Tuesday, November 18, 2008

விவசாயிகளும்...தமிழ் திரைப்படங்களும்...

இப்போதெல்லாம்...விவசாயிகள் பற்றியும்...விவசாயம் குறித்தும்..தமிழ்படங்கள் வருவதில்லை...

அப்படியே ..கிராமத்து படம் என்றாலும்...நாட்டாமையும்...கொடுமை நிறைந்த மிராசுதார்..பண்ணையார் ..ஆகியவர்களையும்..அவர்களது..பணம்..பதவி..திமிர் பற்றியுமே கூறி வருகின்றன.இப்போது நகரத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு...நெற்பயிர் ..எப்படி இருக்கும் என்று கூட தெரியாது..

சென்னையில் ஆரம்பித்து..தெற்கே..செங்கல்பட்டு வரையிலும்...மேற்கே..கிட்டத்தட்ட அரக்கோணம் வரை..விளை நிலங்கள் எல்லாம்...வீடுகளாகவும்..தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன.திருச்சியில்..சமயபுரம் வரை..நகரம் வீங்கி விட்டது.

அந்த நாட்களில்..மக்களைப் பெற்ற மகராசி,தை பிறந்தால் வழி பிறக்கும்..போன்ற படங்கள் ...அவற்றின் பாடல்கள்..விவசாயியின் பெருமைகளை உணர்த்தும்.உதாரணத்துக்கு அப்படிப்பட்ட பாடல்களின் சிலவரிகள்.

நெத்தி வேர்வை சிந்தினோமே...முத்து முத்தாக.._அது
நெல்மணியா காச்சிருக்கு கொத்து..கொத்தாக

இது பிள்ளைக்கனியமுது .....படப்பாடல்.

காடு விளையட்டும் பெண்ணே -நமக்கு
காலம் இருக்குது பின்னே

காடு விளஞ்சென்ன மச்சான்-நமக்கு
கையும் ..காலும் தானே மிச்சம்..

இது..விவசாயிகளின் அவல நிலை குறிக்கும்..தாய்க்கு பின் தாரம் பாடல்...

போட்டது மொளைச்சதடி
கை நிறைய கேட்டது கெடச்சதடி

இது நவராத்திரி பாடல்

எல்லாப்பாடல்களையும் விட மறக்கமுடியா பாடல்.மக்களைப் பெற்ற மகராசியில் பட்டுக்கோட்டையாருடையது.

மணப்பாறை..மாடுகட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுதுபோடு ..செல்லக்கண்ணு
பசும் தழியைப்போட்டு பாடுபடு சின்னக்கண்ணு

ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி விதை விதைச்சு
நாத்தை பிடுங்கி நட்டுப்போடு செல்லக்கண்ணு
தண்ணிய ஏத்தம் பிடுச்சி
எறைச்சுப்போடு சின்னக்கண்ணு

கதிர நல்லா வெளயவச்சு
மருத ஜில்லா..ஆளைவைச்சி
அறுத்துப்போடு களத்துமேட்டில செல்லக்கண்ணு
சும்மா..அடிச்சு தூத்தி
அளந்து போடு சின்னக்கண்ணு

பொதி ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தயிலே
விருதுநகர் வியாபாரிக்கு செல்லக்கண்ணு
வித்துப்போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு

சேத்த பணத்தை சிக்கனமா
செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு
அவங்க..ஆறை..நூறு..ஆக்குவாங்க ..சின்னக்கண்ணு

(பாடல்வரிகள் என் ஞாபகத்திலிருந்து எழுதியவை..ஆங்காங்கே..சில வார்த்தைகள் மாறியிருக்கக்கூடும்)

விவசாயி படத்தில்..மருதகாசி பாடல்...

கடவுள் எனும் முதலாளி..
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயீ....விவசாயீ

முன்னேற்றபாதையில் மனசை வைச்சி
முழுமூச்சாய் அதற்காக உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து - பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன்
விவசாயீ

இனி இது போன்ற பாடல்களை திரைப்படங்களில் பார்க்க முடியுமா?

13 comments:

ILA said...

nammala vittuteengala?

T.V.Radhakrishnan said...

புரியவில்லை..இளா

ILA said...

vivasaayi- paattai vittutteengalonnu ninaikirein

T.V.Radhakrishnan said...

/// ILA said...
vivasaayi- paattai vittutteengalonnu ninaikirein///


ஏற்கனவே..விவசாயி பாட்டைப்பற்றி..எம்.ஜி.ஆர்.,பாடல்களும்..அறிவுரைகளும் என்ற பதிவில் எழுதி உள்ளேன்..
மருதகாசியின் அப்பாடலையும்...வரிகளையும் மறக்கமுடியுமா?

T.V.Radhakrishnan said...

இளா..அப்பாடல் வரிகளையும் சேர்த்துவிட்டேன்

குடுகுடுப்பை said...

what yaar summa vivasaayi, nellunu ore bore yaa.

rapp said...

ராமராஜன் புதுப் படம் எடுக்கிறாரே, பாக்கலாம்.

T.V.Radhakrishnan said...

/// குடுகுடுப்பை said...
what yaar summa vivasaayi, nellunu ore bore yaa///

:-))))

T.V.Radhakrishnan said...

//rapp said...
ராமராஜன் புதுப் படம் எடுக்கிறாரே, பாக்கலாம்.//

:-((((

மங்களூர் சிவா said...

ம் இனி எங்கே இது போன்ற பாடல்களை எதிர்பார்க்க :((

மங்களூர் சிவா said...

/
rapp said...

ராமராஜன் புதுப் படம் எடுக்கிறாரே, பாக்கலாம்.
/

:)))))))

T.V.Radhakrishnan said...

///மங்களூர் சிவா said...
ம் இனி எங்கே இது போன்ற பாடல்களை எதிர்பார்க்க :((///

:-(((((

T.V.Radhakrishnan said...

//// மங்களூர் சிவா said...
/
rapp said...

ராமராஜன் புதுப் படம் எடுக்கிறாரே, பாக்கலாம்.
/

:)))))))////

nanri siva