Thursday, March 11, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(12-3-10)

1)ஒரு செடியை வைச்சாக்கூட அதுல நூறு பூக்கள் பூக்குது.வாசனையா இருக்குது.ஒரு தென்னை மரத்தை வைச்சா வாழ்நாள் பூரா காய்ச்சுத் தள்ளிக் கிட்டே இருக்குது.இயற்கையாகவே..அதுகளுக்கு..மத்தவங்களுக்குப் பிரயோஜனப்படற மாதிரி அமைப்பு இருக்கு..மனுஷன் மட்டும்தான் ஒவ்வொண்ணுக்கும் கணக்குப் பார்த்துக் கிட்டு..யாருக்கும் பிரயோஜனப்படாமல் போயிட்டு இருக்கான்...(எஸ்.ராமகிருஷ்ணன்...துணைஎழுத்தில்)

2)நிழலுக்கும்..குழலுக்கும் உவமையாக இன்றைய கவிஞரால் சொல்லப்பட்ட..கரிகாலன்..கல்லணையைக் கட்டிய மன்னன்.வடதிசை வென்று..இமயத்தில் புலிக்கொடியை நாட்டியவன்.சேரன்,பாண்டியவர்களுடன் இணந்த பதினோரு சிற்றரசர்களை வென்னிப் போரில் புறம் காண வைத்தவன்.பொருணராற்றுப்படை இவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றது

3)வெற்றியும், தியாகமுமே உண்மையான வீரம் என போற்றப்படுவது.ஆனால் இன்றைய தாதாக்களும்..பேட்டை ரௌடிகளும் வீரர்களாகத் திகழ்வதாக எண்ணிக் கொண்டுள்ளனர்.

4)உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் முதல் நாலு இடங்களில் கூட வரமுடியாத இந்தியாவின் ஒலிம்பிக் சாதனைகள் ஹாக்கியில்தான். 1928 முதல் 1956 வரை தொடர்ச்சியாக முப்பது போட்டிகளில் ஜெயித்த இந்தியா ஆறு முறை தங்கம் வென்றது.

5)பக்தி என்பது தனிச் சொத்து..ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து..பக்தி இல்லை எனில் பரவாயில்லை ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் எல்லாமே பாழ்.. இப்படி சொன்னவர் பெரியார்.

6)அண்ணா முதல்வராய் இருந்து மறைந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5000 ரூபாயும்..மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5000 ரூபாயும் மட்டுமே அவரது கணக்கில் இருந்த பணமாம்.

7)கொசுறு ஒரு ஜோக்

ராகு காலத்தில செய்யற வேலை எதுவும் சரியா நடக்காதாமே..உண்மையா
எனக்குத் தெரியாது..ஆனா..நீ வர்றப்போ நான் எந்த வேலையும் செய்யறதில்ல

14 comments:

மணிஜி said...

ஒரு 10.30-12.00 க்குள் வரட்டுமா?

ராம்ஜி_யாஹூ said...

அண்ணா பற்றி இந்த விசயமும் கேள்வி பட்டு இருக்கிறேன்.

முதல்வராக ஆன பிறகும், தான் வழக்கமாக முடி திருத்தும் கடைக்கு (இப்போது நுங்கம்பாக்கத்தில் விஜய் டிவி இருக்கும் அலுவலகம் அருகில் உண்டாம் அந்த கடை), நடந்தே சாமானியர் போல சென்று வருவர் என்பதே.

vasu balaji said...

தண்டோரா ...... said...

/ஒரு 10.30-12.00 க்குள் வரட்டுமா?/

வரும்போது என்ன பிக்கப் பண்ணிக்க முடியுமா? இல்லைன்னா எங்க மீட் பண்ணலாம்.:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தண்டோரா ...... said...
ஒரு 10.30-12.00 க்குள் வரட்டுமா?//

கண்டிப்பா வாங்க..நான் எந்த வேலையையும் அப்போ செய்யப்போறதில்ல ஃப்ரீ தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராம்ஜி_யாஹூ said...
அண்ணா பற்றி இந்த விசயமும் கேள்வி பட்டு இருக்கிறேன்.

முதல்வராக ஆன பிறகும், தான் வழக்கமாக முடி திருத்தும் கடைக்கு (இப்போது நுங்கம்பாக்கத்தில் விஜய் டிவி இருக்கும் அலுவலகம் அருகில் உண்டாம் அந்த கடை), நடந்தே சாமானியர் போல சென்று வருவர் என்பதே.//

அது மட்டுமல்ல்..தனக்கு உடல்நிலை பாதிக்கப் பட்ட போது வேலூர் சி.எம்.சி., க்கு போகச் சொன்னப்போ..நாமே அரசு மருத்துவ மனைக்கு போகலேன்னா எப்படி..என்றவராம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
தண்டோரா ...... said...

/ஒரு 10.30-12.00 க்குள் வரட்டுமா?/

வரும்போது என்ன பிக்கப் பண்ணிக்க முடியுமா? இல்லைன்னா எங்க மீட் பண்ணலாம்.:))//

ஆகா..இரண்டு ஒன்றரை மணிகளை சமாளிக்கணுமா?.......ப்போம்.

மங்குனி அமைச்சர் said...

1 => சார் அது இயற்கை , அதன் இன விருத்திக்காக. அனால் மனிதனை போல் அடுத்தவர்களுக்கு தீங்கு , கெடுதல் நினைப்பதில்லை
2 => அருமையான நினைவூட்டல்
3 => என்னா தமிழு எங்ககிட்ட ராங்கு காட்றியா?
4 => இன்னும் 100 வருடத்திற்கு இதை நினைத்து பெருமைபட்டுகல்லாம். (அதுக்குள்ள ஹாக்கி அழிந்துவிடும்)
5 => உண்மை
6 => அவுகள்லாம் மனுசங்க சார்
7 => ஆகா மறுபடியும் மங்குனி தன் வேலைய காடிட்டானா ?

Chitra said...

அண்ணா முதல்வராய் இருந்து மறைந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5000 ரூபாயும்..மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5000 ரூபாயும் மட்டுமே அவரது கணக்கில் இருந்த பணமாம்.

.......... :-)

க.பாலாசி said...

பெரியார்
அண்ணா... வாழ்ந்த வரலாறுகள்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
மங்குனி அமைச்சர்
Chitra
க.பாலாசி

goma said...

5)பக்தி என்பது தனிச் சொத்து..ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து..பக்தி இல்லை எனில் பரவாயில்லை ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் எல்லாமே பாழ்.. இப்படி சொன்னவர் பெரியார்.

பெரியார்ன்னா பெரியார்தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி gOma

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பக்தி என்பது தனிச் சொத்து..ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து..பக்தி இல்லை எனில் பரவாயில்லை ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் எல்லாமே பாழ்.. இப்படி சொன்னவர் பெரியார்.//

பக்தி பரவசம் அடைந்தால் ஒழுக்கம் உருவாகிறது..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)