ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Monday, December 7, 2009
ரஜினிகாந்த் 60
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு டிசம்பர் 12ஆம் நாள் 60 வயது ஆகிறது..அவருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
2)சிவாஜிராவ் கெய்க்வாட் பெங்களூரில் பிறந்தார்.தந்தை நானோஜி ராவ்,தாய் ராம்பாய்
3)இவர் மராட்டியை தாய்மொழியாகக் கொண்டவர்
4)26-2-81 ஆம் ஆண்டு லதாவை மணந்து தமிழக மாப்பிள்ளை ஆனார்
5)இந்திய அரசின் பத்மபூஷண் விருதை 2000ஆம் ஆண்டு பெற்றார்
6)ஒன்பது வயதிலேயே தாயை இழந்த இவர் பசவன்குடியில் ஆசார்ய பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்
7)மராத்தி இவர் தாய்மொழியாய் இருந்தாலும் இதுவரை எந்த மராத்தி படங்களிலும் இவர் நடித்ததில்லை
8)பெங்களூர் போக்குவத்து கழகத்தில் இவர் பேருந்து நடத்துநராக ஆரம்பகாலங்களில் பணி புரிந்திருக்கிறார்
9)இவர் நடை,உடை,பாவனை,ஸ்டைல் ஆகியவற்றைப் பார்த்த இவரது பேருந்தில் வரும் பயணிகள் இவரை நடிகராக ஆகலாம் என ஊக்குவித்தனராம்
10)இவர் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் 1974ல் சேர்ந்தார்
11)தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி,ஆங்கிலம்,பெங்காலி ஆகிய மொழி படங்களில் நடித்திருக்கிறார்
12)இவர் நடித்து இதுவரை வந்துள்ள மொத்த படங்கள் 152.தமிழ் 103,கன்னடம் 8,தெலுங்கு 14,ஹிந்தி 25,ஆங்கிலம்,பெங்காலி தலா ஒன்று
13)முதல் தமிழ் படம் அபூர்வராகங்கள் (1975)
ஹிந்தியில் அந்தா கானூன்(1982)
1988ல் 'Blood Stone' ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார்
14)ஜப்பான்,ஜெர்மனி படங்களில் சிறு வேடங்களில் வந்துள்ளார்
15)1995ல் வந்த முத்து படம் ஜப்பான் மொழியில் 'டப்' செய்யப்பட்டு..ஜப்பானில் இவருக்கு ரசிகர்கள் உருவாகக் காரணமாய் அமைந்தது.
16) சந்திரமுகி படம் ஜெர்மன் மொழியில் 'டப்' செய்யப்பட்டது
17)1975ல் பாலசந்தரால் அறிமுகமான இவர் இன்றும் தன் குரு பாலசந்தர் என்று சொல்லி செய்நன்றி மறவாதவராய் இருக்கிறார்
18)1977ல் புவனா ஒரு கேள்விக்குறி,1978ல் முள்ளும் மலரும்,1979லாறிலிருந்து அறுபது வரை ஆகிய படங்கள் இவரது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தினார்
19)இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இவரை அதிகம் இயக்கியவர்.அவரது இயக்கத்தில் இருபது படங்கள் நடித்துள்ளார்.
20)கமல்ஹாசனுடன் 16 வயதினிலே,மூன்று முடிச்சு,அவர்கள் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
21) கே.பாலாஜி தயரித்த 'பில்லா' படம் இவரது மாபெரும் வெற்றிபடமாக திகழ்ந்தது.ஆங்கிலத்தில் 'ப்ளாக்பஸ்டர்" எனப்பட்டது.
22)இவரது 100 ஆவது படம் ராகவேந்திரா
23) ரஜினி தானே கதை,திரைக்கதை எழுதி, சிறு வேடத்தையும் ஏற்று நடித்த படம் 'வள்ளி'
24)இப்படம் உடன் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட படம்
25)ரஜினி ந்டித்து மாபெரும் தோல்வி என்னும் வார்த்தையை சுமந்த படம் 'பாபா' மற்றும் 'குசேலன்"
26) மேற்கண்ட படங்கள் தோல்வியால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாம்
27)இவர் நடித்து நீண்ட நாட்கள் ஓடிய படம் 'சந்திரமுகி' சாந்தி திரையரங்கில் பகல் காட்சியாக 1000 நாட்களுக்குமேல் ஓடியது
28)இங்கிலாந்தில் வெளியான டாப் 10 படங்களில் ரஜினியின் 'சிவாஜி' படமும் இடம் பெற்றுள்ளது
29) சிவாஜி படத்தில்..சிவாஜியாகவும், எம்.ஜி.ஆராகவும் பெயர் தாங்கி ரஜினி வருவார்
30)ரஜினிக்கு இரு மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யா
31)ரஜினிமகள் சௌந்தர்யா 'சுல்தான் தி வாரியர் ' என்ற அனிமேஷன் படம் தயாரிக்கிறார்.இதில் ரஜினியின் உருவப்படம் வருவதோடு..ரஜினி குரலும் கொடுத்துள்ளார்.
