மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பாஸ்கர் வாஹா.இவர் மாத வருமானம் 1630ரூபாய்.இவர் 1984முதல் 1989 வரை லட்சக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.இவரிடம் உள்ள கார்களின் மதிப்பு மட்டுமே20லட்ச ரூபாய்.
தவிர மனைவி பெயரிலும் நிறைய அசையா சொத்துக்கள்.இவரை லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்து விசாரித்தது.
பின் நீதி மன்றம் இவருக்கு 7 ஆண்டு சிறையும் 3லட்சம் அபராதமும் விதித்தது.அவரது மனைவிக்கு 2ஆண்டு சிறையும்2லட்சம் அபராதமும் விதித்தது.
நீதிபதி தன் தீர்ப்பில்..
அரசு ஊழியர் வாங்கிய லஞ்ச பணத்தை மனைவியும் அனுபவித்துள்ளார்.அதனால் கணவனுக்கு உடந்தையாய் இருந்த குற்றத்துக்காக அவருக்கும் தண்டனை விதிக்கப்படுகிறது..என்று கூறியுள்ளார்.இனி மனைவி பெயரில் சொத்து இருந்தால் தொடமுடியாது என்ற காலம் போய் விட்டது
18 comments:
ஒழுங்கீனமான கணவனை திருத்தாத பெண்களுக்கு தண்டனை ஏற்கக் கூடியதுதான்.
யார் வீட்டில் கொள்ளையடித்தாலும் எனக்கு கவலை இல்லை என் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பதையும், அது தனக்கு தொடர்பில்லாதது என்று சொல்வதும் ஏற்கத்தக்கது அல்ல.
வால்மிகி கதைதான் நினைவுக்கு வருகிறது. தன் பாவத்தில் பங்கு கொள்வியா ? என்று மனைவியை பார்த்து வால்மிகி கேட்ட போது முடியாது என்றாளாம் மனைவி. அதன் பிறகே திருந்தி கொள்ளை அடிப்பதை விட்டுவிட்டு இராமாயணம் எழுதினானாம் வால்மிகி.
"இனி மனைவி பெயரில் சொத்து இருந்தால் தொடமுடியாது என்ற காலம் போய் விட்டது"
It was never like that. Your headline is misleading
மனைவியை, கணவன் செய்த தவறுக்காக தண்டிப்பதோ,கணவனை மனைவி செய்த தவறுக்காக தண்டிப்பதோ எனக்கு சரியாகப் படவில்லைங்க!
மனைவிக்கு தெரியாமலும், அவளால் இதைப்பற்றி எதுவும் செய்யமுடியாத சூழல் உண்டு.
குற்றம் செய்தவரைத்தான் தண்டிக்கனும்.
அபராதம் இட்டாலாவது பரவாயில்லை.ஜெயிலில் போடுவ தெல்லாம் அதிகம்னு எனக்கு தோனுது!
////மனைவிக்கு தெரியாமலும், அவளால் இதைப்பற்றி எதுவும் செய்யமுடியாத சூழல் உண்டு.////
இந்த மாதிரியான சூழல் நிறைய குடும்பங்களில் உண்டு. ஆனால் நீதி மன்றத்தில் மனைவி வாதாட புரவிசன் இருக்க முடியும் என நினைக்கிறேன். இந்த கேசில் மனைவியின் வாதம் தோற்றிருக்கலாம். இதுதான் உண்மையான நிலைமை என்றால் 'தீர்ப்பு நல்லாருக்கு'.
கணவன் செய்யும் தவறு தெரிந்தும் ..மனைவி அனுமதித்தால்..தண்டனையும் அவசியம்..
வருகைக்கும்..அருமையான கருத்துக்கும் நன்றி கோவி
மனைவிக்கும் நீதிமன்றம் சிறை தண்டனையும்..அபராதமும் போட்டிருப்பதால் தான் அப்படிப்பட்ட தலைப்பிட்டேன்.மேலும் சொத்துவிவரங்கள் தெரியவரும்போது..நினைத்துப்பாருங்கள்...
வருகைக்கு நன்றி பிரபு ராஜதுரை
செய்த்திதாள்களில் வந்திருந்த செய்தி...இவ்வளவுதான்..
முழு விவரங்களும் வரவில்லை வருண்
நீதி மன்றங்கள் என்றாலே அவரவர் தரப்பை சொல்ல சந்தர்ப்பங்கள் வழங்கப்படுமே
வருகைக்கு நன்றி மோகன் கந்தசாமி
*****கோவி.கண்ணன் said...
ஒழுங்கீனமான கணவனை திருத்தாத பெண்களுக்கு தண்டனை ஏற்கக் கூடியதுதான்.*****
ஆண்கள் சாதரணமாக திருந்துற ஜென்மங்களா என்ன?!!!
தன் பேங்க் அக்கவுண்டையே மனைவியிடம் காட்டாத எத்தனை "வீர ஆண்கள்" இருக்காங்க தெரியுமா நம் பாரதத்தில்?!
இந்த கலி(போர்ன்)காலத்தில், நீங்க இதிகாசங்களை கோட் பண்ணுவது வேடிக்கை!
////வருண் said...
