ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, December 29, 2009
2010 மனதிற்குள் தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள்
ஜெயலலிதா - எப்படியாவது காங்கிரஸை தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேற வைக்கணும்.நம்ம கூட்டணியில் அவங்களை கொண்டு வந்தால்தான்..2011ல் முதல்வராக ஆகக் கூடிய சந்தர்ப்பம் வரும்.அதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ராமதாஸ்- பெண்ணகரம் இடைத்தேர்தல்ல தனியா நின்னு எப்படியாவது 10000 ஓட்டாவது வாங்கிடணும்.அப்போதான் அதை வைத்து திரும்ப கூட்டணியோட சேர்த்துக்க கலைஞர் எண்ணுவார்.நாமும் அப்பதான்2011 ல கொஞ்சம் அதிகம் தொகுதிக்கு பேரம் பண்ணலாம்.
விஜய்காந்த்- இந்த மேடம்..இல்ல அந்த மேடம் தான்..வேற வழியில்லை.இனியும் கடவுளோட கூட்டணின்னா .. தேர்தல்ல நிற்க சொன்னா நம்ம ஆளுங்க ஓடுவாங்க. இந்த மேடம்னா துணை முதல்வர் கேட்கணும்.அந்த மேடம்னா முதல்வரே முயற்சிக்கலாம்.
தங்கபாலு-கோஷ்டி பூசல் ஒழிந்தால் தான்..அடுத்த தேர்தல்ல நம்ம வாய்ஸ் எடுபடும்.அதுக்கு அச்சாரமா வாசன் பொறந்த நாளை கொண்டாடிட்டோம்.இனி இளங்கோவன்,சிதம்பரம்,சுதர்சன நாச்சியப்பன்,கிருஷ்ணசாமி,பிரபு,பீட்டர்..இவங்க பொறந்த நாளையும் கொண்டாடிவோம்.
இரு கம்யூனிஸ்டுகள்- நம்ம பலம் நாம தனியா நின்ன 5 இடைத்தேர்தல்ல தெரிஞ்சுப் போச்சு.அதனால கொஞ்ச நாள் அடக்கி வாசிப்போம்.அப்பதான் அடுத்த சட்டசபை தேர்தல்ல..எந்த கூட்டணிக்குப் போனாலும்..அவங்களுக்கு ஏற்றார்போல பேசமுடியும்.அதுவரைக்கும் நம்ம கொள்கைகள் பற்றி யாராவது கேட்டா செவுடு மாதிரி இருந்துடுவோம்.
கலைஞர்-நம்மை இன்னும் யாருமே சரியா புரிஞ்சுக்கலையே.ஜூன்மாதத்திற்குப் பிறகு ஓய்வுன்னதும் நம்பிட்டாங்களே.பரவாயில்லை..அப்புறம்..அண்ணா கனவுல வந்தார்..பெரியார் வந்தார்..நெஞ்சில் தைச்ச முள்,இதயம் அழுதது,கண்கள் பனித்தன.மௌன அழுகை இப்படி அப்படின்னு சொல்லி பதவில நீடிச்சிடலாம்.
ஸ்டாலின்-ஜூனிற்குப் பிறகு நாமதான் முதல்வர்.அழகிரி போட்டிக்கு வராம இருக்கணும்..அப்படி வந்துட்டா அவர் 6 மாசம் நான் 6 மாசம்னு பேசிக்கலாம்..இல்ல.மதுரைக்கு அவரை முதல்வர் ஆகிடலாம்..கனிமொழிக்கு..ராஜ்ய சபா எம்.பி., இன்னும் கொஞ்சம் வருஷம் இருக்கும்.அப்புறம் பார்த்துக்கலாம்.
வைகோ-ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.விஜய்காந்த், காங்கிரஸ் ,அம்மாவை நெருங்கிட்டா..நம்மை கழட்டி விட்டுடுவாங்க..திரும்ப கலைஞர் கிட்ட ஓடணும்.அவர் கொஞ்சம் தொகுதி கொடுத்தாலும் ஒத்துக்கணும்.ஏன்னா அவர் கொடுக்கிற தொகுதிக்கே நிற்க நாமதானே வேட்பாளரை தேடணும்.
சரத்குமார்-கலைஞரை மீண்டும் நெருங்கிட்டோம்.தேர்தல்ல டிக்கட்டுக்கு ராதிகாவை விட்டு அப்பாகிட்ட பேச சொல்லணும்.இல்லேனா..திரும்ப ராஜ்யசபா சீட்டாவது கேட்கச் சொல்லணும்.பதிலுக்கு கலைஞர்ல ஒரு மெகா சீரியல் செஞ்சுடச்சொல்லிடலாம்
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
அருமை...
பொது மக்களை விட்டுட்டீங்க...
’எப்போ நம்ம தொகுதி எம்.எல்.ஏ சாவாரு...’
பிரபாகர்.
//தங்கபாலு-கோஷ்டி பூசல் ஒழிந்தால் தான்..அடுத்த தேர்தல்ல நம்ம வாய்ஸ் எடுபடும்.அதுக்கு அச்சாரமா வாசன் பொறந்த நாளை கொண்டாடிட்டோம்.இனி இளங்கோவன்,சிதம்பரம்,சுதர்சன நாச்சியப்பன்,கிருஷ்ணசாமி,பிரபு,பீட்டர்..இவங்க பொறந்த நாளையும் கொண்டாடிவோம்.//
திருநாவுக்கரசர் ? கட்சியில் இருந்து போய்விட்டாரா ?
