நான் ஒரு இந்தியன் என வார்த்தைக்கு வார்த்தைக் கூறி பெருமைப்பட்டுக் கொள்பவன் ஹுசைன்.
அரசின் தாராளமயமாக்கல் கொள்கையில் பல வெளிநாட்டுப் பொருள்கள் இந்தியாவில் கிடைத்தாலும்..ஹுசைன் தரம் பற்றிக் கூடக் கவலைப் படாமல் இந்திய பொருள்களையே வாங்குவான்.கேட்டால்..இது இந்திய தயாரிப்பு..என் சகோதரன் ஒருவன் கையால் உருவாக்கப்பட்டது..பி இந்தியனாய் இருந்தால் மட்டும் போதாது..பை இந்தியனாய் இருக்க வேண்டும் என்றும் கூறுவான்.
அப்படிப்பட்டவனுக்கு திடீரென என்னவாயிற்று என்று தெரியவில்லை..'நான் ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்றிருக்கிறது..நான் பாகிஸ்தானில் பிறந்திருக்கக் கூடாதா ?' என்று சிறிது நாட்களாக புலம்ப ஆரம்பித்திருந்தான்.
'சுதந்திரம் கிடைத்ததும் ..என் முன்னோர் பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு குடி உரிமை பெற்றிருக்கலாமே..தவறு செய்து விட்டார்கள்' என்றான் ஒருநாள் என்னிடம்..கண்களில் முட்டிக் கொண்டிருக்கும் கண்ணீருடன்.
இவ்வளவு நாட்களாக இந்தியன் என்று பெருமையாகப் பேசியவனை எது மாற்றியது..என அறியாது திகைத்தேன் நான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை..
ஹுசைனைப் போய் பார்க்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல..பெரம்பூர் ஜமாலியாவிற்குச் சென்றேன்.
வாசல் வழியாகவே வந்து என்னை வரவேற்றான்..அவன் மனைவி ரஷீதாவிற்கு குரல் கொடுத்தான்'ரஷீதா குமரன் பாயி வந்திருக்கார் பாரு".ரஷீதா வந்து 'கைசே ஹோ பாயி?'என்றாள் கையில் சாய் உடன்.
அவனது இரண்டு வயது மகன்..ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் குட்டிப்பையனைப் போல..அப்படியே சாப்பிடுவேன் போல..இருந்தான்.அவனுடன் சிறிது நேரம் விளையாட ஆரம்பித்தேன்.
'குமரா..இவனுக்கு இதயத்தில் கோளாறு..ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யணுமாம்..கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் செலவாகுமாம்..அதற்குத்தான் என்ன செய்யறதுன்னு தெரியலை" என்று மனம் திறந்தான் ஹுசைன் என்னிடம்.
அப்படியா? என்று கேட்டுவிட்டு..அவனது வருத்தம் தோய்ந்த முகத்தைப் பார்க்க முடியாது என் பார்வையை டீபாய் மீது இருந்த ஒரு பழைய செய்தித்தாள் மீது செலுத்தினேன்.
'பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தை ஒன்றுக்கு இலவச இருதய மாற்றுச் சிகிச்சை..சென்னை மருத்துவர்கள் சாதனை' என்று கொட்டை எழுத்துக்களில் இருந்த செய்தி கண்ணில் பட்டது.
ஹுசைனின் திடீர் மன மாற்றத்திற்கான காரணம் புரிந்தது.
12 comments:
Good!!!
வருகைக்கு நன்றி VISA
Superb
வருகைக்கு நன்றி ரமேஷ் கார்த்திகேயன்
ரொம்ப நல்லா எழுதிருகீங்க
வருகைக்கு நன்றி aazhimazhai
அருமையான கதை
ஏன் இந்தியாவில் இந்த வசதி இல்லையா ; இந்தியா எதில் குறைந்து விட்டது
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் , இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம் .
கதையில் வர்றமாதிரி தான் நிறைய பேர் இருக்காங்க .
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான கதை
ஏன் இந்தியாவில் இந்த வசதி இல்லையா ; இந்தியா எதில் குறைந்து விட்டது
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் , இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம் .
கதையில் வர்றமாதிரி தான் நிறைய பேர் இருக்காங்க .//
வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்..நான் சொல்ல வந்தது..வேற்று நாட்டு பிரஜைகளுக்கு இலவச வைத்தியம் செய்து புகழ் தேடிக்கொள்ளும் மருத்துவர்கள்..நம் நாட்டு குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சை மேற்கொள்ளலாமே என்ற கருத்தைத்தான்.எந்த நாடாய் இருந்தாலும் உயிர் ஒன்றுதானே!!!
//அண்ணாமலையான் said...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க//
நன்றி அண்ணாமலையான்
ISLAMIYA SAKOTHARANAAKA IRUNTHAALUM ///PURIYAVILLAI NANBARE ANTHA LUM KONJAM IDIKKIRATHU.ANTHA LUM PALA ANRTHANGALAI KODUKKIRATHU.
சுட்டிக்காட்டியம்மைக்கு நன்றி..அந்த வார்த்தைகளை நீக்கிவிட்டேன்.
வருகைக்கு நன்றி Barari
Post a Comment