32)1984ல் ஃபிலிம்ஃபேர் விருது..சிறந்தநடிகருக்கானது..நல்லவனுக்கு நல்லவன் படத்திற்கு.மீண்டும் 1994ல் முத்து படத்திற்கு அதே விருது
33)1977 முதல் 2005 வரை பல விருதுகள்..தமிழ்நாடு ஸ்டேட் விருதுகள்,சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்,ஃப்லிம் ஃபேன் அஸ்ஸோஷியேசன் விருதுகள் என பல விருதுகள்.
34)2007ல் ராஜ்கபூர் விருது மகாராஷ்டிரா அரசிடமிருந்து
35)1982ல் மூன்று முகம் படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார்.
36) 12 படங்களில் இரட்டை வேடம் ஏற்றுள்ளார்..அவை பில்லா,ஜானி,முத்து,அருணாச்சலம்,சந்திரமுகி,போக்கிரி ராஜா, தர்மத்தின் தலைவன்,ராஜாதி ராஜா,எஜமான்,பாபா.கூன் கா கார்ஜ்(ஹிந்தி),அதிசய பிறவி ஆகியவை
37)இவர் மனைவி லதா தி ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறார்.மகள்கள் ஐஸ்வர்யா..நடிகர் தனுஷை மணந்துள்ளார்.சௌந்தர்யா படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்
38)தில்லுமுல்லு படத்தில் ஒரே பாத்திரம்..ஆனால் இரண்டு பெயர்களில் நடித்திருப்பார்.இந்திரன்,சந்திரன் என்று.நகைச்சுவை பாத்திரங்களிலும் சோபிக்கமுடியும் என நிரூபித்தார் இப்படத்தில்.
39)கமல்ஹாசனுடன் 11 படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்.அவை அபூர்வ ராகங்கள்,மூன்று முடிச்சு,அவர்கள்,16 வயதினிலே,ஆடு புலி ஆட்டம்,இளமை ஊஞ்சலாடுகிறது,வயசு பிலி சிண்டி(தெலுங்கு),தப்புத் தாளங்கள்,அவள் அப்படித்தான்,நினைத்தாலே இனிக்கும்,அலாவுதீனும் அற்புத விளக்கும் ஆகும்
40)நடிகர் திலகத்துடன் 6 படங்கள் இணைந்து நடித்துள்ளார்.அவை..ஜஸ்டிஸ் கோபிநாத்,நான் வாழவைப்பேன்,படிக்காதவன்,விடுதலை,படையப்பா மற்றும் உருவங்கள் மாறலாம் (கெஸ்ட் ரோல்)
41)காவிரி நதிநீர் பிரச்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்.நதிநீர் இணைப்பை அரசு செய்யுமேயாயின் தான் உடனே ஒரு கோடி நன்கொடை தருவதாக அறிவித்தார்.
42)சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வாலி பாடல் எழுத ஜேசுதாஸ் பாட ரஜினி நடித்த மன்னன் படப்பாடலான 'அம்மா என்று அழைக்காத' பாடல் மிகப் பிரபலம் ஆனது.
43)ஒகனேக்கல் பிரச்னையின் போது ரஜினி கன்னட அரசியல்வாதிகளுக்கு சொன்னது..மக்கள் அனைவரும் கடவுளுக்கு சமம்.அவர்களை எப்பவும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது..அவர்களும் எப்போதும் மௌனமாய் இருக்க மாட்டார்கள்.
44)இயக்குநர் ஸ்ரீதர் ரஜினியை வைத்து இரு படங்களை இயக்கினார்.அவை இளமை ஊஞ்சலாடுகிறது,துடிக்கும் கரங்கள்
45)நாம் உயர உயர நமது பண்புகளும் உயர வேண்டும் என அடிக்கடி சொல்பவர் ரஜினி
46)கலைஞானம் தயாரிப்பில் ரஜினிகாந்த் முழுக்கதாநாயகனாக நடித்த முதல் படம் பைரவி.இப்படத்தின் சென்னை விநியோகஸ்தர் எஸ்.தாணு (இப்போது கலைப்புலி தாணு என அழைக்கப் படுபவர்)அவர் இப்படத்திற்கான சுவரொட்டிகளில் முதன் முறையாக ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று விளம்பரப் படுத்தி இருந்தார்.அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் இவர்தான்.
