Wednesday, December 9, 2009

கலைஞரும்..குஷ்புவும்..அண்ணாசாமியின் சந்தேகமும்..

அதிபுத்திசாலி அண்ணாசாமிக்கு திரைப்பட விருது வழங்கு விழா நிகழ்ச்சிகள் குறித்து சில சந்தேகங்கள் ஏற்பட்டதாம்.அவை..அண்ணாசாமியே சொல்கிறார்..

2007 மற்றும் 2008 க்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.70க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு முதல்வர் விருதுகள் வழங்க..சிறந்த உரையாடலுக்கான விருதை கலைஞருக்கு ரஜினி,கமல்,வாலி,வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.அரசின் விருது..அரசில் சம்பந்தப் படாதவர்கள் வழங்குவது சரியா என தெரியவில்லை.

சரி..தலைப்புக்கு வருவோம்..விழாவில் கலைஞர் பேச்சில் ஒரு துளி...

உடலுக்கு, உயிருக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்படாது என்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.எனக்கு மருந்தாக அமைவது கலையுலகம்தான்.இங்கு விவேக் ஒரு கற்பனை நாடகத்தை நடத்தினார்.தமிழை காப்பாற்றியே தீருவோம் என்றார்.குஷ்பு பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழ் மொழியின் வல்லமை எத்தகையது என உணரலாம்.அத்தகைய சக்தி தமிழுக்கு உண்டு.உலகம் முழுதும் பரவிய மொழி தமிழ்.மற்ற மொழி போல ஆதிக்கம் செலுத்த வந்த மொழி இல்லை.அதுதான் நம் தாய் மொழி.செம்மொழி தமிழ்.இதை காப்பாற்ற பல போராட்டம் நடத்தி நாம் வென்றோம்.

இனி அவரின் சந்தேகங்கள்...

தமிழ் அழியாத மொழி என்றால் போராட்டம் நடத்தி வென்றோம் என்றால் ....கலைஞர் சொல்ல வருவது புரியவில்லை.

குஷ்பு தமிழ் பேசத் தெரியாதவர் என்றால்..அரசு விழாவில் தொகுத்து வழங்க அவரை ஏற்பாடு செய்தது யார்.

ஒரு வேளை ஜெயா டி.வி.,யில் குஷ்பு நிகழ்ச்சிகள் நடத்துவதால் அதை மறைமுகமாக கலைஞர் கிண்டல் செய்தாரா?

குஷ்பு பேசியே தமிழ் அழியாது என்றால்..படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைத்தால் வரிச்சலுகை ஏன்?

வரிச்சலுகையை நியாயப்படுத்தி பேசினால்..தமிழ்ப் படங்களில் தமிழ் நடிக..நடிகர்கள் நடித்தால் மேலும் சில சலுகைகளை அறிவிக்குமா அரசு.

இங்கு ஒரு லட்சம் அல்லது இரு லட்சம் தருவார்கள் அதை ஏழை எளிய மக்கள் வாழ்வதற்கும்..முதல்வர் நிவாரண நிதிக்கும் வழங்கலாம் என நினைத்தேன்.ஆனால் அப்படித்தராமல் தங்கப் பதக்கம் அணிவித்தனர்..என்று முதல்வர் பேசியுள்ளார்..தன் அரசு வழங்கும் விருது பதக்கமா..பணமா என்பது கலைஞருக்கு முன்னமே தெரியாதா?

26 comments:

kavirimainthan said...

ஜூன் மாதம் பதவியிலிருந்து ஓய்வு
பெறுகிறேன் என்ற அறிவிப்பு வந்ததும் சரி இந்த உளறல்கள்
எல்லாம் இன்னும் 6 மாதங்கள் தான் -
விரைவில் விடிவு வந்து விடும் என்று
நினைத்தோம் !

இன்று அதற்கும் ஆப்பு வைத்து விட்டார் ஸ்டாலின். " ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் கலைஞர் - எனவே அவர் பதவி விலக மாட்டார் - கவலைப்பட வேண்டாம்" என்று
கூறி விட்டார்.

இப்படி ஸ்டாலின் சொன்னது தான்
கவலையாக இருக்கிறது.
கடவுளே விடிவே கிடையாதா ?

- காவிரி மைந்தன்

http://www.vimarisanam.wordpress.com

நசரேயன் said...

கேள்விக்கு பதிலே வராது, ஆனா ஆட்டோ வரும்

goma said...

கலைஞர் தனக்குக் கிடைத்தத் தங்கப்பதக்கத்தைக் காசாக்கி ’முதல்வர் நிவாரண நிதி’க்குத் தந்துவிடலாமே

vasu balaji said...

goma said...

// கலைஞர் தனக்குக் கிடைத்தத் தங்கப்பதக்கத்தைக் காசாக்கி ’முதல்வர் நிவாரண நிதி’க்குத் தந்துவிடலாமே//

உடன் பிறப்பே. செய்கூலி சேதாரத்தில் பாதி கழித்துவிடுவார்கள் என்பதால் தான் கண்ணீர் ததும்ப நானே வைத்துக் கொண்டு தினம் தினம் அழுவது யாருக்கு தெரியப் போகிறதும்பாரு

உண்மைத்தமிழன் said...

