Sunday, November 2, 2008

மௌலியும்,விசுவும் மற்றும் நானும்..

காஃபி வித் அனு நிகழ்ச்சியில் சோ வும் மௌலியும் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி பார்த்திருப்பீர்கள்..அது சம்பந்தமாக வந்த டோண்டுவின் பதிவும் படித்திருப்பீர்கள்.,


விஷயம் இப்போது அதைப் பற்றியல்ல.. அந்த நிகழ்ச்சியால் என் முன் கொசுவத்தி சுருள்...தோன்ற அதன் பதிவு.

மௌலி என் நண்பர் ..நான்,மௌலி,விசு,ராஜாமணி,கிஷ்மூ மற்றும் அட்லாண்டா கணேஷ் அகிய ஐவரும் சேர்ந்து..எங்க டீன் ஏஜில் 'யங்க்ஸ்டர்ஸ் கல்சுரல் அஸ்ஸோஸியேஷன்' என்ற குழுவை தொடங்கினோம்.

சிவாஜி கணேசனுக்கு 'பத்மஸ்ரீ' விருது கிடைத்தபோது..அவரை முதலில் பாராட்டியது...நாங்கள்தான்..அதுவும் அம்பத்தூரில்.ரஞ்சன் தலைமையில் பாராட்டு விழா

பின்..முதன் முதலாக மௌலி எழுதிய..'லவ் ஈஸ் பிளைண்ட்"நாடகம் நடத்தினோம்..இரவு..10 மணிக்கு கிளம்பி ..நாங்களே இரவு முழுதும் அம்பத்தூரை சுற்றி நாடகத்திற்கான சுவரொட்டி ஒட்டியிருக்கிறோம்.,அதுபோன்ற சமயங்களில் ..இரவு..யாராவது ஒருவர் வீட்டில்..அவரவர் தாயார் ..அளிக்கும் உண்வை சாப்பிட்டிருக்கிறோம்.
பின் அவரது "BON VOYAGE" என்ற நாடகம்..தி.நகர்..வாணிமஹாலில் நடத்தினோம்.,அப்போது மௌலி..பி.டெக்., படித்துக் கொண்டிருந்தார்.பின் அந்த நாடகம் மூலம் ..மௌலி,விசு ஆகியவர்கள் y.g.p.,நாடகக் குழுவில் ஐக்யமாயினர்.,Y.G.மஹேந்திரனும்..மௌலியும் கல்லூரி தோழர்கள்.

மௌலியும்,விசுவும்..தைர்யமாக ..சினிமா உலகில் நுழைய...வங்கி வேலையில் இருந்த நான் அவர்களுடன் ஓட்டத்தில் கலந்துக் கொள்ள இயலவில்லை.வெறும் நாடகங்களுடன் நிறுத்திக் கொண்டேன்.

10 comments:

சின்னப் பையன் said...

ஆஹா... சூப்பர் கொசுவத்தி... கலக்கல்...

சின்னப் பையன் said...

அந்த காபி வித் அனு இணையத்துலே எங்கேயாவது இருக்கான்னு பாக்கறேன்....

நசரேயன் said...

மீண்டும் மீண்டும் மலரட்டும் நினைவுகள்

dondu(#11168674346665545885) said...

வீடியோவில் பார்க்க:
முதல் பாகம்

மூன்றாம் பாகம்?
(மேலே உள்ளது இரண்டாம் பாகமா அல்லது மூன்றாம் பாகமா என்பது புரியவில்லை).

அன்புடன்,
டோண்டு ராகவன்

சின்னப் பையன் said...

நன்றி டோண்டு ஐயா...

யூட்யூப்லே ஆறு பகுதிகளா இந்த குறிப்பிட்ட மௌலி, சோ அவர்களின் ப்ரோக்ராம் இருக்குது...

dondu(#11168674346665545885) said...

இப்போ ஆறுக்கும் சுட்டிகள்:
வீடியோவில் பார்க்க:
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்

அன்புடன்,
டோண்டு ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///dondu(#11168674346665545885) said...
இப்போ ஆறுக்கும் சுட்டிகள்:
வீடியோவில் பார்க்க:
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்

அன்புடன்,
டோண்டு ராகவன்///

வருகைக்கும்..தகவல்களுக்கும் நன்றி டோண்டு சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆறு பாகமும் பார்த்தேன்...நன்றி டோண்டு சார்