ஒரு ஊரில் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி இருந்தது...அதைப்பார்த்த ஓநாய் ஒன்று அதை இரையாக்கிக்கொள்ள தீர்மானித்தது.
ஒரு நாள் அந்த ஆட்டுக்குட்டி..ஓடிவரும் ஆறின் சரிவில் நீர் அருந்திக் கொண்டிருந்தது.மேல் பகுதியில் வந்து தண்ணீர் அருந்துவது போல பாவனை செய்த ஓநாய்..திடீரென ஆட்டைப் பார்த்து 'ஏன்..இப்படி தண்ணீரை கலக்குகிறாய்"என்று அதட்டிக் கேட்டது.
ஓநாயைப்பார்த்து பயந்த ஆடு..'நான் எப்படி தண்ணீரை கலக்க முடியும்..நீங்கள் குடித்த பின்னர் தானே நீர் எனக்கு வருகிறது?" என்றது.
ஆட்டின் பதிலைக்கேட்டதும்..ஓநாய்..'நீ கலக்கா விட்டால் என்ன?..முன்னர் உன் அப்பன் கலக்கி இருப்பான்...அதற்கும் முன்னால் உன் பாட்டன் கலக்கி இருப்பான்..உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாது'என்றபடியே ஆட்டின் மேல் பாய்ந்து, அதை அடித்துக் கொன்றது.
நம் நியாயம்..எடுபடாது..என்ற நிலையில்..ஒதுங்கி செல்வதே..நல்லது.
11 comments:
நீ உண்மையான் ஆம்பிளையா இருந்தா ஜெயலலிதா பத்தி கண்டிச்சு எழுது பார்ப்போம்
ஐயா..புலிகேசி...சமயம் வரும்போது அதையும் செய்வேன்..நான் ..யார் என் மீது என்ன சாயம் பூசினாலும்...ஒரு நடுனிலைவாதி..அது என் மனதிற்கு தெரியும்..இதைத்தவிர வேறு எதுவும் ..தற்சமயம் சொல்ல விரும்பவில்லை.
எனது..கலைஞரை பாராட்டி எழுதிய பதிவுகளை நீங்கள் படித்ததில்லையா?
புலிகேசி சார், என்ன எழுதனம்ன்னு சொல்லுங்களேன். அதையே பிரசுரிக்கலாம்.
ராதாகிருஷ்ணன் சார், கண்ட கண்டவங்க மரியாதை இல்லாம எழுதற பின்னூட்டத்துக்கு நீங்க பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை !
நல்ல கருத்து உள்ள கதை
மணி...இதைவிட அசிங்கமாக..அநாகரிகமாக ..பல பின்னூட்டங்கள் வந்து..அவற்றை நான் delete செய்துவிட்டேன்.,
வருகைக்கும்..ஆதரவுக்கும் நன்றி..
வருகைக்கு நன்றி..நசரேயன்
வருகைக்கு நன்றி rapp
/
நம் நியாயம்..எடுபடாது..என்ற நிலையில்..ஒதுங்கி செல்வதே..நல்லது./
கரெக்ட்
/
ராதாகிருஷ்ணன் சார், கண்ட கண்டவங்க மரியாதை இல்லாம எழுதற பின்னூட்டத்துக்கு நீங்க பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை !
/
ஆமாம் ராதாகிருஷ்ணன் சார்.
//// மங்களூர் சிவா said...
/
ராதாகிருஷ்ணன் சார், கண்ட கண்டவங்க மரியாதை இல்லாம எழுதற பின்னூட்டத்துக்கு நீங்க பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை !
/
ஆமாம் ராதாகிருஷ்ணன் சார்.////
வருகைக்கும்..ஆதரவுக்கும்...நன்றி.சிவா
Post a Comment