*****கோவி.கண்ணன் said...
ஒழுங்கீனமான கணவனை திருத்தாத பெண்களுக்கு தண்டனை ஏற்கக் கூடியதுதான்.*****
ஆண்கள் சாதரணமாக திருந்துற ஜென்மங்களா என்ன?!!!
தன் பேங்க் அக்கவுண்டையே மனைவியிடம் காட்டாத எத்தனை "வீர ஆண்கள்" இருக்காங்க தெரியுமா நம் பாரதத்தில்?!
இந்த கலி(போர்ன்)காலத்தில், நீங்க இதிகாசங்களை கோட் பண்ணுவது வேடிக்கை!////
வருண்...வருமானத்திற்கு அதிகமாக..செலவுகள் செய்து வந்தால்..மனைவிக்கு சந்தேகம் வராதா? அவள் சற்று விழிப்புடன் இருந்தால்..குடும்பத்தில்..எதிகாலத்தில் நடைபெறும்..விரும்பத்தகாததை தடுத்து விடலாமே!!!
அவன் வாங்கிக் கொடுத்த பொருட்களை சட்டங்களின் துணையோடு அந்தப் பெண்ணிடமிருந்து திரும்ப எடுக்கலாம். சிறைத்தண்டனை என்பது சரியல்ல. கணவன் செய்யும் தவறுகளுக்கு மனைவியை எப்படி பொறுப்பாக்கலாம். எத்தனையோ சொல்லிப் பார்த்தும் கேட்காத கணவனிடம் வேறு வழியில்லாமல் வாழ்க்கை நடத்தும் பெண்களையும் இது பாதிக்குமே.
பல கணவன்மார்கள் தங்களின் மனைவியிடம் தங்கள் வருவாயைப்பற்றிச் சொல்வது கூட இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
///சுல்தான் said...
அவன் வாங்கிக் கொடுத்த பொருட்களை சட்டங்களின் துணையோடு அந்தப் பெண்ணிடமிருந்து திரும்ப எடுக்கலாம். சிறைத்தண்டனை என்பது சரியல்ல. கணவன் செய்யும் தவறுகளுக்கு மனைவியை எப்படி பொறுப்பாக்கலாம். எத்தனையோ சொல்லிப் பார்த்தும் கேட்காத கணவனிடம் வேறு வழியில்லாமல் வாழ்க்கை நடத்தும் பெண்களையும் இது பாதிக்குமே.
பல கணவன்மார்கள் தங்களின் மனைவியிடம் தங்கள் வருவாயைப்பற்றிச் சொல்வது கூட இல்லை என்பது நிதர்சனமான உண்மை.///
வருகைக்கும் ..கருத்துக்கும்..நன்றி சுல்தான்
ஐயா, இதெல்லாம் நம்ம ஊரு அரசியல் வாதிகளுக்கு விதி விளக்கா ?
வருகைக்கு நன்றி நசரேயன்
****1. வருண்...வருமானத்திற்கு அதிகமாக..செலவுகள் செய்து வந்தால்..மனைவிக்கு சந்தேகம் வராதா?
அவள் சற்று விழிப்புடன் இருந்தால்..குடும்பத்தில்..எதிகாலத்தில் நடைபெறும்..விரும்பத்தகாததை தடுத்து விடலாமே!!!***
1. சரி,வரும்னு வைத்துக்கொள்வோம்
2. வந்ததும் என்ன செய்து இருக்கனும்?
போலிஸில் அல்லது இண் கம் டாக்ஸ் ஆஃபிஸ் ல போய் ரிப்போர்ட் பண்ணி இருக்கனுமா?
அப்படி ரிப்போர்ட் பண்ணினால், தண்டனை இல்லாமல் கணவனை காப்பாற்றி இருக்கமுடியுமா?
இல்லை ஒரு மெடல் கிடைத்து இருக்குமா?
இதைத்தான் ஒரு நல்ல மனைவியிடம் இருந்து நம்முடைய கரப்ட்டெட் நாட்டில் எதிர்பார்க்கிறீர்களா?
வணக்கம்
\\
இதைத்தான் ஒரு நல்ல மனைவியிடம் இருந்து நம்முடைய கரப்ட்டெட் நாட்டில் எதிர்பார்க்கிறீர்களா?
\\
அவன நிருத்தச்சொல்லு நானும் நிறுத்தரேன் - னு சொல்லுரது எந்தவிதத்திலும் நல்ல சமுதாயத்திர்கு உதவாது
நன்றி
இராஜராஜன்
வருகைக்கு நன்றி வருண்
///இராஜராஜன் said...
வணக்கம்
\\
இதைத்தான் ஒரு நல்ல மனைவியிடம் இருந்து நம்முடைய கரப்ட்டெட் நாட்டில் எதிர்பார்க்கிறீர்களா?
\\
அவன நிருத்தச்சொல்லு நானும் நிறுத்தரேன் - னு சொல்லுரது எந்தவிதத்திலும் நல்ல சமுதாயத்திர்கு உதவாது
நன்றி
இராஜராஜன்//
நல்லாருக்கு'இராஜராஜன்
வருகைக்கு நன்றி.
Post a Comment