கொழும்பு: இலங்கைத் தமிழர் நிவாரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 7 கோடி ரூபாயை இலங்கை அரசு எடுத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும்போர் நடைபெற்று வருகிறது. இதில், லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு நாடுகளில் இருந்து 7 கோடியே பத்து லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டு அங்கு அனுப்பப்பட்டது. அந்த நிதி, இலங்கை மத்திய வங்கியில், தமிழர் மறுவாழ்வு அமைப்பின் கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தப் பணத்தை இலங்கை அரசு எடுத்துக்கொண்டதாக அந்த வங்கியின் புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் கொழும்பு சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி குமுதம்
No comments:
Post a Comment