உலகில் விளைகின்ற காய்கறிகளில் 13 சதவிகிதம் இந்தியாவில் விளைகின்றன.அதுபோல பழங்களில் 12 சதவிகிதம் இந்தியாவில் விளைகின்றன.குறிப்பாக மாம்பழம்,வாழைப்பழம் போன்ற பழங்கள்..பச்சைப் பட்டாணி,முந்திரி,வெங்காயம் ஆகியவை.ஆனால் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 1.38 சதவிகிதம் மட்டுமே.
2)மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே சங்க இலக்கியங்களைப் படைத்துப் பெருமை பெற்ற மொழி நம் தமிழ் மொழி.கி.பி.14 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இலக்கியப் பின்னணியைப் பெற தொடங்கிய ஆங்கில மொழி 600 ஆண்டுகள் மட்டுமே பழமை கொண்டது.
3)பாரதிக்குப் பின் தமிழுக்குப் பெருமை சேர்க்க வந்தவர்களில் கண்ணதாசன் மிக முக்கியமானவர்.5000க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் 6000 கவிதைகள் 232 புத்தகங்கள்,நாவல்கள்,நாடகங்கள் என முத்தமிழையும் வளர்த்த மாபெரும் கவிஞர் ஆவார்.
'நிரந்திரமானவன் அழிவதில்லை -எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை'
என்றவர் அவர்.
4)விலங்குகள் எல்லாம் காலால் நடக்கிறபடியால் 'கால்நடை' என்று அழைக்கப் படுகின்றன.மனிதனும் காலால் தான் நடக்கிறான்.அவனை ஏன் கால்நடை என்று சொல்வதில்லை? மனிதன் காலால் மட்டும் நடக்காமல்..மனத்தாலும் நடக்கிறான்..நாவினாலும் நடக்கிறான்..இந்த மனநடையும், நானடையும் விலங்குகளுக்கு இல்லை.
5)இருக்கும் தலைமுறைக்கு மட்டுமில்லாமல்..பிறக்கும் தலைமுறைக்கும் பயன்பட்டவர்களைத்தான் வாழ்ந்தவர்களாக வரலாறு கருதுகிறது.
6)வேலை நேரத்தில் பேசினால் உருப்படமாட்ட என்று தந்தை கண்டித்தும் அப்பாவிற்கு சவால் விட்டு..வேலை நேரத்திலும் பேசி சம்பாதிக்கிறான் அவன்..
அவன் தொழில்... வக்கீல்
7) இந்த வாரம் கல்யாண்ஜி கவிதை ஒன்று
ஓலைக் காற்றாடி சுழல
ஓடி வந்து
அண்ணாந்து பார்த்து
கண் இடுங்கச் சிரிக்கலாம்
அலுமியப் பறவைகளை.
எந்த குண்டும் இதுவரை
இங்கே விழுந்ததில் லையே!!
(நன்றி-ஆனந்த விகடன்)
17 comments:
கால் நடை, வக்கீல் விளக்கம் அருமை:)
வருகைக்கு நன்றி வானம்பாடிகள்
சுவையான தேங்காய்..மாங்காய்..பட்டாணி..
நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. பாராட்டுக்கள்.
கல்யாண்ஜியின் கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி பின்னோக்கி
//வேலை நேரத்தில் பேசினால் உருப்படமாட்ட என்று தந்தை கண்டித்தும் அப்பாவிற்கு சவால் விட்டு..வேலை நேரத்திலும் பேசி சம்பாதிக்கிறான் அவன்..
அவன் தொழில்... வக்கீல்
//
:)))))
வருகைக்கு நன்றி அக்னி பார்வை
எல்லா மேட்டரும் சூப்பர்
தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்---சுவையாக இருக்கிறது. கல்யாண்ஜியின் கவிதையும் நன்று.
நன்றி அத்திரி
வருகைக்கு நன்றி பூங்குன்றன்
பட்டாணியில் பகிரப்பட்டவை பயனுள்ள தகவல்கள்....
‘வக்கீல்’ கவிதையாக எழுதியிருக்கலாம்..
கால்நடை - அசத்தல்
வக்கீல் - :))
//வேலை நேரத்தில் பேசினால் உருப்படமாட்ட என்று தந்தை கண்டித்தும் அப்பாவிற்கு சவால் விட்டு..வேலை நேரத்திலும் பேசி சம்பாதிக்கிறான் அவன்..
அவன் தொழில்... வக்கீல்//
இது மேட்டரு!
நல்ல டேஸ்ட்.
அரிய தகவலுக்கு நன்றி.
நல்ல தகவல்களை அறிந்து கொண்டேன் .
//விலங்குகள் எல்லாம் காலால் நடக்கிறபடியால் 'கால்நடை' என்று அழைக்கப் படுகின்றன.மனிதனும் காலால் தான் நடக்கிறான்.அவனை ஏன் கால்நடை என்று சொல்வதில்லை? மனிதன் காலால் மட்டும் நடக்காமல்..மனத்தாலும் நடக்கிறான்..நாவினாலும் நடக்கிறான்..இந்த மனநடையும், நானடையும் விலங்குகளுக்கு இல்லை.//
...............நச் என்று சொன்னீர்கள். நல்லா இருக்கு.
வருகைக்கு நன்றி
பாலாசி
வரதராஜலு .பூ
வால்பையன்
அக்பர்
Starjan
Chitra
Post a Comment