Monday, November 3, 2008

நானும்..ஹிந்தியும்...

ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில் நினைத்து வருந்தியிருக்கிறேன்..,இது எல்லாம் ...இப்படியாகும்னு தெரிந்திருந்தால்..அப்போது நானும் சேர்ந்து 'ஹிந்தி ஒழிக' குரல் கொடுத்திருக்க மாட்டேன்.,

நான் பள்ளியில் படிக்கும் போது..ஹிந்தி தேர்ட் லேங்க்வேஜ்..படிக்க வேண்டும்...பரீட்சையும் எழுத வேண்டும்..ஆனால் அதில் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்பதில்லை..மொத்த மதிப்பெண்களில் அது சேராது...அதனால் அவசியமில்லை.

மேலும்..அந்த சமயங்களில்..தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் ஹிந்தியை எதிர்த்ததாலும்...தினத்தந்தி போன்ற பத்திரிகைகள்..கார்ட்டூனில்...ஒரு தடியான பெண்ணை..கொம்புகளுடன் வரைந்து..ராட்சசி போல உடை அணிவித்து..கையில் ஆயுதத்துடன் ..காட்சி அளிக்க வைத்து..என்னைப் போன்ற இளைஞர்கள் மத்தியில் 'இதுதான் ஹிந்தி'என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டன.

இளரத்தம்...பின் கேட்கவா வேண்டும்.."ஹிந்தி ஒழிக" கோஷங்களும்...'உடல் மண்ணுக்கு..உயிர் தமிழுக்கு'போன்ற கோஷங்களும் போட்டு...எங்கள் ஹிந்தி புத்தகங்களை கொளுத்தினோம்.

அப்போது எங்களுக்கு ஹிந்தி வாத்தியார்..ஒரு மேடம்...அதனால் எங்கள் அட்டூழியம் அதிகமாகவே இருக்கும்.

எங்கள் தலைமை ஆசிரியர்.திரு சி.ஆர்.ராமனாதன்..மலையாளி..அவருக்கும் ஹிந்தி தெரியாது..மிகவும் கண்டிப்பானவர்.

எங்களைப் பற்றி தெரிந்துக்கொண்டு..ஹிந்தி வகுப்பின் போது ..வகுப்பறையில் நுழைவார்..ஹிந்தி மேடத்தைப் பார்த்து'என்னம்மா..ஒழுங்கா படிக்கிறாங்களா?'என்பார்.,

உண்மையை சொல்ல பயந்துக்கொண்டு..அந்த மேடமும் 'ஓ' என தலையாட்டுவார்கள்..உடனே அவர் என்னை கைகாட்டி..'இவனை ஒரு கேள்வி கேளுங்கோ'என்பார்.

உடனே மேடம் என்னிடம் 'துமாரா நாம் கியா ஹை?'என்பார்..

எனக்கு வாயில் வந்தவற்றை..உதாரணமாக 'கலம் குர்சி பர் ஹை'என பதில் சொல்வேன்..

'சரியாச் சொல்றானோ' என்பார்..

மேடமும் ..எங்கே..இல்லை என்று சொன்னால்..தனக்கு சரியாக சொல்லித்தர தெரியவில்லை..என ..திட்டு கிடைக்குமோ..என பயந்து..'சரியாகச் சொல்கிறான்' என்பார்..தலைமை ஆசிரியரும்..என்னைப்பார்த்து 'குட்"என சொல்லிவிட்டு..அடுத்த பையனைக் கைகாட்டுவார்..அவன் தன் பெயரை 'மேஜ்'என சொல்லி நல்லப் பெயரை எடுப்பான்..

இப்படியாக நாங்கள் ஹிந்தி படித்தோம்...பின்னர் பொறுப்புணர்ந்ததும்..அவசியமும் உணர்ந்து ..ஹிந்தியை தனியாகக்கற்று 'ராஷ்ட்ரபாஷா'வரை படித்தேன்.

