Thursday, December 17, 2009

இடது மூலை

இப்போதெல்லாம்

செய்தித் தாள் வந்ததும்

அவசர அவசரமாக

கண்கள்

விளையாட்டுப் பகுதி பக்கத்தின்

இடது மூலையைப்

பார்க்கவே விரும்புகிறது

தெரிந்தவர்கள் பெயர்

என்னைவிட

வயது குறைந்தோர்

பெயர் வருகிறதா என்று

13 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

super super ...

:-))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//விளையாட்டுப் பகுதி பக்கத்தின்

இடது மூலையைப்//

அந்தப் பகுதி மட்டும்தானா தலைவரே...,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//விளையாட்டுப் பகுதி பக்கத்தின்

இடது மூலையைப்//

அந்தப் பகுதி மட்டும்தானா தலைவரே...,//

ஆம்..அந்த பக்கம் மட்டும்தான்.. அட்வர்டைஸ்மென்ட் லைனுக்கு கட்டணம்..அதனால்தான்..மற்றப் பக்கம் டிஸ்பிளே ரேட் அதிகம்..நமக்கு வசதி இல்லை

சகாதேவன் said...

சுஜாதா முன்னேயே இப்படித்தான் சொன்னார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி சகாதேவன்

ஹேமா said...

இடது பக்க மூலையில என்ன இருக்கு ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
இடது பக்க மூலையில என்ன இருக்கு ?//


அவ்வளவு வெள்ளந்தியா நீங்க!!!

ரிஷபன் said...

இன்னொரு வெள்ளந்தி.. படிச்சதுக்கு அப்புறம் ஓடிப் போய் இடது பக்க மூலைய பார்த்தேன்.. அடக் கஷ்டமே கவிதையை இப்ப சூப்பர்னு சொல்ல முடியுது..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரிஷபன் said...
இன்னொரு வெள்ளந்தி.. படிச்சதுக்கு அப்புறம் ஓடிப் போய் இடது பக்க மூலைய பார்த்தேன்.. அடக் கஷ்டமே கவிதையை இப்ப சூப்பர்னு சொல்ல முடியுது..//

:-)))
வருகைக்கு நன்றி ரிஷபன்

பின்னோக்கி said...

உண்மையே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பின்னோக்கி