ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Thursday, December 3, 2009
தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (4-11-09)
1)இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 2000 ஆண்டில்தான் மேட்ச் ஃபிக்சிங் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.அகப்பட்டுக் கொண்ட ஹன்சி குரோனி தலை குனிந்தார்.அப்போதுதான் நம் வீரர்கள் அசாருதீன்,ஜடேஜா ஆகியோரும் கருப்பு ஆடுகள் எனத் தெரிந்தது.தன் சுயநலத்திற்காக நாட்டின் மானத்தோடு விளையாடிய அசாருக்கு இதற்குக் கிடைத்த வெகுமதி எம்.பி.,பதவி..
அதுசரி..ஊழல்வாதி என்ற தகுதி ஒன்று போதுமே இப்பதவிகளுக்கு.
2)நேற்று பாலசந்தரின் 'ஒரு கூடைப் பாசம்' நாடகம் பார்த்தேன்.பாலசந்தரின் பழைய படங்களில் இருந்து இங்கொன்றும்..அங்கொன்றுமாய் காட்சிகளை உருவி நாடகம் ஆக்கியிருக்கிறார்.உதாரணமாக..
ரேணுகா பாத்திரம்..'அவள் ஒரு தொடர்கதை' அக்காள் கவிதா சாயல்...ஹார்பிக் விற்கும் சேல்ஸ் கேர்ள் பாத்திரம் மெடிமிக்ஸ் விற்கும் 'அபூர்வ ராகங்கள்' ஜெயசுதா..
நாடகத்திற்கு சினிமா இயக்குநர்கள் பலர் வந்திருந்தனர்.பதிவர்கள் ஜாக்கி சேகர்,உண்மைத் தமிழன்,கேபிள் சங்கர்,நிலா ரசிகன் வந்திருந்தனர்.
3)பாரதியாரின் கம்பீர உருவப் படத்தை நாம் பார்க்கிறோமே..உணர்ச்சி ததும்பும் அந்த ஓவியத்தை தீட்டியவர் ஆர்யா என்ற ஓவியர் ஆவார்.
4)when you are in light, every thing will follow you.But when you enter dark..even your own shadow will not follow you - Hitler
5)நாம் பிரார்த்தனை செய்யும் போது ஏன் கண்களை மூடிக் கொள்கிறோம் தெரியுமா..?
பிரார்த்தனை என்று மட்டுமில்லை..நாம் அதீத மகிழ்வுடன் இருக்கும் போது..கனவு காணும்போது கூட கண்களை மூடிக் கொள்கிறோம்..வாழ்வின் அற்புத தருணங்களை கண்களால் பார்க்க முடியாது..மனதால் மட்டுமே உணர முடியும்.
6)கூகுள் ஆண்டவரிடம் இல்லாத தகவல்கள் இல்லை எனலாம்.நமக்குத் தேவையான தகவல்களைத் தேடினால்..அது பற்றிய செய்திகளை வாரி வழங்குவார் வஞ்சனையின்றி.இந்த ஆண்டு கூகுள் இணைய தளத்தில் இந்தியர்கள் அதிக அளவு தேடியுள்ள தகவல் என்ன தெரியுமா..?
'முத்தம் கொடுப்பது எப்படி' :-)))
7)ஒரு ஜோக்...
குரைக்கற நாய் கடிக்காது தெரியுமா?
தெரியுமே! ஒரே நேரத்தில் அதனால் எப்படி இரண்டு வேலை செய்யமுடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
சார்.. நாடகம் பற்றிய உங்கள் கருத்து மிகச்சரியானது.. எனக்கும்பெரிதாய் தோன்றவில்லை. அவரின் உயரத்துக்கு நிறைய முயற்சி செய்யலாம்
டாப் கியர் இன்னைக்கு. பாரதியார் ஓவியம் பற்றிய தகவல் புதிது. நன்றி.
பாலச்சந்தருக்கும் கற்பனை வற்றி விட்டதோ என்னவோ ,இதற்கு முன் வந்த நாடகமும் அப்படித்தான்.
எஸ்.வி.சேகர் ட்ராமா பாருங்கள் ...அவர் காட்ச்சிக்குக் காட்சி டீஷர்ட் மாற்றும் கவனத்தை, துணுக்குத் தோரணம் கட்டுவதிலும் காட்டலாம் என்று நினைக்கத் தோன்றும்.
http://valluvam-rohini.blogspot.com/2009/05/blog-post_30.html
இந்த லின்க்கில்
பாலச்சந்தரின் பெளர்ணமி நாடக விமரிசனம் பாருங்கள்
//Cable Sankar said...
சார்.. நாடகம் பற்றிய உங்கள் கருத்து மிகச்சரியானது.. எனக்கும்பெரிதாய் தோன்றவில்லை. அவரின் உயரத்துக்கு நிறைய முயற்சி செய்யலாம்//
உண்மை
//வானம்பாடிகள் said...
டாப் கியர் இன்னைக்கு. பாரதியார் ஓவியம் பற்றிய தகவல் புதிது. நன்றி.//
நன்றி வானம்பாடிகள்
வருகைக்கும்..கருத்துக்கும்..தகவலுக்கும் நன்றி கோமா
//கேசவன் .கு said...
பாரதியார் ஓவியம் பற்றிய தகவல் அளித்தமைக்கு நன்றி !//
நன்றி கேசவன்
நல்ல பகிர்வுகள். நேற்று அருகருகே அமர்ந்திருந்தும் பேசாமலிருந்து விட்டேன்.விதியா? :)
வருகைக்கு நன்றி நிலாரசிகன்
சுவையாக இருந்தது.
நன்றி பின்னோக்கி
குரைக்கற நாய் கடிக்காது தெரியுமா?
தெரியுமே! ஒரே நேரத்தில் அதனால் எப்படி இரண்டு வேலை செய்யமுடியும்.
நல்ல கடி!
வருகைக்கு நன்றி goma
Post a Comment