பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் தவறு..இதற்கு ஹால்திராம் அதிபர் பிரபுசங்கர் அகர்வாலே சரியான உதாரணம்.கோடீஸ்வரரான அவர் கொல்கத்தாவில் தங்களது புதுக் கடையை மறைக்கும் வகையில் இருந்த டீக்கடையை எடுக்கச் சொல்லி..மறுத்த டீக்கடைக்காரரை கூலிப்படையை வைத்து போட்டுத் தள்ள நினைத்தார்..இப்போது கம்பி எண்ணுகிறார்
2)உலகில் உள்ள புத்தகம் எல்லாம் தீக்கிரையாகப் போகிறது..உங்களால் பத்து புத்தகங்கள் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்றால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? என ஆஸ்கர் ஒயில்டிடம் கேட்கப்பட்டதாம்..அதற்கு அவர் இதுவரை நான் ஆறு புத்தகங்கள் தான் எழுதியுள்ளேன் என்றாராம்..
3)அண்ணாவிற்கு 'தென்னக பெர்னாட்ஷா' என்ற பட்டத்தை கல்கி கொடுத்தது நமக்குத் தெரியும்.அதுபோல தமிழ் நாட்டின் ஷேக்ஸ்பியர் என அழைக்கப்பட்டவர் நாடகத் தந்தை என அழைக்கப் பட்ட பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்.
4)மனிதனின் ஜாதகத்தைப் பார்த்து 'தோஷம்' இருக்கிறது என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்..ஆனால் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் கொடிமரத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி அதை மாற்றுவதுக் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறதாம் ஆலய நிர்வாகம்
5)சிவகாசியில் ஒரு விழாவில் கலந்துக் கொண்டு இரவு பத்து மணிக்கு காரில் திரும்பியவர்..விருதுநகர் பைபாஸ் சாலையில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிக் கிடக்க..இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து..தன் காரை நிறுத்தி அவர்களை எற்றி மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு..அவர்களது உறவினர்களுக்கும் சேதி சொல்லிவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தாராம் வைகோ..இப்படியிருந்தால் எப்படி அமைச்சராக முடியும்?
6)மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளைத் தானம் கொடுக்கும் பழக்கம் ஹிதேந்திரன் புண்ணியத்தால் அதிகரித்திருக்கிறது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்த 77 பேர்களின் கண்கள்,இதயம்,சிறுநீரகம்,கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு..மற்றவர்களுக்கு பொருத்தப் பட்டிருக்கிறது.
7)கலைஞரைத் தவிர வேறு எவரையும் தி.மு.க.,வில் தன் தலைவராக ஏற்றுக் கொள்ளமுடியாது என மத்திய அமைச்சர் அழகிரி..சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் கூறியுள்ளார்
டிஸ்கி..நாளை 27-3-10 அன்று மாலை 5.30 மணிக்கு மேற்கு கே.கே.,நகர்,முனுசுவாமி சாலை..டிஸ்கவரி பேலஸில் நடைபெற உள்ள பதிவர்கள் கலந்துரையாடலுக்கு அலைகடலென திரண்டு வாரீர்..வரும் அனைவருக்கும் பிஸ்கெட்,டீ கொடுக்கப்படும்..உபயம் தனது என உண்மைத்தமிழன் தெரிவித்துள்ளார்.
24 comments:
7ம் ஜோக்கா சார். அடுத்தது கொசுறுன்னு வருதே:)). அப்புறம் டிஸ்கி:))
5)சிவகாசியில் ஒரு விழாவில் கலந்துக் கொண்டு இரவு பத்து மணிக்கு காரில் திரும்பியவர்..விருதுநகர் பைபாஸ் சாலையில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிக் கிடக்க..இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து..தன் காரை நிறுத்தி அவர்களை எற்றி மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு..அவர்களது உறவினர்களுக்கும் சேதி சொல்லிவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தாராம் வைகோ..இப்படியிருந்தால் எப்படி அமைச்சராக முடியும்?
---------------
அதானே!!!???
TVRK sir, நல்லதொரு தொகுப்பு ..
- Murali
www.myownscribblings.blogspot.com
வேட்டிய மடிச்சிகிட்டு ஆம்புலன்சுக்கு போன் பண்ணினா மந்திரி ஆகலாம்..:))
சுவையான தொகுப்பு..!
-
DREAMER
சுவையான சுண்டல்.
//வானம்பாடிகள் said...
7ம் ஜோக்கா சார். அடுத்தது கொசுறுன்னு வருதே:)). அப்புறம் டிஸ்கி:))//
:-))))
வருகைக்கு நன்றி கோமா
//முரளி said...
TVRK sir, நல்லதொரு தொகுப்பு ..
- Murali
www.myownscribblings.blogspot.com//
நன்றி முரளி
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
வேட்டிய மடிச்சிகிட்டு ஆம்புலன்சுக்கு போன் பண்ணினா மந்திரி ஆகலாம்..:))//
அதை..அதை..அதைத்தான் சொல்றேன்
//DREAMER said...
சுவையான தொகுப்பு..!//
நன்றி DREAMER
//Chitra said...
சுவையான சுண்டல்.//
நன்றி Chitra
நல்ல பகிர்வு!
மிக அழகான தொகுப்பு.
கார்த்திக்.
புதிய தொடர் என் வலை பூவில். படியுங்கள். கருத்தை பகிருங்கள்.
http://eluthuvathukarthick.wordpress.com/
//.. இப்படியிருந்தால் எப்படி அமைச்சராக முடியும்? ..//
அதானே?
Thoguppu arumai..Antha joke(?) thavira..
// வால்பையன் said...
நல்ல பகிர்வு!//
நன்றி Arun
//Imayavaramban said...
மிக அழகான தொகுப்பு.//
நன்றி Imayavaramban
//மோனி said...
//.. இப்படியிருந்தால் எப்படி அமைச்சராக முடியும்? ..//
அதானே?//
வருகைக்கு நன்றி மோனி
//கிருஷ்குமார் said...
Thoguppu arumai..Antha joke(?) thavira..
நன்றி கிருஷ்குமார்
//பாடகர்- நான் நல்லாப் பாடுவேன்..உங்க சபாவிலே ஒரு சான்ஸ் கொடுங்க
சபா காரியதரிசி-முதல்லே உங்களைப் பாடையிலே நான் பார்க்கணும் //
அண்ணே அறம் வேண்டாமே? தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்...
// .இப்படியிருந்தால் எப்படி அமைச்சராக முடியும்? //
சரியாகச் சொன்னீங்க.. பிழைக்கத் தெரியாத மனுஷன்..
// பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் தவறு..//
பணம் இருந்தால் மெத்தையை வாங்கலாம்.. தூக்கத்தை வாங்க முடியாது..
உணவை வாங்கலாம்.. பசியை வாங்க முடியாது...
அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது..
/// இராகவன் நைஜிரியா said...
அண்ணே அறம் வேண்டாமே? தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்///
பாடையிலே என்பது பாடுகையில் என்பதை மதுரை வழக்குப் பேச்சு "பாடையிலே" இருப்பினும் உங்கள் பின்னூட்டத்தையும், கிருஷ்குமார் பின்னூட்டத்தையும் பார்த்து அந்த ஜோக்கை எடுத்து விட்டேன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..ராகவன்
Post a Comment