Thursday, November 6, 2008

டோண்டு சாரும்..மூன்று லட்சமும்..

நான் மரத்தடி,தமிழ்மணம் ஆகியவற்றை படித்து வந்த நேரம்...

தமிழ்மணத்தில்..தமிழச்சியின் எழுத்துகளும்...அவரின் பிரச்னைகளை எதிகொள்ளும் பாங்கும் எனக்குப் பிடிக்கும்...பெரியாரின் கொள்கைகளில்..அவரின் பங்கு டைபிஸ்ட் பங்குதான்..என்றாலும்..மற்ற அவர் சொந்தமாக இடும் பதிவுகளும் சிந்தனையை தூண்டுபவையாகும்..

அடுத்து..கோவிசாரின் பதிவுகள்..மிக அருமையான பல பதிவுகள் ..என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

மூன்றாவதாக..டோண்டுவின் பதிவுகள்..

சாதாரணமாக ஒரு பதிவு சிறிதாய் இருந்தாலே படிக்கத்தோன்றும்..(அதனால்தான்..பத்திரிகைகளும் ஒரு பக்க கதைகளை விடுவதில்லை)..ஆனால்..டோண்டுவின் பதிவுகள்..நீளமானவை..இருப்பினும்...விஷயம் இருப்பதால் படிக்கத் தோன்றும்..அதனால்தான்..அவர் ஹிட் கவுண்டர் 3லட்சம் வருகையாளரை நெருங்கப்போகிறது.

சில சமயங்களில்..இணையப்பக்கங்களில் பதிவிடுவோர்..பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவே இருக்க வேண்டும்..என விதி உள்ளதோ..என எண்ணத்தோன்றியுள்ளது.ஆனால்...டோண்டுவின் சாதனையைப் பார்க்கும் போது ..அது தவறு என்றே தோன்றுகிறது.டோண்டு பதிவிடாத தலைப்புகளே இல்லை எனலாம்.,

மதர் இந்தியா..என்று..ஒரு ஆங்கில பத்திரிகை வரும்..அதன் ஆசிரியர் 'பாபு ராவ் படேல்'..அவரின் கேள்வி பதில்கள்..அந்த நாட்களில் பிரசித்தம்...கிட்டத்தட்ட அதே பாணி..டோண்டுவுடையது.சுவாரஸ்யமான் பதில்கள்.

அவரைப்பற்றி..சொல்லும்போது..ஒரு குறையையும் சொல்ல ஆசைப்படுகிறேன்..தன்னைப் பற்றி தானே சற்று அதிகமாக சொல்லிக்கொள்வது...

ஆமாம்..இன்று எல்லோரிடமும்தான் அது உள்ளது..என்கிறீர்களா? அது
வும் சரிதான்..

தன்னால் அறிவிக்கப்பட்ட விருதை தானே வாங்கிக்கொள்வது இல்லையா ..அதுபோலத்தானே இதுவும்.

டோண்டு சார்..மேன்மேலும்..பல மைல் கற்களை கடக்க வாழ்த்துகள்.

6 comments:

நசரேயன் said...

நானும் வாழ்த்துகிறேன் உங்களோட சேர்ந்து

குடுகுடுப்பை said...

டோண்டுவிற்கு வாழ்த்துக்கள்

அர டிக்கெட்டு ! said...

நீ முதுகு சொரியரது உங்க உரிமை அத நான் தடுக்க முடியாது ஆனா நடுநிலை மாதிர ஆக்டு குடுத்தீங்க பாருங்க...சகிக்கல!
பி.கு...டோண்டு பதிவுக்கு மட்டுமில்ல பல போர்னோகிராஃபி பதிவுகளுக்கு கூடத்தான் பல லட்சம் ஹிட்ஸ் வரும் அதுக்கும் பாராட்டி எழுதுவீங்களோ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
நானும் வாழ்த்துகிறேன் உங்களோட சேர்ந்து//

வருகைக்கு நன்றி
நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
டோண்டுவிற்கு வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நியூஸ் நரி! said...
நீ முதுகு சொரியரது உங்க உரிமை அத நான் தடுக்க முடியாது ஆனா நடுநிலை மாதிர ஆக்டு குடுத்தீங்க பாருங்க...சகிக்கல!//


நீங்கள் என் முந்தைய பதிவுகளைப் படித்ததில்லையா?
பரவாயில்லை.
வருகைக்கு நன்றி
நியூஸ் நரி!