Monday, November 10, 2008

நான் யார்...நான் யார்...(கவிதை)

நான்
உடல் வலிமையுள்ளவன் என்கிறாயே
உன் அன்னைக்கு நன்றி சொல்
உதிரத்தை பாலாய் கொடுத்தவள்
அவர்

நான்
பண்புள்ளவன் என்கிறாயே
உன் தந்தையை வணங்கு
உன்னை ஆக்கியவர்
அவர்

நான்
அறிவாளி என்பவனே
உன் ஆசிரியரை நினை
உன் அறிவை வளர்த்தவர்
அவர்

நான்
நல்ல கணவன் என்கிறாயே
உன் மனைவியைக் கேள்
உனக்கு அப்பெயர் வரக் காரணம்
அவள்

நான்
நல்ல தந்தை என்பவனே
உன் வாரிசுகளைக் கேள்
உன் கடமையைசெய்ததை உரைப்பவர்
அவர்

நான்
நல்லவன் என பெருமையுறுபவனே
உன் உடல் சுமக்கப்படும் போது
உன் சுற்றமும்..நட்பும் சொல்லட்டும்
அதை

4 comments:

நசரேயன் said...

நல்ல கவிதை ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

varukaikku nanri nasareyan

குடுகுடுப்பை said...

நல்ல கவிதை

//நான்
நல்ல கணவன் என்கிறாயே
உன் மனைவியைக் கேள்
உனக்கு அப்பெயர் வரக் காரணம்
அவள்//

அ(வ)ப்பெயர் அப்படின்னு படிச்சிட்டேன், அது ஏன் தப்பா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்ககிட்டே எனக்கு பிடிச்சதே...எல்ல விஷயத்திலேயும்..உங்களை முன்னிறுத்தி பார்ப்பதுதான்