Friday, July 17, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 18

1972ல் வந்த படங்கள்

ராஜா
ஞானஒளி
பட்டிக்காடா..பட்டணமா
தர்மம் எங்கே
தவ புதல்வன்
வசந்த மாளிகை
நீதி

இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டு அவருக்கு..

வெளியான 7 படங்களில்4 படங்கள் 100 நாட்கள் படம்.2 வெள்ளிவிழா படம். ..தர்மம் எங்கே..மட்டுமே எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

வசந்த மாளிகை வெள்ளிவிழா படம்.இப்படம் இலங்கையிலும் வெள்ளிவிழா கொண்டாடியது.வாணிஸ்ரீ கதாநாயகி.வசந்தமாளிகை செட் நீண்ட நாட்கள் கலையுலகில் பேசப்பட்டது.

ராஜா..வழக்கம் போல பாலாஜியின் படம்.ஹிந்தியில்..தேவானந்த் நடித்து வந்த ஜானி மேரா நாம் படம்..ஜெயலலிதா கதாநாயகி.

பட்டிக்காடா..பட்டணமா..மாதவன் இயக்கத்தில் ஜெ யுடன் சிவாஜி.

தவ புதல்வன்..முக்தா ஃபிலிம்ஸ் படம்..

நீதி..மீண்டும்...இவ்வருடம் பாலாஜியின் படம்.

எந்த ஒரு நடிகரும்..ஒரே வருடத்தில்..6 வெற்றி படங்களைக் கொடுத்த தில்லை.

இச்சாதனை முறியடிக்க முடியா சாதனை.

தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து கருப்பு வெள்ளை படங்களில் உச்ச கட்ட வெற்றி பெற்ற படம் பட்டிக்காடா பட்டணமா.

இன்று வரை தமிழின் எந்த கருப்பு வெள்ளை படமும் பெறாத வசூலை பெற்ற படம் - பட்டிக்காடா பட்டணமா

இந்த வருடத்தின் முதல் வெள்ளி விழா படம் இது


1973 படங்கள் அடுத்த பதிவில்.

7 comments:

Gokul said...

தங்களின் சிவாஜி கணேசன் பற்றிய பதிவு அருமையாக இருக்கிறது. சிவாஜியின் 1975 ஆண்டிற்கு பின்னான படங்களை பற்றி உங்களின் கருத்திற்காக காத்திருக்கிறேன்.

சகாதேவன் said...

'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' பாட்டை, சிவாஜி தான்சேன் ஆகத் தோன்றி பாடுவாரே அந்த பாட்டும் காட்சியும் தவப்புதல்வனில் எனக்கு ரொம்ப பிடிக்கும்
சகாதேவன்

ஜோ/Joe said...

ரொம்ப சுருக்கமா முடிச்சுட்டீங்க.

பட்டிக்காடா பட்டணமா -வும் வெள்ளிவிழா தான் ..அதுவும் மதுரையில் ..அது மட்டுமல்ல கறுப்பு வெள்ளை படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்த படம் பட்டிக்காடா பட்டணமா.

இதை தட்டச்சு செய்யும் போது சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் பட்டிகாடா பட்டணமா பார்த்துகிட்டிருக்கேன்.

ஜோ/Joe said...

1972 -ம் ஆண்டு நடிகர் திலகத்தின் இமாயல சாதனைகளை தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீதர் 'ஹீரோ 72' என்ற பெயரில் படம் பூஜை போட்டார் ..பின்னர் ஏகப்பட்ட காலதாமதத்துக்குப் பின் அது 'வைர நெஞ்சம்' என்ற பெயரில் வெளிவந்தது.

ஜோ/Joe said...

//இப்படம் இலங்கையிலும் வெள்ளிவிழா கொண்டாடியது//

கொழும்பில் இரு திரையரங்கங்களில் வெள்ளிவிழா ,யாழ்பாணத்தில் ஒன்றில் வெள்ளிவிழா ,மற்றொன்றில் 100 நாள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கோகுல்
சகாதேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோ/Joe said...
பட்டிக்காடா பட்டணமா -வும் வெள்ளிவிழா தான் ..அதுவும் மதுரையில் ..அது மட்டுமல்ல கறுப்பு வெள்ளை படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்த படம் பட்டிக்காடா பட்டணமா.//

அவசரத்தில் விட்டுப் போய் விட்டது.பதிவில் சேர்த்துவிட்டேன்.தகவலுக்கு நன்றி ஜோ