ஆனாலும்...பேசுவதை புரிந்துக்கொள்ளும் என்னால்..திரும்பி சரளமாக பேசமுடியாது.

36 comments:

ச்சின்னப் பையன் said...

//உடனே மேடம் என்னிடம் 'துமாரா நாம் கியா ஹை?'என்பார்..

எனக்கு வாயில் வந்தவற்றை..உதாரணமாக 'கலம் குர்சி பர் ஹை'என பதில் சொல்வேன்..//

ஹாஹாஹா... நல்லா வாய் விட்டு சிரிச்சிக்கிட்டிருக்கேன்...:-)))

தமிழ் பிரியன் said...

:))

நசரேயன் said...

ஹிந்தி எனக்கு தெரியாதற்கு நான் பெருமை படுகிறேன் :):)

Aruna said...

//உடனே மேடம் என்னிடம் 'துமாரா நாம் கியா ஹை?'என்பார்..

எனக்கு வாயில் வந்தவற்றை..உதாரணமாக 'கலம் குர்சி பர் ஹை'என பதில் சொல்வேன்..//

ஹா..ஹஹா.ஹா. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை...Nice fun.
அன்புடன் அருணா

விஜய் ஆனந்த் said...

ஹாஹாஹா!!!

ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதாத்தா!!!

T.V.Radhakrishnan said...

/// ச்சின்னப் பையன் said...
//உடனே மேடம் என்னிடம் 'துமாரா நாம் கியா ஹை?'என்பார்..

எனக்கு வாயில் வந்தவற்றை..உதாரணமாக 'கலம் குர்சி பர் ஹை'என பதில் சொல்வேன்..//

ஹாஹாஹா... நல்லா வாய் விட்டு சிரிச்சிக்கிட்டிருக்கேன்...:-)))///ச்சின்னப்பையன்..சுக்ரியா...இது எப்படி

T.V.Radhakrishnan said...

// நசரேயன் said...
ஹிந்தி எனக்கு தெரியாதற்கு நான் பெருமை படுகிறேன் :):)//


நானும் என் 32 வயதில் அப்படித்தான் நினைத்தேன்...வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தமிழ் பிரியன்

dondu(#11168674346665545885) said...

அப்புசாமி சீதாபாட்டியை தெரியாதவர்கள் இருக்க முடியாது.
ஒரு கதையில் அவர்கள் இருவரையும் போலீஸ் ஹிந்தி எதிர்ப்புக்காகப் பிடித்துக் கொண்டு செல்ல இருவரும் தப்பிப்பதற்காக "பச்சோங்கீ கிதாப்" என்ற ஹிந்தி பாடநூலை வைத்து இன்ஸ்பெக்டரை குழப்பிய சீன். நினைவிலிருந்து தருகிறேன்.

அப்புசாமி: "ஏ மேஜ் ஹை, மேஜ் பே கலம் ஹை, கலம் மே ஸ்யாஹீ ஹை"
(மொழிபெயர்ப்பு: இது மேஜை, மேஜையின் மேல் பேனா இருக்கிறது. பேனாவில் மை உள்ளது).

இன்ஸ்பெக்டர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே: "அடேங்கப்பா, ஒரே ஹை ஹையாக இருக்கே, நம்மால் முடியலை சாமி, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போகலாம்"

சீதாபாட்டி (கருணையுடன்): "அச்சா, சாரதா சோமு கீ பெஹன் ஹை" (நல்லது, சாரதா சோமுவின் சகோதரி).

இதை படித்துவிட்டு நான் என்னை மறந்து சிரிக்க ஆரம்பிக்க, நூலகத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிலர் மெதுவாக என் பக்கத்திலிருந்து விலகி தூரப்போய் அமர்ந்து கொண்டனர்.

அவர்களைப் பற்றி நான் போட்ட இடுகை: http://dondu.blogspot.com/2005/11/blog-post_04.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அமிழ்து said...

