1.இந்த உலகில் எங்கு சென்றாலும் காடு வெட்டியவன் தமிழன்,கழனியாகியவன் தமிழன்,பாடுபட்டவன் தமிழன்,பறிகொடுத்தவனும் தமிழன் என்பதைத்தான் காண்கிறோம்.தென்னாப்பிரிக்கா முதல் தென்னிலங்கை வரை இந்த அநியாயம் இருந்து வருகிறது.
2.நான் இந்திராகாந்தியைப்பார்த்த போது..எனக்கே புரியாத உந்துதலால்..ஏன்,எதற்கு என்றெல்லாம் சிந்திக்காமல்,அவர் பாதம் தொட்டு வணங்கினேன்.'no,no!Nofeet touching please'என்றார் பிரதமர் கனிவோடு...சொன்னவர் ஜெ.
3.ஓ..கிரேட் அண்ணா..அவர் சாதனை வீரர்.அண்ணாவை நீங்கள் இழந்தது துர்பாக்கியமே.அவருக்கு இருந்த சக்தியும்,மதிப்பும் தமிழ்நாட்டில் வேறோரு தலைவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே! இதை சொன்னவர் பால் தாக்கரே, ஆனந்தவிகடன் 1973ல் அவரிடம் எடுத்த பேட்டியில்.
4.முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி,தயாநிதி தெரியும்..புகழ்,அன்பு என்ற மகன்களைத் தெரியுமா? கலாநிதிக்கு புகழ் என்றும்,தயாநிதிக்கு அன்பு என்றும் கலைஞர் பெயர் வைத்தார்.
5.பழைய ஜகன்மோகினி படத்தை ரீமேக் செய்யும் எண்ணம் வந்ததுமே..ஜெயமாலினி ரோலில் யாரை நடிக்க வைப்பது என்ற எண்ணம் வந்ததுமே எங்கள் ஞாபகத்தில் வந்தவர் நமிதா என்கிறார் இயக்குநர் விஸ்வநாதன்
6.அமெரிக்காவில் எனக்குத் தெரிந்த நண்பர் வீட்டிற்கு ஒரு முறை சென்றேன்.அவர் தன் 3 வயது பெண்ணைக்காட்டி,இவளுக்கு தமிழே வரவில்லை, இனிமேல் தமிழில்தான் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம் என்றார்.அப்போது,அவரின் 1 வயது குழந்தை அழுதது.உடனே குட்டிப்பெண்..அப்பா லிட்டில் பிரதர் ஈஸ் கிரையிங்க் என்றாள்.நண்பர் தமிழில் சொல் என்றதும்,அவள் தட்டுத் தடுமாறி தம்பிக்கு தண்ணீலே கண்ணு என்றாள்.அனைவருக்கும் சிரிப்பு.
1 comment:
nanri Chuttiarun
Post a Comment