Thursday, December 31, 2009

2009ல் தமிழ் சினிமா..


2009ல் 124 நேரடி தமிழ்ப்படங்கள் வந்துள்ளன.இவற்றுள் எவை வெற்றி படங்கள்..எவை வசூல் சாதனை புரிந்தவை..எவை தோல்வி படங்கள் என்பதைப் பற்றி அல்ல இப்பதிவு.

படத்தயாரிப்பு, ஸ்டூடியோ தொழிலாளிகள்,திரையரங்க ஊழியர்கள் என ஆரம்பித்து போஸ்டர் ஒட்டுபவர்கள் என லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ள துறை இது.இதில் வெல்ல வேண்டும் என மெய் வருத்தம்,பசி பாராது கண்துஞ்சாது உழைக்கும் வர்க்கம் நிறைந்த துறை இது.இதன் ஒளி..பல விட்டில் பூச்சிகளை அழித்தது உண்டு..ஆனலும் இதன் கவர்ச்சியில் மயங்காதார் இல்லை எனலாம்.

முன்பெல்லாம் ஒரே ஹீரோ நடித்த6 அல்லது 7 படங்கள் வருவதுண்டு..அனால் இப்போது பெரிய நடிகர்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.இதுவே அதிகம் புதியவர்கள் நுழைய வழி வகுத்துள்ளது எனலாம்.

இந்த ஆண்டு மட்டும் 45 புது ஹீரோக்கள் அறிமுகமாகியுள்ளனர்.50 ஹீரோயின்கள் உருவாகியுள்ளனர்.69 புதிய இயக்குநர்கள் படங்கள் வந்துள்ளன.

பசங்க பட இயக்குநர் பாண்டிராஜ் இந்த வருட புது இயக்குநர்களில் வெற்றி இயக்குநராகத் திகழ்கிறார்.சமுத்திரக்கனி,அறிவழகன் போன்று சிலர் திறமை மிக்கவர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

45 புதிய இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளனர்.கருணாஸ்,ஸ்ருதி கமல் போன்றவர்கள் பாராட்டு பெற்றுள்ளனர்.

ஆனாலும் ஒரு செய்தி வருத்தத்தையே அளிக்கிறது.வெளிவந்த படங்களில் 10 சதவிகிதப் படங்கள் கூட வெற்றி படங்களாகத் திகழவில்லை.

காரணம்..புதிய சிந்தனை இல்லை.மாறுபட்ட சிந்தனைப் படங்கள் சில வெற்றி பெற்றுள்ளதே இதற்கு சான்று.மாறுபட்ட சிந்தனையுடன் குறைந்த பட்ஜெட்டில் வந்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வில்லை.

தமிழ்ப் பட உலகில் பல புது கதாசிரியர்கள் உருவாக வேண்டும்.அரைத்த மாவையே அரைத்த காலம் அல்ல இது.புதுப்புது சிந்தனைகள் வரவேண்டும்..அதுதான்..வீட்டு டிராயிங் ரூமிலிருந்து மக்களை திரையரங்கிற்கு இழுக்கும்.அப்படிப்பட்ட படங்கள் வந்தால்..யார் நடித்திருந்தாலும்..குறைந்த பட்ஜெட் படமானாலும் வெற்றி பெறும்.

.இந்த இண்டஸ்ட்ரியை நம்பி..லட்சக்கணக்கானோர் வாழ்வு பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது.அவர்கள் நலனுக்காவது நல்ல படங்கள் வரட்டும்...பல புது தயாரிப்பாளர்கள் உருவாகட்டும்.

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

15 comments:

அக்னி பார்வை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

புத்தாண்டு வாழ்த்துகள் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அக்னி பார்வை

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அத்திரி

Anonymous said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...... http://wp.me/KkRf

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Aaron

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சன் குழுமம் இந்த ஆண்டு பெரும்பாலான படங்களை வாங்கி திரையுலகை வாழவைக்கும் என்று நம்புவோம்..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
சன் குழுமம் இந்த ஆண்டு பெரும்பாலான படங்களை வாங்கி திரையுலகை வாழவைக்கும் என்று நம்புவோம்//

:-)))

நசரேயன் said...

புத்தாண்டு வாழ்த்துகள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்
Starjan
அக்பர்

கடைக்குட்டி said...

புதுவகையான அலசல்ன்னு சொல்ல மாட்டேன்,, (சொன்னா மட்டும் நம்பிடவா போறீங்க.. ..)

இயல்பா இருக்கு..

வாழ்த்துக்கள் :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கடைக்குட்டி