அந்த நீதிபதி தீர்ப்பு சொல்லும் போது எல்லாம் கையிலே ஒரு தீப்பந்தத்தை வைச்சிருப்பார்
ஏன்?
சட்டம் ஒரு இருட்டறைன்னு யாரும் சொல்லிடக்கூடாது இல்லையா?
2.உங்களுக்கு மாடு வாங்க லோன் தந்தா அதை எப்படி திருப்பிக் கட்டுவீங்க?
கால் நடையா வந்துதான்.
3.கள்ள நோட்டை அடிச்ச நீ எப்படி மாட்டிண்ட
நோட்டிலே ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெழுத்து போட வேண்டிய இடத்திலே என் கை நாட்டை வைச்சுட்டேன்.
4.தலைவர் போற இடத்திற்கெல்லாம் ஒரு கட்டு பேப்பர்களை எடுத்துட்டுப் போறாரே..ஏன்?
அவர் மேல உள்ள வழக்குகளுக்கு முன் ஜாமீன் வாங்கினத்துக்கான பேப்பர்களாம்
5.என் கணவர் தூங்கும்போதும் கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் தூங்குவார்
ஏன்?
கனவுல வர்றவங்க சரியா தெரியணும்னுட்டுத்தான்
6.நீங்க பேய்,பிசாசு இருக்கறதை நம்பறீங்களா?
கல்யாணம் ஆறவரைக்கும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது
2 comments:
நல்லா இருக்கு
உங்களுக்கு மாடு வாங்க லோன் தந்தா அதை எப்படிக் கட்டுவீங்க?
கயித்துலதான்
கயத்துல கட்டின மாடு அவுத்துண்டு ஓடிட்டா என்ன செய்வீங்க?
வடகரை வேலனை பிடிச்ச்த்தர சொல்வேன்
வேலன் சார் உங்க கயத்துல ஜோக் அருமை.
வருகைக்கு நன்றி
Post a Comment