Sunday, December 20, 2009

யாமெய்யாக் கண்டவற்றுள்...

பொய் பேசுவது என்பது இப்பொழுதெல்லாம் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.பொய்யையும் சொல்லிவிட்டு..வள்ளுவரே சொல்லியிருக்கிறார்..

பொய்ம்மையும் வாய்மை யிடத்தே புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

குற்றமில்லா நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும் கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்..என வள்ளுவனை துணைக்கழைப்பது நம் வழக்கமாய் விட்டது.

அதே வள்ளுவன்

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

மனதால் கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள் மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்..என்று சொன்னதை வசதியாக மறந்து விடுவோம்.

பொய் பேசுவது என்பது தவறான செயல் என்பது கூட தெரியாமலே செய்கிறோம்.சமுதாயத்தில் எல்லோராலும் செய்யப்படுகின்ற செயல் என அது நியாயப் படுத்தி விட்டோம்.நடைமுறை வாழ்வில் ஒன்றிவிட்ட அது தவறானதாக நமக்குத் தெரிவதில்லை.நம்மையும் அறியாது நாம் செய்யும் பாவச் செயலாக அமைந்து விட்டது.

இன்றைய உலகில் பொய் பேசாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்திட முடியாது.இன்றைய சமுதாயத்தில் அது கடினமும் கூட.அதனால்..அதற்காக அந்தப் பாவத்தை சர்வசாதாரணமாக ஒரு நாளைக்கு எவ்வளவு முறை செய்வது?

சாதாரண விஷயத்திற்கெல்லாம் பொய் பேச மாட்டேன்.மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே பொய் பேசுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.அதை நடைமுறைப் படுத்துங்கள் .ஒவ்வொரு நாளும் பேசும் பொய்களின் எண்ணிக்கையைக் குறையுங்கள்.

படிப்படியாகக் குறைத்து ஒரு நாளைக்கு ஒரு பொய் என்று கொண்டு வாருங்கள்.பிறகு இரண்டு நாளுக்கு ஒரு பொய்..பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு பொய்..என உங்களை சுத்தப் படுத்திக் கொள்ளுங்கள்.பொய் பேசுவதை மிகவும் குறைத்துக் கொள்வேன் என உறுதி பூண்டு..அதை நடைமுறை வாழ்க்கையில் அமுல் படுத்தினால்..அந்த செயல் உங்களை பெரிய அளவில் உயர்த்தி விடும்.உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.

இவ்வளவிற்கு பிறகும்..பொய் சொல்லிக் கொண்டே..நாம் பொய்யே சொல்லமாட்டேன் என்பீர்களானால்..நானும் வள்ளுவனை துணைக்கு அழைப்பேன்.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

(மனசாட்சிக்கு எதிராக பொய் சொல்லக் கூடாது.அப்படிச் சொன்னால் ,சொன்னவரின் ம்னமே அவரைத் தண்டிக்கும்) 

21 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//உள்ளத்தாற் பொய்யா தொழுகின்//

//பொய்ம்மையும் வாய்மை யிடத்தே//

நன்மையைக் கருத்தில் கொண்டு உதட்டளவில் அதாவது செயலுக்கு கொண்டுவரா வகையில் பொய் சொல்லலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா? தல..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//உள்ளத்தாற் பொய்யா தொழுகின்//

//பொய்ம்மையும் வாய்மை யிடத்தே//

நன்மையைக் கருத்தில் கொண்டு உதட்டளவில் அதாவது செயலுக்கு கொண்டுவரா வகையில் பொய் சொல்லலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா? தல..,//


செய்யலாம்..ஆனால்..எதைச் செய்தாலும் தன்னெஞ்சறியும்

உண்மைத்தமிழன் said...

நல்ல அறிவுரை ஸார்..!

பின்பற்ற முயல்கிறேன்..!

goma said...

மார்கழி மாதம் நிறைய பொய் சொல்லணும் ஏன் தெரியுமா ...?

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்..

கத கதன்னு இருக்குமே

சூப்பர் பதிவு தமிழா

பூங்குன்றன்.வே said...

//அதற்காக அந்தப் பாவத்தை சர்வசாதாரணமாக ஒரு நாளைக்கு எவ்வளவு முறை செய்வது?//

அது ஒரு பத்து முறை இந்த பாவம் செய்வேங்க..

இனி குறைச்சுக்க முயல்கிறேன்..நல்ல பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நல்ல அறிவுரை ஸார்..!

பின்பற்ற முயல்கிறேன்..!//

வருகைக்கு நன்றி உ.த.,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
சூப்பர் பதிவு தமிழா//

நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
மார்கழி மாதம் நிறைய பொய் சொல்லணும் ஏன் தெரியுமா ...?

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்..

கத கதன்னு இருக்குமே//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூங்குன்றன்.வே
இனி குறைச்சுக்க முயல்கிறேன்..நல்ல பதிவு.//

நன்றி பூங்குன்றன்

ஹேமா said...

புது வருடத்தில் எடுக்கவேண்டிய நல்லதொரு முடிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கருத்துக்கள் சார் , வாழ்க்கையில் பின்பற்றனும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான கருத்துக்கள் சார் , வாழ்க்கையில் பின்பற்றனும்//


நன்றி Starjan

நசரேயன் said...

முயற்சி பண்றேன் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
முயற்சி பண்றேன் ஐயா//

நன்றி நசரேயன்

vasu balaji said...

வழிகாட்டலுக்கு நன்றி.

மணிகண்டன் said...

&&&&
படிப்படியாகக் குறைத்து ஒரு நாளைக்கு ஒரு பொய் என்று கொண்டு வாருங்கள்.பிறகு இரண்டு நாளுக்கு ஒரு பொய்..பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு பொய்
&&&&

பசங்க பொண்ணுங்ககிட்ட இனிமே கல்யாணம் பண்ணிக்காதீங்கன்னு சொல்றீங்களா ? :)- இது எல்லாம் அநியாயம் சார்.

எம்.எம்.அப்துல்லா said...

அருமை அய்யா.(இது பொய்யில்லை)

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
&&&&
படிப்படியாகக் குறைத்து ஒரு நாளைக்கு ஒரு பொய் என்று கொண்டு வாருங்கள்.பிறகு இரண்டு நாளுக்கு ஒரு பொய்..பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு பொய்
&&&&

பசங்க பொண்ணுங்ககிட்ட இனிமே கல்யாணம் பண்ணிக்காதீங்கன்னு சொல்றீங்களா ? :)- இது எல்லாம் அநியாயம் சார்.//

:-))))
வருகைக்கு நன்றி மணிகண்டன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// எம்.எம்.அப்துல்லா said...
அருமை அய்யா.(இது பொய்யில்லை)

:)//


வருகைக்கு நன்றி எம்.எம்.அப்துல்லா