நமக்கு வயசு போச்சு, இல்லாட்டி இன்னொரு பொண்டாட்டி கூட வச்சுக்கலாம் அப்படீன்னு கலைஞர் நினைக்கலாம்........இல்லாட்டி அதை நினைச்சு மௌன அழுகை அழலாம்!
//திரும்ப ராஜ்யசபா சீட்டாவது கேட்கச் சொல்லணும்.பதிலுக்கு கலைஞர்ல ஒரு மெகா சீரியல் செஞ்சுடச்சொல்லிடலாம் //
இதுதான் கட்சியின் கொள்கையா?
//பிரபாகர் said...
அருமை...
பொது மக்களை விட்டுட்டீங்க...
’எப்போ நம்ம தொகுதி எம்.எல்.ஏ சாவாரு...’//
வருகைக்கு நன்றி பிரபாகர்
//கோவி.கண்ணன் said...
//தங்கபாலு-கோஷ்டி பூசல் ஒழிந்தால் தான்..அடுத்த தேர்தல்ல நம்ம வாய்ஸ் எடுபடும்.அதுக்கு அச்சாரமா வாசன் பொறந்த நாளை கொண்டாடிட்டோம்.இனி இளங்கோவன்,சிதம்பரம்,சுதர்சன நாச்சியப்பன்,கிருஷ்ணசாமி,பிரபு,பீட்டர்..இவங்க பொறந்த நாளையும் கொண்டாடிவோம்.//
திருநாவுக்கரசர் ? கட்சியில் இருந்து போய்விட்டாரா ?//
திருநாவுக்கரசர் கட்சியிலே இன்னும் செட்டிலே ஆகல..இன்னும் கொஞ்ச நாள் பிடிக்கும் அதுக்கு
//மாயாவி said...
நமக்கு வயசு போச்சு, இல்லாட்டி இன்னொரு பொண்டாட்டி கூட வச்சுக்கலாம் அப்படீன்னு கலைஞர் நினைக்கலாம்........இல்லாட்டி அதை நினைச்சு மௌன அழுகை அழலாம்!//
வயசா...திவாரி கதை படிச்சீங்கள்லே
நீங்க சொன்னா சரிதான்
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//திரும்ப ராஜ்யசபா சீட்டாவது கேட்கச் சொல்லணும்.பதிலுக்கு கலைஞர்ல ஒரு மெகா சீரியல் செஞ்சுடச்சொல்லிடலாம் //
இதுதான் கட்சியின் கொள்கையா?//
கொள்கையா? அப்படின்னா
//நசரேயன் said...
நீங்க சொன்னா சரிதான்//
நம்பிக்கைக்கு நன்றி நசரேயன்
நாட்டில் செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான விஷயங்கள் பல உள்ளன அதை விடுத்து இது போன்ற விஷயங்களில் தலைவர்கள் கவனம் செலுத்துவது வருத்தம் தரக்கூடிய ஒன்று
/விஜய்காந்த்/
இதுலயாவது தெளிவா இருப்பாரா சார்:))
2010 செய்தித்தாள் நம்ம கைல..
இதுதான் நடக்கும்.. முன்ன பின்ன..
கலக்கல் சிந்தனை..
//பாலாஜி said...
நாட்டில் செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான விஷயங்கள் பல உள்ளன அதை விடுத்து இது போன்ற விஷயங்களில் தலைவர்கள் கவனம் செலுத்துவது வருத்தம் தரக்கூடிய ஒன்று //
வருகைக்கு நன்றி பாலாஜி
///வானம்பாடிகள் said...
/விஜய்காந்த்/
இதுலயாவது தெளிவா இருப்பாரா சார்:))///
இதுக்கும் மேல தெளிவாகலேன்னா..ம.தி.மு.க., நிலமைதான்
//கடைக்குட்டி said...
2010 செய்தித்தாள் நம்ம கைல..
இதுதான் நடக்கும்.. முன்ன பின்ன..
கலக்கல் சிந்தனை..//
வருகைக்கு நன்றி கடைக்குட்டி
அருமையான அலசல் டிவிஆர் சார்
இதத்தான் ராஜ தந்திரமுன்னு சொல்வாங்களா ....
//ஏன்னா அவர் கொடுக்கிற தொகுதிக்கே நிற்க நாமதானே வேட்பாளரை தேடணும்.//
இது ரொம்ப டாப்.
எப்படி இவங்க மனசுல நினைக்கிறதை சரியா சொன்னீங்க.
கலைஞரு டாபுங்க.. :)
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான அலசல் டிவிஆர் சார்
இதத்தான் ராஜ தந்திரமுன்னு சொல்வாங்களா ....
//
வருகைக்கு நன்றி Starjan
//அக்பர் said...
//ஏன்னா அவர் கொடுக்கிற தொகுதிக்கே நிற்க நாமதானே வேட்பாளரை தேடணும்.//
இது ரொம்ப டாப்.
எப்படி இவங்க மனசுல நினைக்கிறதை சரியா சொன்னீங்க.//
வருகைக்கு நன்றி அக்பர்
//D.R.Ashok said...
கலைஞரு டாபுங்க.. :)//
நன்றி D R Ashok
Post a Comment