1.இந்த கம்ப்யூட்டரை அரசாங்க அலுவலகங்களில் வைக்க என்று புதுசா கண்டு பிடிச்சு இருக்காங்க...
அப்படி என்ன இதிலே இருக்கு
முதல்ல அதுக்கென சம்திங்க் தள்ளினாத்தான் மற்ற விவரங்களைச் சொல்லுமாம்.
2.என்னோட அடுத்த படம் இருவர் சம்பந்தப்பட்டது.சண்டை தீர்ற மாதிரி இருக்கும் ஆனா தீராது.இப்படி பல ஆண்டுகளாக நடக்கற கதை.படத்துக்கு பொருத்தமான ஒரு பெயரைச் சொல்லுங்க.
கர்நாடகா என்று வைக்கலாம்.
3.உன்னோட கணவர் இப்ப எல்லாம் உப்பு சப்பில்லா கதையா எழுதறாரே..ஏன்?
அவருக்கு இரத்த அழுத்தம் இருக்கறதாலே..டாக்டர் உப்பு பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்.
4.கதாசிரியர்-(பத்திரிகை ஆசிரியரிடம்)என்னோட புது கதையைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?
ஆசிரியர்-ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள்..ஆனால்.ஒரு கதை ஒருத்தர் சொந்த கற்பனையா?காப்பியடித்ததா?என்று கண்டுபிடிக்க எந்தக் கருவியையும் கண்டுபிடிக்கலையே
5.அலுவலகத்தில் உனக்கு மெமோ கொடுத்தார்களா? ஏன்?
தூங்கும்போது நான் குறட்டை விடுகிறேனாம்..அது மற்றவர்கள் தூக்கத்தை கெடுக்குதாம்..அதனால்தான்.
6.பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர்..தான் புத்திசாலி என்பதை இப்படிக் கூறினார்
'முட்டாளாக முயன்று தோற்றவன் நான்'
அடுத்து வந்த எதிரணி பேச்சாளர் ..இதைக்குறிப்பிட்டு பேசும்போது..'ஆம்..அதிமுட்டாளான என் நண்பர் முட்டாளாக முயன்று தோற்றவர்'
8 comments:
:-))))))
nanri velan
>>>>>>
nanri Chuttiarun
nanri ஆட்காட்டி1
nanri rapp
/
பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர்..தான் புத்திசாலி என்பதை இப்படிக் கூறினார்
'முட்டாளாக முயன்று தோற்றவன் நான்'
அடுத்து வந்த எதிரணி பேச்சாளர் ..இதைக்குறிப்பிட்டு பேசும்போது..'ஆம்..அதிமுட்டாளான என் நண்பர் முட்டாளாக முயன்று தோற்றவர்
/
அல்டிமேட்!
:)
nanri siva
Post a Comment