47)ரஜினி தன் ரசிர்களிடம் சொல்வது 'முதலில் உங்க குடும்பத்தைப் பாருங்க..பிறகுதான் மற்றவை எல்லாம்.உங்க மனைவிக்கு நல்ல கணவனா இருங்க.உங்க குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா இருங்க என்பதுதான்.
48)ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி.சிறுவயது முதல் ராகவேந்திரர்,ராமகிருஷ்ணர் போன்றவர்களின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்து வருவதாகக் கூறுவார்.
49)அவர் அடிக்கடி இமயமலையில் உள்ள ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு சென்று ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
50)ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும்..கெட்டவனாக மாறுவதற்கும் நட்புதான் காரணம்.ஒருவரோட பழகும் முன் அவன் நல்லவனான்னு முதல்ல பார்க்கணும்..அப்படி ஒத்துக்கிட்டு அவன் நட்பை பெற்றதும் அதை கடைசி வரை காப்பாத்தணும்..என்று நட்புப் பற்றி அடிக்கடி கூறுவாராம்.
51)இமயமலையில் இருப்பது நேச்சுரல் வைப்ரேஷன்..இங்கே இருப்பது ஹியூமன் வைப்ரேஷன்.பாபாஜி குகைக்குப் போறப்போ அமைதி தானா வந்துடும்.அங்கே இருக்கும் கல்லு,மண்ணு ஒவ்வொன்னும் ஒரு சங்கதி சொல்லும்.அங்க அமர்ந்து சும்மா கங்காதேவியை பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும் என்கிறார் அடிக்கடி இமயமலைக்கு செல்வது குறித்து சொன்ன பதிலில்.
52)வாழ்க்கை என்பது துன்பம்.வாழ்க்கையே துன்பம் தான்.அதுல இன்பம் அப்பப்ப வந்துட்டுப் போகும்.இதைப் புரிஞ்சுக்கிட்டால் போதும்.எதையும் ஜஸ்ட் லைக் தட் தாண்டிப் போயிடலாம் என்பார் நண்பர்களிடம்
53)1996ல் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.,உடன் கூட்டணி அமைத்தது..தி.மு.க.,மூப்பனாரின் டி.எம்.சி.,யுடன் கூட்டு.ரஜினி தி.மு.க.,கூட்டணியை ஆதரித்தார்..ரஜினி அண்ணாமலையில்
சைக்கிளில் வருவார்.டி.எம்.சி.,யின் தேர்தல் சின்னமும் சைக்கிள்..அதை கட்சி பயன்படுத்திக் கொண்டது.ரஜினியின் ஆதரவு அணி வெற்றி பெற்றது.
54)ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபம்..தனியாக சேரிடபுள் டிரஸ்ட் அமைத்து அதனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் வரும் வருவாய் தர்ம காரியங்களிக்கு பயன் படுத்தப் படும்.
55)ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என சில கலையுலக நண்பர்களும், ரசிகர்களும் விரும்புகின்றனர்.இதில் முடிவெடுக்க ரஜினி தயங்குகிறார்.அரசியல் ஆர்வம் அவருக்கு இல்லை என்றே தெரிகிறது.
56)இவர் படங்களின் மூலமே பஞ்ச் டயலாக் வர ஆரம்பித்தது எனலாம்..அவற்றுள் சில..'இது எப்படி இருக்கு' நான் ஒருதரம் சொன்னா நூறு தரம் சொன்னமாதிரி,ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்யறான்..