எந்த மொழியும் தேவை இருக்கும் போது கற்றுக்கொள்ளவதில் தவறில்லை. அதை விட்டு, எல்லாமே இல்லையெனில், பள்ளிக்கூடத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டுமெனில் பல நூறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், எப்போதோ உபயோகமாயிருக்குமென!

வருங்கால முதல்வர் said...

எந்த மொழியும் தேவை இருக்கும் போது கற்றுக்கொள்ளவதில் தவறில்லை. அதை விட்டு, எல்லாமே இல்லையெனில், பள்ளிக்கூடத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டுமெனில் பல நூறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், எப்போதோ உபயோகமாயிருக்குமென!

/
மறுக்கா கூவிக்கிறேன்.
/

T.V.Radhakrishnan said...

///Aruna said...
//உடனே மேடம் என்னிடம் 'துமாரா நாம் கியா ஹை?'என்பார்..

எனக்கு வாயில் வந்தவற்றை..உதாரணமாக 'கலம் குர்சி பர் ஹை'என பதில் சொல்வேன்..//

ஹா..ஹஹா.ஹா. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை...Nice fun.
அன்புடன் அருணா///
வருகைக்கு நன்றி Aruna

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Dondu saar

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி விஜய்...
(ஒரு உபரி செய்தி-நீங்க சொல்ற அந்த ஹிந்தி வாத்தியார் சமீபத்தில் மரணமடைந்தார்.)

-/சுடலை மாடன்/- said...

//ஹிந்தியை தனியாகக்கற்று 'ராஷ்ட்ரபாஷா'வரை படித்தேன்.

ஆனாலும்...பேசுவதை புரிந்துக்கொள்ளும் என்னால்..திரும்பி சரளமாக பேசமுடியாது//

//நான் பள்ளியில் படிக்கும் போது..ஹிந்தி தேர்ட் லேங்க்வேஜ்..படிக்க வேண்டும்...பரீட்சையும் எழுத வேண்டும்..ஆனால் அதில் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்பதில்லை..மொத்த மதிப்பெண்களில் அது சேராது...அதனால் அவசியமில்லை.//

//ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில் நினைத்து வருந்தியிருக்கிறேன்..,இது எல்லாம் ...இப்படியாகும்னு தெரிந்திருந்தால்..அப்போது நானும் சேர்ந்து 'ஹிந்தி ஒழிக' குரல் கொடுத்திருக்க மாட்டேன்.//

இந்த வாக்கியங்களிலுள்ள முரண்களைப் பாருங்கள். சொந்தப் பணத்தில், சொந்த முயற்சியில், நன்கு விவரமறிந்த காலத்தில் 'ராஷ்ட்ரபாஷா' வரை படித்த பின்பும் சரளமாக உங்களால் இந்தி பேச முடியவில்லை. ஆரம்பப் பள்ளியில், தேர்ச்சியடைய வேண்டிய நிர்ப்பந்தமில்லாததொரு பாடமாக மூன்றாம் மொழியாக ஏனோதானாவென்று கடனே என்று படித்து இந்தி சரளமாகப் பேசியிருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா? டெல்லிக்குச் சென்ற எத்தனையோ இளைஞர்கள் ஆரம்பித்தில் சிரமப் பட்டாலும் ஓராண்டிலேயே சரளமாக இந்தி பேசுவதைக் கண்டிருக்கிறேன். டெல்லியில் இருந்த பொழுது மூன்று மாதங்களில் நான் எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டேன். நிர்ப்பந்தம்தான். எனவே கொஞ்சபேர் வடக்கே சென்று வாழ நேரிடும் என்பதற்காக தமிழகம் முழுமையும் இந்தி படிக்க வேண்டுமென்பது முட்டாள்தனமாகத் தோன்றவில்லையா? வேண்டுமென்பவர்கள் உங்களைப் போன்று தனியே படித்துக் கொள்ளவேண்டியதுதானே!

நன்றி - சொ.சங்கரபாண்டி

T.V.Radhakrishnan said...

