Friday, December 4, 2009

உண்மையா..பொய்யா..என்னவோ நடக்குது



பல விஷயங்களில்..நாட்டு நடப்புக்களைப் பார்த்து நாம் சொல்லும் வார்த்தைகளே இவை.
இன்று...உண்மை மட்டுமே பேசுவேன்..என்று ஒருவன் சொல்வானானால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.
பொய் பேசாதவர்களே இன்று இருக்க முடியாது.
அலுவலகத்தில் விடுமுறை தேவையானால்..எற்கனவே செத்துவிட்ட நம் தாத்தா,பாட்டிகள் உதவிக்கு வந்து..அன்றுதான் மீண்டும் சாகிறார்கள்.
தான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.
5000 ரூபாய்க்கு ஒரு புடவையை வாங்கிவிட்டு அத விலை 3000 என்று சொல்லாத மனைவிகள் இருக்கிறார்களா?
தன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர்,
சுருங்கச் சொன்னால்..பொய் ..நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்டது.
நாம் பேசுவது பொய் என்று தெரிந்துவிட்டால்...
தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறான் வள்ளுவன்.,'பொய்மையும் வாய்மை இடத்தே என்று வள்ளுவனே சொல்லி இருக்கார்'என அவரை துணைக்கு இழுத்து விடுவோம்.

ஒரு சமயம்..அக்பர்..பீர்பாலிடம் 'உண்மைக்கும் பொய்க்கும் அப்படி என்ன வித்தியாசம் என்றார்.
உடனே பீர்பால்'நான்கு விரர்கடை வித்தியாசம்'என்றாராம்.
நான்கு விரல்களை காதுக்கும்,கண்ணுக்கும் இடையில் வைத்து'காதால் கேட்பதெல்லாம் உண்மையாகி விடாது..ஆனால் கண்ணால் காண்பது நிஜம்.அதனால் காதுகளால் கேட்பதை வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது..கண்ணால் பார்த்து தீர விசாரித்தே உண்மையை நிர்ணயிக்க முடியும்'என்றார்.
அதனால் காதிலே கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது.
ஆமாம் கண்ணால் பார்த்தால் அது நிஜமா...தெரியவில்லையே..
'கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்..'என ஒரு கவிஞன் சொல்லி இருக்கானே!!!!

15 comments:

vasu balaji said...

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்ன்னா ஒன்னொன்னுத்துக்கும் அலையவா முடியும். அப்படி விசாரிச்சாலும் கேட்கவோ பார்க்கவோ தானே செய்யணும். ஏன் இப்படி குழப்பிச்சிங்க பெருசுங்க..அவ்வ்வ்

சிநேகிதன் அக்பர் said...

உண்மையும் பொய்யும் வாழ்க்கையில் பின்னிபிணைந்தே இருக்கிறது. ஆனா அது நல்லதுக்கா கெட்டதுக்கா என்பதை பொறுத்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்ன்னா ஒன்னொன்னுத்துக்கும் அலையவா முடியும். அப்படி விசாரிச்சாலும் கேட்கவோ பார்க்கவோ தானே செய்யணும். ஏன் இப்படி குழப்பிச்சிங்க பெருசுங்க..அவ்வ்வ்//


அதுதானே!
வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
உண்மையும் பொய்யும் வாழ்க்கையில் பின்னிபிணைந்தே இருக்கிறது. ஆனா அது நல்லதுக்கா கெட்டதுக்கா என்பதை பொறுத்தது.//

நீங்களும் வள்ளுவனை துணைக்கு அழைத்து விட்டீர்கள்.
வருகைக்கு நன்றி அக்பர்

பூங்குன்றன்.வே said...

சூழ்நிலை தான் பொய் பேச வைக்கிறது என்றாலும் கூட முடிந்தவரை உண்மை பேசவே முயல வேண்டும்.நல்ல பதிவு.

பின்னோக்கி said...

நல்ல விஷயங்க. பிறருக்கு உதவியாக இருக்கும்னா பொய் சொல்லலாம்னு தோணுது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூங்குன்றன்.வே said...
சூழ்நிலை தான் பொய் பேச வைக்கிறது என்றாலும் கூட முடிந்தவரை உண்மை பேசவே முயல வேண்டும்.நல்ல பதிவு.//

வருகைக்கும்..உங்கள் கருத்துக்கும் நன்றி பூங்குன்றன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
நல்ல விஷயங்க. பிறருக்கு உதவியாக இருக்கும்னா பொய் சொல்லலாம்னு தோணுது//

வருகைக்கும்..உங்கள் கருத்துக்கும் நன்றி பின்னோக்கி

எம்.எம்.அப்துல்லா said...

//ஏன் இப்படி குழப்பிச்சிங்க பெருசுங்க..அவ்வ்வ்

//

பாருங்க இந்த யூத்துக்கு எவ்வளவு பெரிய சந்தேகம் வந்துருக்கு :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
//ஏன் இப்படி குழப்பிச்சிங்க பெருசுங்க..அவ்வ்வ்

//

பாருங்க இந்த யூத்துக்கு எவ்வளவு பெரிய சந்தேகம் வந்துருக்கு :))//

:-)))
வருகைக்கு நன்றி அப்துல்லா

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல விஷ்யங்களை சொல்லும்போது அதை கேட்கிறவங்களை பொறுத்து !!

உண்மையா பொய்யா ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல விஷ்யங்களை சொல்லும்போது அதை கேட்கிறவங்களை பொறுத்து !!

உண்மையா பொய்யா ...//

:-))))

Thenammai Lakshmanan said...

தீர விசாரிப்பதே மெய்

நல்லா இருக்கு ராதா கிருஷ்ணன்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

பெயர் சொல்ல விருப்பமில்லை

நினைவாற்றல் போட்டி நல்லா இருக்கு

கவிதைப் போட்டியிலும் வெல்ல வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..உங்கள் கருத்துக்கும் நன்றி thenammailakshmanan