Wednesday, December 16, 2009

பேசும் கண்கள்

கசாப்புக் கடையில்

உரித்து தொங்க விட்டிருந்த

ஆட்டின் கண்கள் கேட்டன

கசாப்பு கஜாவை

எண்ணில் அடங்கா உயிர்களை

நொடிக்குள்

சிதறடிக்கும் உன்னால்

ஒரே ஒரு முறை

ஓய்ந்து நின்ற என் இதயத்தை

இயக்கிட முடியுமா சொல்..

அதனை செய்து

புலால் உண்ணுபவனிடம்

அருளில்லை என்ற

பொய்யாமொழிப் புலவனின் வாக்கு

பொய்யென நிரூபி..

10 comments:

க.பாலாசி said...

//ஓய்ந்து நின்ற என் இதயத்தை
இயக்கிட முடியுமா சொல்..//

நல்ல கேள்வி...அருமையான கவிதை....

ஒரு காசு said...

இன்னைக்கு உங்க வீட்ல மட்டனா ?
ஹீ... ஹீ...

மணிஜி said...

”ஆட்டின்” இதயவடிவத்தில்தானே இருகும் சார்

vasu balaji said...

அருமை
/ தண்டோரா ...... said...

”ஆட்டின்” இதயவடிவத்தில்தானே இருகும் சார்/

:))..சாமி. முடியல.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி க.பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஒரு காசு said...
இன்னைக்கு உங்க வீட்ல மட்டனா ?
ஹீ... ஹீ...//

கொன்றால் பாவம்..தின்றால் தீரும் கட்சியா நீங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

பிரபாகர் said...

எண்ணத்தை பேசும் கவிதை...

ரொம்ப நல்லாருக்குங்க.

பிரபாகர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
எண்ணத்தை பேசும் கவிதை...

ரொம்ப நல்லாருக்குங்க.

பிரபாகர்.//

வருகைக்கு நன்றி பிரபாகர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தண்டோரா ...... said...
”ஆட்டின்” இதயவடிவத்தில்தானே இருகும் சார்//

????!!!!!!