57)ராஜ்பஹதூர் என்பவர் இவரது ஆப்த நண்பர்.இவர் டிரைவராய் இருந்த பேருந்தில் ரஜினி கண்டக்டர்..சினிமாவில் நடிக்க தான் தான் அவரை ஊக்குவித்து சென்னை அனுப்பியதாக சொல்கிறார்
58)தயானந்த சரஸ்வதி சாமிகளுக்கு ரிஷிகேஷில் சொந்தமான காட்டேஜ் உண்டு.ரஜினி அங்கு செல்லும் போது வழக்கமாக அங்கு தங்கும் அறையின் பெயர் 'ரஜினி காட்டேஜ்'.ரிஷிகேஷ் செல்லும் வழியில் சொந்த ஆஸ்ரம் கட்ட ரஜினி இடம் வாங்கிப் போட்டிருக்கிறார்
59)கிருஷ்ணகிரி மாவட்டம்..நாச்சிக்குப்பத்தில் அம்மாவிற்கு ஒரு நினைவு மண்டபம் கட்டும் திட்டத்தில் இருக்கிறார்.அடிக்கல் நாட்டியாய் விட்டது.அந்த கிராமத்து மக்களுக்கு இலவச கல்யாண மண்டபம்.குடிநீர் வசதிகள் செய்திருக்கிறார்
60)வாழ்வில் ரஜினி நினைத்ததெல்லாம் கிடைத்திருக்கு..ஒன்று மட்டுமே கிடைக்கவில்லை.அது அம்மா பாசம்..அதுக்காக..அந்த அன்புக்காக இந்த நிமிஷம் கூட அவர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்..என்கிறார் இவரைப் பற்றி முழுதும் அறிந்த எஸ்.பி.முத்துராமன்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
//5 படங்களில் இரட்டை வேடம் ஏற்றுள்ளார்..அவை பில்லா,ஜானி,முத்து,அருணாச்சலம்,சந்திரமுகி ஆகியவை//
???
60/60 க்கு உள்ளேன்
//5 படங்களில் இரட்டை வேடம் ஏற்றுள்ளார்..அவை பில்லா,ஜானி,முத்து,அருணாச்சலம்,சந்திரமுகி ஆகியவை//
u mis {raajaathi raajaa,pokkiri raajaa,athisaya piravi,tharmaththin thalaivan,moonru mukam(3)}
chanthiramugi wrong one
அடேங்கப்பா..
சூப்பரா தகவல்கள் திரட்டியிருக்கீங்க
வருகைக்கு நன்றி
சரவணகுமரன்
வருகைக்கு நன்றி நசரேயன்
//எப்பூடி ... said...
//5 படங்களில் இரட்டை வேடம் ஏற்றுள்ளார்..அவை பில்லா,ஜானி,முத்து,அருணாச்சலம்,சந்திரமுகி ஆகியவை//
u mis {raajaathi raajaa,pokkiri raajaa,athisaya piravi,tharmaththin thalaivan,moonru mukam(3)}
chanthiramugi wrong one//
வருகைக்கு நன்றி எப்பூடி ..பதிவில் திருத்தியாயிற்று.சந்திரமுகியில் டாக்டர் சரவணனாகவும்,வேட்டையனாகவும்..மற்றும் பாபாவில் பாபாவாகவும்,பாபாஜி ஆகவும்
//இராகவன் நைஜிரியா said...
அடேங்கப்பா..
சூப்பரா தகவல்கள் திரட்டியிருக்கீங்க//
நன்றி இராகவன்
வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி
தெரியாத சில சங்கதிகளை இந்த அறுபதுக்கு அறுபதில் தெரிந்து கொண்டேன்.
தலைவர் கட்சி ஆரம்பிச்சா(???!!!) நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளர் !!!
வருகைக்கு நன்றி பூங்குன்றன்.வே
நல்லா தான் திரட்டியிருக்கீங்க.
இருந்தாலும், சின்ன வயசிலிருந்து
ரஜினி படம் என்றாலே குஷி தான்.
அது என்னமோ பொறந்த குழந்தை கூட ரஜினி என்றால் இப்ப கூட ஆடம் போடுது.
அன்புடன்,
கிருஷ்ணா
http://rvkrishnakumar.blogspot.com/
ரஜினி படத்தில் வள்ளி அருமையான படம் .எத்தனை முறை வேண்டுமென்றாலும் அலுக்காமல் பார்க்கலாம்
100/100 for u.
வருகைக்கு நன்றி Krishna
வருகைக்கு நன்றி goma
//நையாண்டி நைனா said...
100/100 for u.//
நன்றி நைனா
//goma said...
ரஜினி படத்தில் வள்ளி அருமையான படம் .எத்தனை முறை வேண்டுமென்றாலும் அலுக்காமல் பார்க்கலாம்//
ரஜினி இதில் சிறு பாத்திரத்தில் தான் வருவார்.படம் பெரிய வெற்றி என சொல்லமுடியாது
//பூங்குன்றன்.வே
தலைவர் கட்சி ஆரம்பிச்சா(???!!!) நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளர் !!!//
:-))))
Post a Comment