Tuesday, July 28, 2009

ஜெ வும்..விஜய்காந்தும்..

விஜய்காந்த் கட்சி ஆரம்பித்ததால்..அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க., என்று சொல்லலாம்.

2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில்...பல இடங்களில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில்.அ.தி.மு.க., தோல்வியடைந்தது.தி.மு.க., கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது.இத் தேர்தலில் விஜய்காந்த் வாங்கிய ஓட்டுகள் அ.தி.மு.க., விற்கு விழுந்திருந்தால்..ஜெ..மீண்டும் முதல்வர் ஆகி இருக்கமுடியும்.

ஏன்..அதனால் தி.மு.க., பாதிக்கப்படவில்லையா? என கேள்வி எழும்பலாம்..

உண்மையில்..விஜய்காந்தால்..தி.மு.க., விற்கு பெரும் பாதிப்பு இல்லை எனலாம்.ஏனெனில்..தி.மு.க., ஒரு கட்டுக்கோப்பான கட்சி..அதற்கான வாக்கு வங்கியில் இருந்து ஓட்டுகளை மற்ற கட்சிகள் வாங்க முடியாது.மேலும்..சென்ற தேர்தலில்..தி.மு.க., சக்தி வாய்ந்த கூட்டணி அமைத்திருந்தது.அ.தி.மு.க., ஓட்டுகளே பிரிந்து விஜய்காந்திற்கு விழுந்தன எனலாம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும்...ஆயிரம் ஊழல் புகார்கள் கூறப்பட்டாலும்...தி.மு.க., விற்கும்..அ.தி.மு.க.விற்கும்..15 லட்சம் வாக்குகளே வித்தியாசம்..ஆனால் தே.மு.தி.க., பெற்ற வாக்குகள் 30 லட்சத்திற்கு மேல்.இவர்கள் ஒரே அணியில் செயல்பட்டிருந்தால்...தேர்தல் முடிவிலும் மாற்றம் இருந்திருக்கும்.மேலும்..அ.தி.மு.க.,வில் பூத் ஏஜண்டுகள் விலைபோனதையும் ஜெ கூறினார்.இது யார் தவறு?

..இனி வரும் தேர்தலில்..விஜய்காந்துடன் கூட்டணி வைத்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலை இனி திராவிட கட்சிகளிடையேக் கூட உருவாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்நிலையில்..இடைத்தேர்தலில் யாரும் ஓட்டுப் போட வேண்டாம்..என அ.தி.மு.க., கேட்பதை விடுத்து..விஜய்காந்திற்கு ஆதரவை தெரிவிக்க வேண்டும்.அப்படிப்பட்ட நிலை உருவானால்..தமிழகத்தில் இனி வரும் காலங்களில் பல மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்.

விஜய்காந்தும்...பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலே வெற்றி பெறமுடியும் என்பதை உணர வேண்டும்..இல்லையேல்...இனி வரும் தேர்தல்களில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கூட கிடைக்க மாட்டார்கள்.

15 comments:

goma said...

அரசியலையும் நல்லா சோப்பு போட்டு ஊறவச்சு ,அடிச்சு துவைச்சு, பிழிஞ்சு உதறி ,சூப்பரா காய வைக்கிறீங்க.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

விஜயகாந்த் வாங்கிய ஓட்டுக்களும் ரஜினியின் அரசியல் பிரவேசமும்

Unknown said...

விஜயகாந்துடன் கூட்டணி வைக்க செல்வி ஜெயாவின் ego இடம் கொடுக்காதே. அதுவும் அவருக்கு டாகடர் ராமதாஸ் போன்றவர்களைத்தான் பிடிக்கும். அல்லது வைகோ போல் என்ன கேவலப் பட்டாலும் அங்கேயே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு அவரின் விஜயகாந்தின் தன்மானம் இடம் கொடுக்காது. அப்படியே அவர் கௌரவமாக நடத்தப் பட்டாலும் அவர் தன் சுயபலத்தைக் காட்ட முடியாது. பத்தோடு பதினொன்றாகி விடுவார். Last but not least. காலம் என்பது எதனையும் மாற்றக் கூடிய சக்தி படைத்தது. விஜகாந்தால் திமுகவிற்கு பாதிப்பு வரக் கூடிய காலமும் வரலாம். வராது என்று இறுமாப்புடன் இருந்தால் அது அவ(ரவ)ர்களின் அறியாமையைத்தான் காட்டும்.

அக்னி பார்வை said...

விஜயகாந்துக்கு இப்ப ராஜயோகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
அரசியலையும் நல்லா சோப்பு போட்டு ஊறவச்சு ,அடிச்சு துவைச்சு, பிழிஞ்சு உதறி ,சூப்பரா காய வைக்கிறீங்க.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி கோமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

..//SUREஷ் (பழனியிலிருந்து) said...
விஜயகாந்த் வாங்கிய ஓட்டுக்களும் ரஜினியின் அரசியல் பிரவேசமும்..//
உங்கள் பதிவை முன்பே படித்திருக்கிறேன்..மீண்டும் படித்தேன்.நல்ல அலசல்.வருகைக்கு நன்றி சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஆனந்த்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
விஜயகாந்துக்கு இப்ப ராஜயோகம்//
இடைத்தேர்தலில் வெல்லட்டும்.

மணிகண்டன் said...

***
தி.மு.க., ஒரு கட்டுக்கோப்பான கட்சி..அதற்கான வாக்கு வங்கியில் இருந்து ஓட்டுகளை மற்ற கட்சிகள் வாங்க முடியாது
***

இப்ப தானா ? இல்லாட்டி எப்போதுமே இப்படி தானா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
***
தி.மு.க., ஒரு கட்டுக்கோப்பான கட்சி..அதற்கான வாக்கு வங்கியில் இருந்து ஓட்டுகளை மற்ற கட்சிகள் வாங்க முடியாது
***

இப்ப தானா ? இல்லாட்டி எப்போதுமே இப்படி தானா ?//

உங்களுக்குத் தெரியாததா? மணிகண்டன்

மணிகண்டன் said...

***
உங்களுக்குத் தெரியாததா? மணிகண்டன்
***

உங்க கிட்டேந்து வந்தா அது தனி தானே !

தமிழ் மதியன் said...

** தி.மு.க., ஒரு கட்டுக்கோப்பான கட்சி..அதற்கான வாக்கு வங்கியில் இருந்து ஓட்டுகளை மற்ற கட்சிகள் வாங்க முடியாது **

அப்படியானால் கடந்த தேர்தல்களில் ஒருமுறை துறைமுகம் தொகுதியில் கருணாநிதி மற்றும் வெற்றி பெற்ற நிலையில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி தோற்றுபோனதே!!!!????... தனிஒருவரராக சட்டசபைக்கு செல்ல பயந்த கருணாநிதி எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்தாரே???.. அது ஏன்???

http://thayagapookkal.blogspot.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ் மதியன் said...

http://thayagapookkal.blogspot.com//

ஐயா..ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களுக்கு என்று குறிப்பிட்ட சதவிகிதம் வாக்களிப்பவர் உண்டு.அதுபோல் தி.மு.க., விற்கான் ஓட்டுகள் என்றும் சிதறியதல்ல.

தமிழ் மதியன் said...

////தமிழ் மதியன் said...
** தி.மு.க., ஒரு கட்டுக்கோப்பான கட்சி..அதற்கான வாக்கு வங்கியில் இருந்து ஓட்டுகளை மற்ற கட்சிகள் வாங்க முடியாது **

அப்படியானால் கடந்த தேர்தல்களில் ஒருமுறை துறைமுகம் தொகுதியில் கருணாநிதி மற்றும் வெற்றி பெற்ற நிலையில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி தோற்றுபோனதே!!!!????... தனிஒருவரராக சட்டசபைக்கு செல்ல பயந்த கருணாநிதி எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்தாரே???.. அது ஏன்???

http://thayagapookkal.blogspot.com//

ஐயா..ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களுக்கு என்று குறிப்பிட்ட சதவிகிதம் வாக்களிப்பவர் உண்டு.அதுபோல் தி.மு.க., விற்கான் ஓட்டுகள் என்றும் சிதறியதல்ல. //

அந்த வாக்கு வங்கியை மட்டும் வைத்து கொன்டு எந்த ஒரு தேர்தலிலும் திமுக ஜெயித்து விடமுடியாது.. சாமன்ய, நடுத்தர மக்களின் ஆதரவும் தேவை.. அதைதான் மக்களை ஏமாற்றி பல்வேறு வகைளில் கொள்ளை அடித்த பணத்தை கொண்டு விலைக்கு வாங்குகிறது திமுக.

உதாரணம் : ஷ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, மற்றும் பல.....

http://thayagapookkal.blogspot.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ் மதியன் said
அந்த வாக்கு வங்கியை மட்டும் வைத்து கொன்டு எந்த ஒரு தேர்தலிலும் திமுக ஜெயித்து விடமுடியாது.. சாமன்ய, நடுத்தர மக்களின் ஆதரவும் தேவை.. அதைதான் மக்களை ஏமாற்றி பல்வேறு வகைளில் கொள்ளை அடித்த பணத்தை கொண்டு விலைக்கு வாங்குகிறது திமுக.

உதாரணம் : ஷ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, மற்றும் பல.....///
ஐயா..நீங்கள் சொல்வது உண்மைதான்.நடுத்தர மக்கள்...எந்தக் கட்சியும் சாராதவர்கள் ஓட்டுகள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கின்றன.ஆனால்..இவர்கள் விலைக்கு வாங்க முடியாதவர்கள்.இவர்கள்..'குணம் நாடி..குற்றமும் நாடி..இவற்றுள் மிகை நாடி" அவ்வப்போது கட்சிகளுக்கு ஒட்டளிக்கிறார்கள்.