//அமிழ்து said...
எந்த மொழியும் தேவை இருக்கும் போது கற்றுக்கொள்ளவதில் தவறில்லை. அதை விட்டு, எல்லாமே இல்லையெனில், பள்ளிக்கூடத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டுமெனில் பல நூறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், எப்போதோ உபயோகமாயிருக்குமென!//

:-)))

T.V.Radhakrishnan said...

//வருங்கால முதல்வர் said...
எந்த மொழியும் தேவை இருக்கும் போது கற்றுக்கொள்ளவதில் தவறில்லை. அதை விட்டு, எல்லாமே இல்லையெனில், பள்ளிக்கூடத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டுமெனில் பல நூறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், எப்போதோ உபயோகமாயிருக்குமென!

/
மறுக்கா கூவிக்கிறேன்.//

:-))))

T.V.Radhakrishnan said...

//ஹிந்தியை தனியாகக்கற்று 'ராஷ்ட்ரபாஷா'வரை படித்தேன்.

ஆனாலும்...பேசுவதை புரிந்துக்கொள்ளும் என்னால்..திரும்பி சரளமாக பேசமுடியாது//

//நான் பள்ளியில் படிக்கும் போது..ஹிந்தி தேர்ட் லேங்க்வேஜ்..படிக்க வேண்டும்...பரீட்சையும் எழுத வேண்டும்..ஆனால் அதில் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்பதில்லை..மொத்த மதிப்பெண்களில் அது சேராது...அதனால் அவசியமில்லை.//

//ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில் நினைத்து வருந்தியிருக்கிறேன்..,இது எல்லாம் ...இப்படியாகும்னு தெரிந்திருந்தால்..அப்போது நானும் சேர்ந்து 'ஹிந்தி ஒழிக' குரல் கொடுத்திருக்க மாட்டேன்.//

இந்த வாக்கியங்களிலுள்ள முரண்களைப் பாருங்கள். சொந்தப் பணத்தில், சொந்த முயற்சியில், நன்கு விவரமறிந்த காலத்தில் 'ராஷ்ட்ரபாஷா' வரை படித்த பின்பும் சரளமாக உங்களால் இந்தி பேச முடியவில்லை. ஆரம்பப் பள்ளியில், தேர்ச்சியடைய வேண்டிய நிர்ப்பந்தமில்லாததொரு பாடமாக மூன்றாம் மொழியாக ஏனோதானாவென்று கடனே என்று படித்து இந்தி சரளமாகப் பேசியிருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா? டெல்லிக்குச் சென்ற எத்தனையோ இளைஞர்கள் ஆரம்பித்தில் சிரமப் பட்டாலும் ஓராண்டிலேயே சரளமாக இந்தி பேசுவதைக் கண்டிருக்கிறேன். டெல்லியில் இருந்த பொழுது மூன்று மாதங்களில் நான் எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டேன். நிர்ப்பந்தம்தான். எனவே கொஞ்சபேர் வடக்கே சென்று வாழ நேரிடும் என்பதற்காக தமிழகம் முழுமையும் இந்தி படிக்க வேண்டுமென்பது முட்டாள்தனமாகத் தோன்றவில்லையா? வேண்டுமென்பவர்கள் உங்களைப் போன்று தனியே படித்துக் கொள்ளவேண்டியதுதானே!////

ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது..என கேள்விபட்டதில்லையா?எந்த ஒன்றும் பசுமரத்தாணிபோல பதிவது இளம் வயது.மேலும்..நம்ப தக்ஷின் பாரத் சபா வழங்கும் சான்றிதழ்கள் எல்லாம்..இவ்வளவு பேர் படித்தார்கள் என்ற புள்ளி விவரத்துக்குத்தானே.அதனால் முறண்பாடு ஏதும் இருப்பதாக நான் எண்ணவில்லை..
மேலும்..நிர்பந்தம் வந்தால்தான் ஒன்றைக் கற்றுக்கொள்வேன் என்பதும் தவறென்றே நான் நினைக்கிறேன்.
வருகைக்கும்..உங்கள் கருத்து பரிமாறலுக்கும் நன்றி.

