1.மனைவி-(கணவனிடம்)நீங்க புத்திசாலின்னு எப்படி சொல்றீங்க?
கணவன்-முட்டாள்களுக்குத்தான் அழகான மனைவி கிடைக்கும்னு சொல்றாங்களே
2.ரௌடித்தனம் பன்ணி பணம் பறிச்சுக்கிட்டிருந்த கேடி கபாலிக்கு..அதே மாதிரி வேலை கிடைச்சுடுத்தாமே
ஆமாம்..கான்ஸ்டபிள் வேலை கிடைச்சுருக்காம்
3.டாக்டர்-உங்க வயிற்றிலே எப்படி தீக்காயம் ஏற்பட்டது
நோயாளி-+2 பரிட்சை எழுதி இருந்த என் பையன் நல்ல மதிப்பெண் வாங்கணும்னு இத்தனை நாள் வயிற்றிலே
நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்
4.டாக்டர்- உங்க வீட்டு பிரஷர் குக்கர்க்கெல்லாம் வந்து பிரஷர் செக் பண்ணமுடியாது
5.டாக்டர்-(நோயாளி பெண்ணிடம்)நீங்க இனிமே கஷ்டமான வேலை எல்லம் செய்யக்கூடாது
பெண்- ஐயோ..டாக்டர்..இனிமே கஷ்டப்பட்டு எங்க மாமியார் மேல குற்றம் கண்டுபிடிக்க முடியாதா?
6.பெண்ணின் தந்தை-(பெண் பார்க்க வந்தவரிடம்)-என் பொண்ணு தமிழும்..ஆங்கிலமும் கலந்து கொஞ்சற மாதிரி பேசுவாள்
வந்தவர்-ஓஹோ..தமிழ் சேனல்ல காம்பியரிங்க் பண்றாள்னு சொல்லுங்க
3 comments:
எல்லாமே கலக்கல். குறிப்பா முதல் ஜோக்கும், அஞ்சாவது ஜோக்கும் கலக்கலோ கலக்கல்
எல்லாமே சூப்பர்....:-)))
varukaikku nanri siva
Post a Comment