Saturday, November 22, 2008

வண்ணதாசன்..என்னும் கல்யாண்ஜியும்...நானும்..

வடகரை வேலனின்..கதம்பத்தில்..கல்யாண்ஜியின் கவிதைப் பற்றி எழுதி இருந்தார்..

அதைப்படித்ததும்...என் முன்னால்..ஒரு நீர்ச்சுழல்..(எவ்வளவுநாள்தான்..கொசுவத்தி..என்று எழுதுவது?)

கல்யாணசுந்தரமும்..நானும்..ஸ்டேட் வங்கியில் வேலை செய்தவர்கள்..அவரும்..நானும்..ஒன்றாக 3 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறோம்.அந்த சமயங்களில் அவருடன் இலக்கியம்..கவிதைகள் உள்பட பல விஷயங்களை விவாதம் செய்திருக்கிறேன்.

அவர் படைப்புகள்..பத்திரிகைகளில் வருவதற்கு முன் கைப்பட எழுதியதை..எனக்கு படிக்க கொடுத்து..நான் படித்த பேறு பெற்றவன்..அந்த சமயங்களில்..என் கதைகள் பல கலைமகள் இதழில் வரும்...அதைப்படித்துவிட்டு..இப்படி எழுதியிருந்தால்..இன்னும் நன்றாக இருந்திருக்கும்..என..என் எழுத்துக்களை..பட்டை தீட்டியவர்.அதன் பயன்தான்..நான் எழுதிய 'பாரத ரத்னா' என்ற என் நாடக நூலுக்கு..2005க்கான சிறந்த நூல் என்று..இலக்கிய சிந்தனை பரிசைப் பெற்று தந்தது.

சாகித்ய அகாடமி..பரிசுக்காக..முதல்வரிசையில் உள்ளவர்..விரைவில் கிடைத்து விடும் என எண்ணுகிறேன்.

தமிழக அரசின்..கலைமாமணி விருது பெற்றவர்..

இன்றும்..அவ்வப்போது..திருநெல்வேலியில் உள்ள அவருடன்..தொலைபேசியில் உரையாடுவேன்..எங்கள் நட்பு தொடர்கிறது..

இந்த நிகழ்ச்சிகளை அசை போட உதவிய வேலனுக்கு நன்றி

17 comments:

பரிசல்காரன் said...

மகிழ்ச்சியாக இருக்கிறது. கதைகளை எழுத்தாலரின் கையெழுத்தில் படிப்பதென்பது, என்னைப் பொறுத்தவரை பசசிளம் குழந்தையை கையிலேந்தி உச்சிமுகர்வதற்குச் சமமானது. அதுவும் என் மதிப்பிற்குரிய கல்யாண்ஜியின் எழுத்துக்களை அப்படிப் படிக்க வாய்த்தவர் என்பதில் உங்களைக் கண்டு பெருமையும், பேருவகையும் அடைகிறேன்.

பரிசல்காரன் said...

எழுத்தாலரின் = எழுத்தாளரின்

பசசிளம் = பச்சிளம்

...எனக் கொள்க.

:-))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு காலத்தில் வண்ணதாசனின் எழுத்துகளை விழுந்து கிடந்து படித்துக் கொண்டிருந்தவன்... உங்களின் இந்தப் பதிவைப் படிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது.

T.V.Radhakrishnan said...

வருகைக்கும் ..கருத்து..பரிமாற்றுதலுக்கும் நன்றி பரிசல்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

வடகரை வேலன் said...

நீங்கள் பாக்யவான்.

T.V.Radhakrishnan said...

// வடகரை வேலன் said...
நீங்கள் பாக்யவான்.//

YES

வருகைக்கு நன்றி வேலன்

குப்பன்_யாஹூ said...

வண்ணதாசன் பற்றி எழுதியமைக்கு நன்றி.

குப்பன்_யாஹூ

மிஸஸ்.டவுட் said...

விகடனில் வெளிவந்த வண்ணதாசனின்"அகம்..புறம்" வாசித்து விட்டு அவருடைய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் வந்தது...இதுவரை கைகூடவில்லை...அடுத்த புத்தகத் திருவிழாவில் பார்க்கவேண்டும்,ஒரு சில வரிகள்
"உங்கள் நினைவுகளின் தெருக்களில் நான் நடமாடும் போது என் கனவுகளின் தாழ்வாரத்தில் நீங்கள் இருக்க முடியாதா " சரியாக ஞாபகமில்லை ...ஆனாலும் பிடித்த வரிகள் என்று சொல்ல வந்தேன்.வண்ணதாசன் உங்கள் நண்பர் என்பதை அறிவதில் சந்தோசமே.

மங்களூர் சிவா said...

வேலன் பதிவிலிருந்து வருகிறேன். உங்களின் இந்தப் பதிவைப் படிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி குப்பன்_யாஹூ

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மிஸஸ்.டவுட்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சிவா

வெயிலான் said...

நான் எழுத நினைத்ததை பரிசல் ஏற்கனவே எழுதியிருக்கிறார்.

அவருடனான அனுபவங்களை இன்னும் விரிவாக நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும்.

T.V.Radhakrishnan said...

// வெயிலான் said...
நான் எழுத நினைத்ததை பரிசல் ஏற்கனவே எழுதியிருக்கிறார்.

அவருடனான அனுபவங்களை இன்னும் விரிவாக நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும்.//


வருகைக்கு நன்றி...வண்ணதாசன்..அனுமதி பெற்று..விரிவாகவே..ஒரு பதிவு இடுகிறேன்

நசரேயன் said...

நட்பு தொடர வாழ்த்துக்கள் ஐயா

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி நசரேயன்