Saturday, December 19, 2009

அதிபுத்திசாலி அண்ணாசாமியும்... சிறுகதைப் போட்டியும்..

சிறுகதைப் போட்டி பற்றிய அறிவிப்பு ஒன்று வந்திருந்தது.

அதைப்பார்த்ததும் அதி புத்திசாலி அண்ணாசாமியின் இல்லாள்..அவரை அதில் கலந்துக் கொள்ளச் சொன்னாள்.ஆனால் அண்ணாசாமிக்கு அதற்கான திறமை தனக்கு இல்லை என்று தெரியும்.ஆனால் அவரது மனைவியிடம் மிகவும் திறமைசாலியைப் போல இதுநாள் வரை நடந்து வந்திருந்தார்.

ஆகா..அப்படி நாம் நடந்துக் கொண்டதால்..இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டோமே..இப்போது சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிட்டதே என மனதிற்குள் புலம்பினார்.

தான் அனுப்பும் படைப்பு..பத்திரிகைகளில் சாதாரணமாக பிரசுரம் ஆவதற்கே தகுதி வாய்ந்ததா என்று தெரியாது..இதில் போட்டியில் வேறு கலந்துக் கொள்ள வேண்டுமா?என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாலும்..சகதர்மணிக்காக ஒரு குயர் வெள்ளைத்தாளும்..பேனாவுமாக உட்கார்ந்துக் கொண்டார்.

அடுத்து என்ன எழுதுவது என்ற பிரச்னை..எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற விதி இருந்ததால் ..நகரங்களில் காணாமல் போய் உள்ள சிட்டுக் குருவிகள் பற்றி எழுதலாமா? அல்லது ..சாதியத்தை வைத்து எழுதலாமா..என மண்டையை உடைத்துக் கொண்டார்.

ஆனால்..எதைப்பற்றி எழுதினாலும்..அது நன்றாய் இருக்கிறதா..இல்லையா..என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது..சரி..சரி..அதைப் பற்றி என்னக் கவலை..அதை தீர்மானிக்க வேண்டியவர்கள் நீதிபதிகள்.அவர்கள் கவலை அது.

பேனாவை அமுக்கி (பால் பாயிண்ட் ஆயிற்றே) சிட்டுக் குருவி பற்றி எழுத ஆரம்பிக்க..அது கழுகு ரேஞ்சிற்கு வந்தது.அதை மனைவிக்கு படித்துக் காண்பித்தார்..

பொறுமையாகக் கேட்டவள்..'என்ன எழுதி இருக்கீங்க..என்ன சொல்ல வரீங்க..ஒன்னுமே புரியலையே..இதை அனுப்பினால் நிதிபதிகள் ஒன்றும் புரியாமல் முழுதும் கூட படிக்க மாட்டார்கள்.குப்பைத் தொட்டிக்குத்தான் போகும்' என்றாள்.

'அப்படியா..அப்படியா..ஒன்னுமே புரியலையா?' என மிகவும் மகிழ்ச்சியுடன் அண்ணாசாமி கேட்டார்.மனைவியும் ஆமாம் என்பது போல தலையை ஆட்டினாள்.

'அப்போ பரிசு எனக்குத்தான்..ஒரு சாதாரண வாசகனால் படித்துப் புரிந்துக் கொள்ள முடியா கதை என்றால்..நடுவர்களுக்கும் புரியும் சான்ஸ் இல்லை.ஒரு சமயம் இந்தக் கதையில் ஏதோ விஷயம் இருக்கிறது..நாம் புரியவில்லை என்று காட்டிக் கொண்டால்..நம்மை முட்டாள் என எண்ணிவிடுவார்கள்..என்று ஒவ்வொரு நடுவரும் மனதில் நினைத்துக் கொண்டு என் கதையை பரிசுக் கதையாக தேர்ந்தெடுப்பார்கள்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது' என்றார் மனைவியிடம்.

அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.

17 comments:

ஊசூ said...

Hi,
I second ur writings..An art is lost when we use intelligence..It shud go on its own flow...Here 'intelligence ' not only related to 'useless non understandable stuffs", it is also related to our monotonous thinking.....

eg : Let us take dream as an example..It is always appear in abstracts and its closely related to 'spatial time ' concepts in 'theory of relativity'....Here i found many people when pen poems write 'dream as some thing a continous flow"..Is it deviating from reality ?

ஊசூ said...

I advocate for art to be 'discovered' not be write with our own views..If it discovered , we can discover a various dimesnions of a topic eg: subconcious mind, dream , nature .......

Are we doing it....We just write our own views in the name of 'monotonous single way writing'...Is it good for growth of literature....

Even 'time ' is dimensionless but we make our writing to very monotonous one...
This may be the reason why many 'intelligent ' people create useless stuffs which not understandable to any one....

What's ur say?

vasu balaji said...

:)). அநியாயக் குசும்பு சார்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அதி புத்திசாலி அண்ணாச்சாமிக்கு வாழ்த்துக்கள்

பூங்குன்றன்.வே said...

ஓஹோ..இப்படிதான் நம்ம அண்ணாசாமி மாதிரி இருக்கணுமா :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கதையா கவிதையா தல..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஊசூ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
:)). அநியாயக் குசும்பு சார்.//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அதி புத்திசாலி அண்ணாச்சாமிக்கு வாழ்த்துக்கள்//

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூங்குன்றன்.வே said...
ஓஹோ..இப்படிதான் நம்ம அண்ணாசாமி மாதிரி இருக்கணுமா :)//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
கதையா கவிதையா தல..,//

எதுக்கு இப்ப்டி கேட்கறீங்கன்னு புரியலையே

சிநேகிதன் அக்பர் said...

கதை ரொம்ப நல்லா இருக்கு.

ஹேமா said...

இப்போ இங்க அண்ணாசாமியை விட நீங்கதான் புத்திசாலி.நல்ல கதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
கதை ரொம்ப நல்லா இருக்கு.//


நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
இப்போ இங்க அண்ணாசாமியை விட நீங்கதான் புத்திசாலி.நல்ல கதை.//


வருகைக்கு நன்றி ஹேமா

அன்புடன் மலிக்கா said...

கதைகதையாம் காரணமாம்.. நல்லாயிருக்கு அண்ணாசாமி கதை..

http://niroodai.blogspot.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அன்புடன் மலிக்கா