தாத்தா இப்படியெல்லாம் அப்பப்போ ஏதாவது பேசுவாரு.. எழுதுவாரு..! எல்லாத்துக்கும் கொஸ்டீன் கேக்கப்படாது.. அதுதான் நமக்கு விதிக்கப்பட்ட விதி..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kavirimainthan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
கேள்விக்கு பதிலே வராது, ஆனா ஆட்டோ வரும்//

மீட்டருக்கு மேல கேட்பாங்களோ?
:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
கலைஞர் தனக்குக் கிடைத்தத் தங்கப்பதக்கத்தைக் காசாக்கி ’முதல்வர் நிவாரண நிதி’க்குத் தந்துவிடலாமே//

அதைப் பற்றியும் பேசியிருக்கிறார்..
'இன்று தங்கம் என்ன விலை என அறிவீர்கள்.இந்த பதக்கம் கலையுலக நினைவாக எனக்கு தந்திருக்கிறீர்கள்.இதை யாருக்கும் தந்தால் மரியாதை இல்லாமல் போய்விடும்.எனவே..இதை மட்டும் நான் யாருக்கும் தரமாட்டேன்.நானே வைத்துக் கொள்வேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
உடன் பிறப்பே. செய்கூலி சேதாரத்தில் பாதி கழித்துவிடுவார்கள் என்பதால் தான் கண்ணீர் ததும்ப நானே வைத்துக் கொண்டு தினம் தினம் அழுவது யாருக்கு தெரியப் போகிறதும்பாரு//

தினம் தினம் மௌனமாக அழுவது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தாத்தா இப்படியெல்லாம் அப்பப்போ ஏதாவது பேசுவாரு.. எழுதுவாரு..! எல்லாத்துக்கும் கொஸ்டீன் கேக்கப்படாது.. அதுதான் நமக்கு விதிக்கப்பட்ட விதி..!//

:-)))

வருகைக்கு நன்றி உண்மைத் தமிழன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அந்தத் தங்கப் பதக்கத்தை என்னிடம் தந்தால் இன்றைய தங்க விலையின் படி போட்டு பணமாகக் கொடுத்துவிடுவேன். அதை அவர் முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க்லாம் அல்லது ஏழை மக்களுக்கு நேரடியாக வழங்கலாம்.

ஏன் இந்த மாய்மாலம்!?

யாரை ஏமாற்ற!?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீண்டநாட்கள் கழித்து வருகை புரிந்தமைக்கும்..கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழை ஒழுங்காகப் பேசத் தெரியாத, வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குஷ்புவை அரசு சார்பில் நிகழ்ச்சி தொகுக்க பரிந்துரைத்த தமிழக அரசுக்கும், தமிழ்ப் படங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைக்கும் இயக்குனர்களுக்கும் என்ன வேறுபாடு என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!?

அந்த இயக்குனர்கள் தவறு செய்யக்கூடாது. ஆனால் தான் தவறு செய்யலாம்?

மாமியா ஒடச்சா மங்கொடம்
மருமவ ஒடச்சா பொங்கொடமா?

என்ன கொடுமை ஐயா இது?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

குசுபு கலைஞர் தொல்லைக்காட்சியிலும் நிகழ்ச்சி நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழை ஆய்ந்து பிழைக்கும் தலைவர்கள் முன்னிலையில் தமிழை கொலை செய்யவைத்தது கொடுமை.

அதிலும் வள்ளுவர் பெயரை வலுவர் என்றழைத்து தமிழர்களை மீண்டும் அவமானப் படுத்தியது ......!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நன்றி நன்றி ஜோதிபாரதி

பூங்குன்றன்.வே said...

//கேள்விக்கு பதிலே வராது, ஆனா ஆட்டோ வரும்//

உண்மைதாங்கோ.
ஆனா கேள்வியே கேட்காம இருந்தா இந்த அரசியல்வாதிகளை யார்தான் கேட்பது?

ரோஸ்விக் said...

ஆட்டோ தான் வரட்டுமே....நம்ம குவாலிஸ் அனுப்புவோம் தல. சும்மா பயந்து பயந்து சாகிறது...

க.பாலாசி said...

//தமிழ் அழியாத மொழி என்றால் போராட்டம் நடத்தி வென்றோம் என்றால் ....கலைஞர் சொல்ல வருவது புரியவில்லை. //

ஹிந்தி எதிர்ப்பு போராட்டமா இருக்குமோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூங்குன்றன்.வே said...
உண்மைதாங்கோ.
ஆனா கேள்வியே கேட்காம இருந்தா இந்த அரசியல்வாதிகளை யார்தான் கேட்பது?//
அதுதானே!! வருகைக்கு நன்றி பூங்குன்றன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரோஸ்விக் said...
ஆட்டோ தான் வரட்டுமே....நம்ம குவாலிஸ் அனுப்புவோம் தல. சும்மா பயந்து பயந்து சாகிறது...//

நன்றி ரோஸ்விக்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
ஹிந்தி எதிர்ப்பு போராட்டமா இருக்குமோ?//

:-))))

கரிகாலன் said...

கருணாநிதியின் முழுநேர தொழிலே கதை வசனம் எழுதுவதுதான். அது ஆட்சியில் இருந்தாலும் சரி, அறிக்கை விட்டாலும் சரி, தமிழினத்திற்கு உண்மையாக உழைத்தவர்களை உழைப்பவர்களை இழிவு படுத்தினாலும் சரி, அரசு திட்டங்களை வெளியிட்டாலும் சரி... மனைவிகள் வைத்துக்கொண்டாலும் சரி... துணைவிகள் வைத்துக்கொண்டாலும் சரி... இப்படி எதைச்செய்தாலும்...

வசனம்... வசனம்...

காசு... காசு....

சுயநலம்... சுயநலம்...

கருணாநிதியின் அரசியல் அழிவில்தான் தமிழின் தமிழினத்தின் விடியல் அடங்கியுள்ளது என்பதை மானமுள்ளவர்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கரிகாலன்

அத்திரி said...

நல்லாவே கேள்விக்கேட்டிருக்கீங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி