Sunday, July 12, 2009

திருவள்ளுவர் சிலை திறப்பும்...துரைமுருகன் பதவி பறிப்பும்

ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி பெங்களூரு வில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.18 ஆண்டுகளாக சிலை திறக்க அனுமதி அளிக்காத கன்னடர்கள்..பதிலுக்கு கன்னட கவி சர்வஞ்னர் சிலையை சென்னையில் வைக்க அனுமதி கொடுத்தால்...திருவள்ளுவர் சிலை அமைக்க ஒப்புக் கொள்வதாக கோரிக்கை வைக்க..தமிழக அரசும் ஒப்புக் கொண்டது.

சமீபத்தில் சென்னை வந்த எடியூரப்பா கலைஞரிடம் இது குறித்துப் பேச..கலைஞரும் ஆகஸ்ட் 10 அல்லது 13ஆம் நாள் சர்வஞ்னர் சிலையை சென்னையில் வைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனிடையே..ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்துக் கர்நாடகாவிற்கும்..தமிழகத்திற்கும் சர்ச்சை இருந்துக் கொண்டிருக்கிறது.

கர்னாடகா முதல்வர் சென்னையில் கலைஞரை சந்தித்து...சிலைகள் பரிமாற்றம் பற்றி மட்டுமே பேசினார் என்றால் சரி.

இதற்கும்..துரைமுருகன் திடீரென பொதுப்பணித்துறையிலிருந்து விடுவிக்கப் பட்டதற்கும் சம்பந்தம் இருக்காது என நம்புவோமாக.

கர்நாடகாவும்..அப்படி ஒரு கோரிக்கைவைத்து.. கலைஞரும் அதற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

துரைமுருகன் பொதுப்பணித்துறையிலிருந்து விடுவிக்கப் பட்டது எதேச்சையாக நடந்திருக்கக்கூடும்.

5 comments:

மணிகண்டன் said...

duraimurugan poyaachaa ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

பொதுப்பணித்துறை மற்றும் சட்ட அமைச்சராய் இருந்தார்.இப்போது சட்ட அமைச்சர் மட்டுமே!

goma said...

எனக்கும் அரசியலுக்கும் காத தூரம்.இருந்தாலும் சொல்கிறேன்...சுடச் சுட செதிகளை விமரிசிக்கும் உங்கள் ’சோ’யிசம்! சூப்பர்

கலையரசன் said...

அப்படியா சொல்றீங்க?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
goma
கலையரசன்