1) எனக்கும் உனக்கும்
ஏற்பட்ட பந்தம்
எண்ணில்
இரண்டை விரட்டியது
2)எழுத்தில் பிழையிருந்தும்
ஏற்றுக் கொள்கிறது
இணைய தளமெனும்
சங்கப் பலகை
3)உளறிடுவார்
திறனிழப்பார்
தூற்றப்படுவார்
டாஸ்மாக்கிற்கு
அடிமையானார்
4)ஊன்
உயிர்
உணர்வு
மனசெல்லாம் நீ
அப்போது
நான் யார்
5) கல் பார்த்து
கால் தூக்குவதை
நாய் என்றால்
சுவர் பார்த்ததும்
ஜிப் அவிழ்ப்பவனை
என்னவென்பது
19 comments:
மிகவும் அருமை
/எழுத்தில் பிழையிருந்தும்
ஏற்றுக் கொள்கிறது
இணைய தளமெனும்
சங்கப் பலகை/
அருமை
கடைசி கவிதை:)) நச்.
கடைசி அருமை. இதற்கு அரசாங்கமும் பொறுப்பேற்க்க வேண்டும்.பொது கழிப்பிடங்களை கட்ட வேண்டும். பெரிய கடைகளில் கூட கழிவறை மோசமாக பராமரிக்கப்படுகிறது அல்லது இல்லவே இல்லை.
உடல் வடிவமைப்பில், பெண்களைவிட ஆண்களுக்கு சிறுநீரை அடக்கும் வலிமை குறைவு.
அதே நேரம், பெறுப்பில்லாத பொதுமக்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
2020-ல் வல்லரசு ஆவோமா என கவலைப்படாமல், குறைந்தபட்சம் மக்கள் வாழத் தகுதியுடையதாக நாடு மாற வேண்டும்.
சைபரை கண்டுபிடித்தோம்
மென்பொருளில் புலியானோம்
தெருவுக்கு ஒரு கோயில் வைத்தோம்
சந்திரனுக்கு ராக்கெட் விட்டோம்
எல்லோருக்கும் டிவி கொடுத்தோம்
1000 பேருந்துகளுக்கு ஒரு பேருந்து நிலையம்
அந்த நிலையத்தில் 100 கடைகள்
அந்த கடைகளுக்கு பின்புறம் ஒரு கழிப்பிடம்
ஒரு கழிப்பிடத்திற்கு இரு சுவறையல்லவா வைத்தோம்
உச்சா போவதிற்கு,..
இந்தியா ஒளி(ர்)ந்து கொண்டுதான் இருக்கிறது.
நாம்தான் நாயாகிவிட்டோம்
//2020-ல் வல்லரசு ஆவோமா என கவலைப்படாமல், குறைந்தபட்சம் மக்கள் வாழத் தகுதியுடையதாக நாடு மாற வேண்டும்.//
100% true
ம்
வருகைக்கு நன்றி
ரமேஷ்
திகழ்
பின்னோக்கி
Jothi
Suresh
// 5) கல் பார்த்து
கால் தூக்குவதை
நாய் என்றால்
சுவர் பார்த்ததும்
ஜிப் அவிழ்ப்பவனை
என்னவென்பது //
இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.. பதில் இல்லை.
// எழுத்தில் பிழையிருந்தும்
ஏற்றுக் கொள்கிறது
இணைய தளமெனும்
சங்கப் பலகை //
ஆஹா... சூப்பர் அண்ணே.
வருகைக்கு நன்றி இராகவன்
// எழுத்தில் பிழையிருந்தும்
ஏற்றுக் கொள்கிறது
இணைய தளமெனும்
சங்கப் பலகை //
உண்மைய சொல்லிப்புட்டிங்க.
கடைசிக் கவிதையைக்
கவனத்தில் கொள்க...!
//சுவர் பார்த்ததும்
ஜிப் அவிழ்ப்பவனை
என்னவென்பது //
இந்தியன்னு சொல்லலாமா.
(மத்த நாட்டில் எப்படின்னு தெரியலை)
அனைத்து கவிதைகளும் அருமை சார்.
வருகைக்கு நன்றி .பழனியப்பன்
வருகைக்கு நன்றி ஹேமா
வருகைக்கு நன்றி அக்பர்
ஊன்
உயிர்
உணர்வு
மனசெல்லாம் நீ
அப்போது
நான் யார்
///
அட்ரசக்கை அட்ரசக்கை
அட்ரசக்கை
அட்ரசக்கை
அட்ரசக்கை
வருகைக்கு நன்றி பிரியமுடன் பிரபு
Post a Comment