T.V.Radhakrishnan said...

டோண்டு சார்...நீங்க சொன்ன உங்க பதிவு படிச்சேன்..நன்றாக இருந்தது

T.V.Radhakrishnan said...

//வருங்கால முதல்வர் said...
எந்த மொழியும் தேவை இருக்கும் போது கற்றுக்கொள்ளவதில் தவறில்லை. அதை விட்டு, எல்லாமே இல்லையெனில், பள்ளிக்கூடத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டுமெனில் பல நூறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், எப்போதோ உபயோகமாயிருக்குமென!

/
மறுக்கா கூவிக்கிறேன்.//


ஹிந்தி தேசிய மொழி...கற்று கொள்வதில் தவறில்லை என்பது என் எண்ணம்

கோவி.கண்ணன் said...

உங்கள் கட்டுரைக்கு எனது பதில்

T.V.Radhakrishnan said...

ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்..என்றோ ..கெட்டேன் என்றோ எங்கும் கட்டுரையில் நான் சொல்லவில்லை..,பல சமயங்களில் 'சபை நடுவே பேசாதிருப்பவன் நன் மரம்"என்பது போன்ற நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது..அதன் தாக்கமே இக்கட்டுரை..மேலும்...த்மிழன் அறிவாளி...ஒரு மொழி அதிகமாகப் படித்தால் தவறா? என்பதே கேள்வி.,
மேலும் தமிழ் வெறியன் நான்..அதநால் ஹிந்தி வெறுக்க வேண்டும் என்பது இல்லையே..

கோவி.கண்ணன் said...

ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில்(ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்) நினைத்து வருந்தியிருக்கிறேன்

ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்..என்றோ ..கெட்டேன் என்றோ எங்கும் கட்டுரையில் நான் சொல்லவில்லை.., !

***

இப்போது அடைப்புக் குறிக்குள் உங்கள் சொற்களையே போட்டு இருக்கிறேன் படித்துப் பாருங்கள்

:)

தீலிபன் said...

எந்த ஒரு மொழியையும் யாரும் எப்போதும் கற்றுகொள்ளலாம், ஹிந்தியை படிக்காமல் விட்டுவிட்டேன் என்று நீங்கள் கூறுவது சிறுபிள்ளைதனமானது, இன்றைய காலகட்டத்தில் நம் மக்கள் எங்கும் சென்று பணிபுரிகின்றனர், நான் இத்தாலியில் இருந்த போது தொடர் வண்டி பரிசோதகர் என் நாட்டில் என் மொழி பேசு இங்கு ஆங்கிலத்திற்கு வேலை இல்லை என்று கூறினார். அதற்காக நான் இத்தாலி மொழி கற்றுக்கொள்ள முடியுமா? இவ்வளவு என் வட இந்திய மக்கள் அடகு கடை வைத்து நம்மை சுரண்ட வரும்போது எனக்கு தமிழ் தெரியாது, அதனால் நான் தமிழ்நாட்டில் கடை வைக்கமாட்டேன் என்று என்றாவது கூறியுள்ளனா?

மணிகண்டன் said...

**************** இப்போது அடைப்புக் குறிக்குள் உங்கள் சொற்களையே போட்டு இருக்கிறேன் படித்துப் பாருங்கள் *********

உங்க இஷ்டத்துக்கு அடைப்பு குறிக்குள் எதையாவது எழுதிட்டு அத சார் சொன்னார்ன்னு சொல்றது திரிப்பு.

குடுகுடுப்பை said...

//ஹிந்தி தேசிய மொழி...கற்று கொள்வதில் தவறில்லை என்பது என் எண்ணம்//

என்னுடன் ஒரு வட இந்தியர் வேலை பார்த்தார்.தேசிய மொழி இந்தி தெரியாத நான் இந்தியன் இல்லை என்றார்.இந்தி தெரியாமல் நான் நல்ல இந்தியனாகத்தான் கடைசி வரை இருப்பேன்.தமிழ் கூட தேசிய மொழிதான் பீகார் காரன் தேவையில்லாமல் கத்துக்கொள்வானா?

