப்பா சொல்லமுடியாது.
அதுக்காக, கார் வாங்கினால் இறக்குமதி வரிகூட கட்டாமல் ஏய்க்கும் ஆட்களுக்கு இந்த விருதுகள் வழங்கத்தான் வேண்டுமா?... இதையெல்லாம் யார் கேட்பது....:-(((
வருகைக்கு நன்றி ராப்
இந்த பதிவின் செய்தியை மைய கருவாக வைத்து என் கதை,வசனம்,இயக்கத்தில் எனது சௌம்யா நாடகக் குழுவினர்
2005 ல் நாடகத்தை மேடையேற்றினோம்.இந்நாடகம் அவ்வாண்டின் சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப் பட்டது.
மேலும் 'இலக்கியசிந்தனை' அவ்வாண்டின் சிறந்த நூலுக்கான விருதையும் எனக்கு வழங்கியது.வானதி பதிப்பகம்
நூலாக வெளியிட்டுள்ளது.
ச்சின்னப்பையன்..உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் கிடைத்துவிட்டதா?
வருகைக்கு நன்றி
ஓ. ஓகே. இப்போத்தான் கூகுளிட்டு அங்கங்கே நீங்கள் போட்ட பின்னூட்டங்களைப் படித்து தெரிந்து கொண்டேன்.
வாழ்த்துக்கள்.
ஒரு தாயின் மனத்தைப் புரிந்துக்கொண்டு அழகாக எழுதி இருக்கிறீர்கள்.பாராட்டுகள்
மாதா,பிதா,குரு,தெய்வம்.
குருவே சரணம்
குரு பார்க்க கோடி நன்மை
குருத் துரோகம் குல நாசம்
இப்போ
குருவெல்லாம் பாரத் ரதனா
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
அனானியாய் பின்னூட்டம் இடுகிறீர்கள் சரி..ஆனால் என்னுடைய வேறு ஒரு பதிவிற்கு போட நினைத்திருந்த பின்னூட்டம் இது என நினைக்கிறேன்.அதை சரியாய் பார்த்திருக்க லாம்.
எப்படியோ ..என் பதிவுகளை விடாமல் படிக்கும் உங்களுக்கு நன்றி
வருகைக்கு நன்றி கோவை விஜய்
// பாரதரத்னா ...
அது நம் நாட்டின் உன்னத உயரிய தேசிய விருது .அது இதுவரைக்கும் எத்தனைப்பேருக்கு கொடுத்திருக்காங்க?
எம் எஸ் .,காமராஜ் ,சி எஸ் .,டாக்டர் அம்பேத்கர் .,எம் ஜி ஆர் .,அப்துல் கலாம் போல சில அவுட் ஸ்டாண்டிங் பெர்சொனாளிட்டிகளுக்கு மட்டும் தான் . //
டாக்டர் ராதாகிருஷ்ணனையும் இதற்குள் இணைத்துக்கொள்ளலாமே.
ஆசிரியர்கள் இதுவரை ஏணிகளாவே....
டாக்டர் ராதாகிருஷ்ணனையும் சேர்த்திருக்கலாம்.உடன் சில குதர்க்கவாதிகள் அவர் ஒரு ஆசிரியராய் இருந்தவர்தானே என பதிவின் விவிரம் புரியாமல் பேசுவார்களே என்றுதான் ஸேர்க்கவில்லை
Post a Comment