Monday, July 21, 2008

கலைஞர் எந்த பேரனைச் சொன்னார்

பேரன்களை வாழ்த்துவதே ஆபத்து என்று கலைஞர் பேசியுள்ளார்.அவரது பேரனும்..மு.க.முத்துவின் மகனுமானவனைப்
பற்றி பேசும்போது அவர் இதைக் கூறியுள்ளார்.ஆனால் அவர் யாரை மனசில் வைத்து அப்படிக் கூறினார் என்பது
அனைவருக்கும் தெரிந்ததே.அவர் மனசில் இருந்த பேரன்களின் தந்தை முரசொலி மாறன் கடைசி வரை
கலைஞரின் வலது கையாக செயல் பட்டவர்.அவர் ஒரு கூட்டத்தில் பேசும்போது தி.மு.க.மந்திரிகளை
வாங்கு..வாங்கு..என வாங்கினார்.கலைஞர் கண்டுக்கொள்ளவில்லை.ஆனால் மாறனின் மகன்களோ கலைஞரின்
மகன் அழகிரிக்கு எதிராகச் சொன்னதால் தான் தகராறு.மாறன் சகோதரர்களைப் பொறுத்தவரை..அவர்கள் தந்தை
செய்ததைப் போலத்தான் செய்திருக்கிறார்கள்.
ஆனால் கலைஞர் வாழ்த்திய பேரனின் தந்தையும்..அவர் மகனுமான மு.க.முத்து தந்தைக்கு வேண்டாதவர்.
ஆனாலும் கலைஞரால் வாழ்த்தப்பட்டார்.ஒரு சந்தேகம்.
கலைஞர் ஒரு சமயம் குருவி படம் எடுத்த உதய நிதியை மனதில் நினைத்து இதை சொல்லியிருப்பாரோ?

4 comments:

Indian said...

Or the Madurai grand-son who got a mgmt quota seat in Anna University Comp.Sci course and now presiding Cricket and Kabaddi tournaments in Madurai?

Kanchana Radhakrishnan said...

என் கேள்வி..மகன்கள் ஹிமாலய தவறு செய்தாலும்..தவறில்லை.
ஆனால்..பத்திரிகை பரபரப்புக்காக பேரன்கள் மாறன் சகோதரர்கள் செய்தது தவறா?
இது..காலம்..காலமாக தி.மு.க.வில் இருந்துவரும் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது.
பொதுக்குழு..செயற்குழு என்று சொல்வதெல்லாம் மக்களை ஏமாற்ற என்றே எண்ணத் தொன்றுகிறது.

rapp said...

கலக்கல்ங்க, கண்டிப்பா குருவி படத்த பார்த்த எபெக்டாத் தான் இருக்கும்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி rapp