தேசிய மொழி என்ற பெயரில் என் மேல் அதை திணிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

இன்னும் 50 ஆண்டுகளில் பஞ்சாபி,மராத்தி,பொஜ்புரி, மற்ற வட மாநில மொழிகள் காணாமல் போய்விடும், தமிழை அழிக்க இந்திக்கு பதிலாக ஆங்கிலம் ஆனால் 100 ஆண்டுகள் ஆகும்.


தேசமொழி என்ற பெயரில் பாசா இந்தோனேசியா என்ற மலாய் மொழியை புகுத்தி 45% பேசிய ஜாவனீஸ் என்ற மொழியை அழித்தார்கள்.நாம் நான்கு மொழிகளை இன்னும் காப்பாற்றி வருகிறோம்.

-L-L-D-a-s-u said...

Hindi is NOT national Language . Its one of the official Languages along with English . Tamil is one of the national languages along with Hindi, Telugu ....etc ,

-L-L-D-a-s-u said...

Hindi is NOT national Language . Its one of the official Languages along with English . Tamil is one of the national languages along with Hindi, Telugu ....etc ,

T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில்(ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்) நினைத்து வருந்தியிருக்கிறேன்

ஹிந்தி பேசாததால் நான் அழிந்தேன்..என்றோ ..கெட்டேன் என்றோ எங்கும் கட்டுரையில் நான் சொல்லவில்லை.., !

***

இப்போது அடைப்புக் குறிக்குள் உங்கள் சொற்களையே போட்டு இருக்கிறேன் படித்துப் பாருங்கள்

:)//


இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி..கோவி

T.V.Radhakrishnan said...

//தீலிபன் said...
எந்த ஒரு மொழியையும் யாரும் எப்போதும் கற்றுகொள்ளலாம், ஹிந்தியை படிக்காமல் விட்டுவிட்டேன் என்று நீங்கள் கூறுவது சிறுபிள்ளைதனமானது, இன்றைய காலகட்டத்தில் நம் மக்கள் எங்கும் சென்று பணிபுரிகின்றனர், நான் இத்தாலியில் இருந்த போது தொடர் வண்டி பரிசோதகர் என் நாட்டில் என் மொழி பேசு இங்கு ஆங்கிலத்திற்கு வேலை இல்லை என்று கூறினார். அதற்காக நான் இத்தாலி மொழி கற்றுக்கொள்ள முடியுமா? இவ்வளவு என் வட இந்திய மக்கள் அடகு கடை வைத்து நம்மை சுரண்ட வரும்போது எனக்கு தமிழ் தெரியாது, அதனால் நான் தமிழ்நாட்டில் கடை வைக்கமாட்டேன் என்று என்றாவது கூறியுள்ளனா?//


வருகைக்கு நன்றி தீலிபன்

T.V.Radhakrishnan said...

// மணிகண்டன் said...
**************** இப்போது அடைப்புக் குறிக்குள் உங்கள் சொற்களையே போட்டு இருக்கிறேன் படித்துப் பாருங்கள் *********

உங்க இஷ்டத்துக்கு அடைப்பு குறிக்குள் எதையாவது எழுதிட்டு அத சார் சொன்னார்ன்னு சொல்றது திரிப்பு.//


புரிதலுக்கு நன்றி மணி

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி L-L-D-a-s-u

கோவி.கண்ணன் said...

//இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி..கோவி//

சும்மா தமாஷ் செய்தேன் :)

இந்தி தெரியவில்லை என்பதும், இந்தி தெரிந்தவருக்கு இடையே இருக்கும் போது தலைகுணிவு என்பதெல்லாம் தாழ்வுணர்ச்சிதான்.

