கலைஞரால் இப்படியும் சாதாரணமாக வசனம் எழுத முடியுமா?என ஆச்சர்யப் பட்டாராம் சுப்பு தாத்தா.
அவர் சமீபத்தில் பார்த்த படத்தை விமரிசிக்கிறார்.
சிவாஜி கதானாயகனாக வந்து...சரோஜாதேவி கதானாயகியாக நடித்து சமீபத்தில் வந்த 'இருவர் உள்ளம்'தான் அப்படம்.
எழுத்தாளர் லட்சுமி எழுதிய 'பெண்மனம்'நாவல் தான் படம்.கலைஞர் வசனம்.
சிவாஜி ஒரு ஜாலி பேர்வழி.பார்க்கும் பெண்களை எல்லாம் தன் வலையில் வீழ்த்தி விடுவார்.அவர் கண்களில்
ஒரு நாள்சரோஜாதேவி பட..விடுவாரா..மனுஷன்..அவரை உண்மையாகவே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
ஆனால்..அவரது குணம் பற்றி அறிந்த naayaki அவரை வெறுக்கிறாள்.'உன் மேல் உள்ள காதல்..என்னை மாற்றிவிட்டது'
என சிவாஜி கூறுவதை அவர் நம்ப மறுக்கிறார்.சந்தர்ப்பங்களும் அப்படியே அமைகின்றன.சரோஜாதேவி உடல் நலம் குன்றி
படுத்துள்ளபோது..சிவாஜி செய்யும் பணிவிடைகள்..நாயகியின் மனதை மாற்றுகிறது.சிவாஜி திருந்திவிட்டார் என்பதை
உணரவைக்கிறது.கடைசியில் எல்லாம் சுபமாக முடிகிறது.
இப்படத்தில்..M.R.ராதா,முத்துலட்சுமி ஜோடி நகைச்சுவையில் தியேட்டரையே அதிரவைக்கிறது.
'புத்திசிகாமணி பெற்ற பிள்ளையே'என அவர்கள் பாடும் போதும்..கோர்ட்டில் ராதா பேசும்போதும் எச்சுமி பாட்டியாலேயே சிரிப்பை
அடக்கமுடியவில்லையாம்.
மற்றபடி,'பறவைகள் பலவிதம்'நதி எங்கே போகிறது' 'அழகு சிரிக்கிறது' (இந்த படத்தில் உண்மையிலேயே அபிநயசரஸ்வதி கொள்ளை
அழகாக இருப்பாராம்..தாத்தா இதைச்சொல்லும் போது பாட்டி..முகவாயை தோள்பட்டையில் இடித்துக்கொள்கிறார்)'இதய வீணை தூங்கும்
போது' 'ஏன் அழுதாய்" என எல்லா பாட்டுகளும் ஹிட்டாம்.
படம் மா பெரும் வெற்றியை தயாரிப்பாளர் L.V.பிரசாத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்ததாம்.
4 comments:
அவ்வ்வ்வ்வ்... மறுபடியுமா??????
ஆனா, இதயவீணை - பாட்டு நல்லா இருக்கும்.
எல்லோரும் மறந்துவிட்டதை அப்பப்ப நினைவுபடுத்தணுனு சுப்பு தாத்தா நினைக்கிறார்.
எத்தனை விமரிசனம் தசாவதாரம்..சுப்ரமணியபுரம் போல படித்துக்கொண்டிருப்பது என்பது அவரது வாதம்.
படம் இன்னும் எங்க ஊருக்கு வரல வந்தவுடன் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துடணும் ;-)
தவறாம பாருங்க சியாம்..எவ்வளவு வேணும்னாலும் டிக்கட் ரேட் வைஸ்சுக்கலாம்னுதமிழ்நாடு அரசு சொல்லிடுச்சாம்.அதனாலே நீங்க கொஞ்சம் அதிகம் செலவழிக்க
வேண்டியிருக்கும்.
Post a Comment