Sunday, July 6, 2008

பொதுத்தொண்டும்..பண விவகாரமும்

பொதுத்தொண்டு செய்யப் புறப்படுபவர்கள் பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நல்ல ஆதரவு நம் காரியத்துக்கு கிடைத்தாலும் அதனால் over enthusiastic ஆகி நிறைய பணம் collect
பண்ண ஆரம்பிக்கக் கூடாது.இப்படி ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது.இதனாலே, உதவும் அன்பு
எண்ணத்தை 'வசூல் எண்ணம்' முழுங்கிவிடும்.எப்போது பார்த்தாலும் ரசீதும்..கையுமாக அலைவதும்,பேப்பர்காரர்களைப்
பிடித்து அப்பீல் பன்னலாமா...அட்வெர்டைஸ்மென்ட் பிடித்து ஸோவனீர் போடலாமா..என்பதே சிந்தையாகத்
தவித்துக் கொண்டிருக்கும்படியும் ஆகும்.நிறைய பணம் சேர்த்து அதைக் கையாள வேண்டியிருக்கும் போது, நாமே எப்படி
மாறிப்போய் விடுவோமோ என்ற பயம் எப்போதும் இருக்க வேண்டும்.அதுவுமில்லாமல் ரொம்பவும் பணம் சேர்த்தால் ஊரிலிருப்போருக்கும்
அது சரியாகப் பிரயோஜனமாகிறதா என்ற சந்தேகம் எழும்பும்.இதோடு கூட..சற்று முன் சொன்னபடி ,இஷ்டமில்லாதவனையும்
நிர்பந்தப்படுத்தி வாங்குவதும்..இப்படி வாங்கிவிட்டால் அவனிடம் பந்தப்பட்டு நிற்பதும்..நம் பணியையே அசுத்தம் செய்துவிடும்.
ஆதலால்..எந்த நல்லக்காரியமானாலும் 'அதி'யாக அதைக் கொண்டு போய் விடாமல்..அவசியத்தோடு நிறுத்திக் கொண்டு
சிக்கனமாகவே அதற்கான வரவு செலவுகளை நிர்வகிக்கவேண்டும்.
பொதுத்தொண்டுக்கு மூல பலம் பணம் இல்லை..ஐக்கியப்பட்ட மனம்தான் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.

(மகா பெரியவர்)

இப்படிச் சொன்னவர் யார்? கண்டுபிடித்து பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம்..

4 comments:

Anonymous said...

தெரியலயே.

நமக்கு கோஷ்டி பூசல்தான் பண்ணத் தெரியும்.

Kanchana Radhakrishnan said...

சொன்னது யாருங்கிறது முக்கியமில்லைங்க..இப்படிப்போட்டாலாவது யாராவது 4 பேர் பின்னூட்டமிடமாட்டாங்களான்னு ஒரு ஆசைதான்.
நீங்க மட்டும் தான் நான் நினைச்சப்படி நடந்துக்கிட்டீங்க.நன்றி.

யாத்ரீகன் said...

who said this ?

Kanchana Radhakrishnan said...

பரமாச்சார்யா ஜகத்குரு சந்திரசேகர ஸ்வாமிகள்