இந்தி ஒட்டகம் தமிழ்நாட்டுக்குள் நுழைந்திருந்தால் சென்னை மாநகராட்சு சுவர்களில் இந்தி பட போஸ்டர்களைத்தான் பார்க்க முடியும். கன்னடப்படங்கள் ஓடாமல் போனதற்குக் காரணமே தேவையற்ற அளவுக்கு பெங்களூர் வாசிகள் இந்தியை உள்வாங்கிக் கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பு. மராட்டிப் படங்கள் ஆண்டுக்கு ஒன்று கூட வருவதில்லை, அதையெல்லாம் இந்தி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

உங்கள் தலைமுறை ஆட்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்திருக்காவிட்டால் தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு வளர்ச்சி பெறாமல் முடங்கி இருக்கும், நீங்களும் இந்தியில் வலைப்பூ தொடங்கி இருப்பீர்கள்.

யாரோ ஒருவரிடம் சில நிமிடங்கள் பேச வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக உலகில் எந்த ஒருவரும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில்லை. பல்வேறு மொழி பேசும் நாடுகளுக்கு அடிக்கடி செலவர்கள், அங்கு வேலை வாய்ப்பு பெறுபவர்கள் தவிர்த்து யாருமே புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதில்லை.

சிலர் விருப்பத்தின் பெயரில் ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஸ் கூட கற்றுக் கொள்கிறார்கள். மற்றவர்கள் யாருமே எனக்கு இத்தாலி தெரியாததால் சோனியா காந்தியிடம் பேச முடிவதில்லை என்று சொல்வதில்லை.

ZEE TV தொடர்ந்து மூன்று மாதம் பார்த்தால் உங்களால் 'ஜோராக' பேசவே முடியும். நான் பெங்களூருக்கு வேலைக்குச் சென்ற போது எனக்கு கன்னடம் கற்றுக் கொள்வது மிக மிக தேவை எனப்பட்டது. நான் அதற்கு எடுத்துக் கொண்டது ஒரே ஒரு மாதம் தான், மிகச் சரளமாக பேசினேன். இப்போதும் கூட என்னால் பேச முடியும். மொழியைக் கற்றுக் கொள்வது என்பதைவிட அதை விருப்புடன் உற்றுக் கவனித்தால் நாள் ஒன்றுக்கு 40 சொற்களைக் கூட உள்வாங்க முடியும் அதற்கு வயதும் தடை இல்லை.

எனது பின்னூட்டம் உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். ஆனால் உங்கள் கட்டுரையின் சாரமான குற்றச் சாட்டில் உணர்ச்சி வசப்பட்ட ஒன்று என்றே புரிகிறது.

அமிழ்து said...

கோவி. கண்ணன் அவர்கள் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். இங்கே பெங்களூருவில் நானும் வந்து ஒரு வருடத்தில் கன்னடம் கற்றுக் கொண்டேன்! அது தேவையேயில்லை, ஆனாலும் அவர்களிடத்தில் இருந்து கொண்டு என் மொழியிலோ இல்லை வேற்று மொழியிலோ பேசுவதை அவர்களுக்கு நான் தரும் அவமரியாதை என்றே நினைத்துக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன்.

டிவிஆர் அவர்களே, இந்தி தேசிய மொழி என்று நீங்கள் நினைப்பது தவறு. இதுவும் நமது பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்தில் இருந்த கூத்தே! உங்களுக்காக இந்திய அரசின் பக்கத்தின் இணைப்பைக் கொடுக்கிறேன்.

http://www.india.gov.in/knowindia/india_at_a_glance.php

இங்கே நீங்கள் இந்த வரிகளைப் படியுங்கள்!
//
Languages: There are 22 National Languages have been recognized by the Constitution of India, of which Hindi is the Official Union Language. Besides these, there are 844 different dialects that are practiced in various parts of the Country.
//

நம்மைப் போன்றே இந்தி மட்டும் தான் தேசிய மொழி என்று நினைத்த ஒருவரின் ஆங்கில பதிப்பு இங்கே!

http://www.merinews.com/catFull.jsp?articleID=126953

T.V.Radhakrishnan said...

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி அமிழ்து