இந்த பதிவின் முதல் பாகம்
ஓமந்தூராருக்குப் பிறகு 1949ல் குமாரசாமி ராஜா முதல்வரானார்.இதன்பின் மாகாண எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டு..சென்னை மாநிலம் என்று பெயரிடப் பட்டது.செயின்ட் ஜார்ஜ் கோட்டை,சென்னைப் பல்கலைக் கழக செனடர் ஹால்ல்,சில்ரன்ஸ் தியேட்டர்,ராஜாஜி ஹால்..என பல இடங்களில் சட்டசபை நடந்தது.1959ல் ஏப்ரல் மாதம் இருபது நாட்கள் ஊட்டியிலும் நடந்தது.அதற்கு பின் 1959ல் ஆகஸ்ட் முதல் தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே இதுவரை தொடர்ச்சியாக நடந்து வருகிறது.1950ல் குடியரசுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் குமாரசாமி ராஜா முதல்வர்.
இந்திய குடியரசின் முதல் கவர்னர் ஜெனரலாய் இருந்த ராஜாஜி 1952ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வரானார்.
பின் 1954 முதல் 1963 வரை காமராஜ் முதல்வர்..தமிழகத்தின் பொற்காலம் இது எனலாம்.மக்கள் நல திட்டங்கள் பல அக்காலத்தில் உருவாயின.மதிய உணவு திட்டம், இலவச கல்வி மற்றும் கிண்டி,அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் உருவாயின.கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் முதல்வராய் இருந்த காமராஜர்..கட்சியைப் பலப்படுத்த..காமராஜர் பிளான் என்று ஒன்றை அமுல் படுத்தி..தான் உள்பட இந்தியாவின் மூத்த தலைவர்களை அரசிலிருந்து வெளியேற வைத்தார்.
அந்தக் காலகட்டத்தில் 1963ல் பக்தவத்சலம் முதல்வரானார்.1965 இந்தி எதிர்ப்பு, கடுமையான அரிசி பஞ்சம் ஆகியவை காங்கிரஸ் அரசை ஒழிக்க முக்கிய காரணமாயின.காங்கிரஸ் கட்சியின் பால் மனக்கசப்புக் கொண்ட ராஜாஜியும்,,காங்கிரஸை ஒழிப்பதே தன் குறிக்கோள் என வயதான காலத்தில் சுதந்திரக் கட்சியை நிறுவினார்.கணிசமான ஆதரவு இருந்தது கட்சிக்கு.1967ல் தி.மு.க.உடன் கூட்டணி வைத்தார்.அந்த தேர்தலில் தி.மு.க., ஆட்சியைக் கைப் பற்ற...இன்றுவரை மீண்டும் காங்கிரஸ் பதவியை பிடிக்க முடியவில்லை.
1967ல் அண்ணா..திராவிடக் கட்சியின் முதல் முதல்வர் ஆனார். ..பதவி ஏற்ற உடன் ஒரு படி ஒரு ரூபாய் அரிசி..படிப்படியாய்..ரூபாய்க்கு மூன்று படி என்பது தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையாய் இருந்தது. தி.மு.க., பதவி ஏற்றதும் சென்னை,கோவை மாவட்டங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி சில காலம் போடப்பட்டது.
இதற்கிடையே உடல் நலக் குறைவால் 3-2-69 அண்ணா இயற்கை எய்த..கலைஞர் 10-3-69ல் முதல்வரானார்.(நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வர்)கை ரிக்க்ஷா ஒழிப்பு திட்டம்..கலைஞர் ஆட்சியின் அருமையான திட்டமாகும்.பின் தி.மு.க., வில் பிளவு ஏற்பட எம்.ஜி.ஆர்., கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.அவர் அண்ணா தி.மு.க., வை ஆரம்பித்தார்.ஜூன் 77ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மறைவு வரை டிசம்பர் 87 வரை முதல்வரானார்.பின் அவர் மனைவி ஜானகி முதல்வரானார்.ஜெ அணி (ஜெயலலிதா) ஜா அணி (ஜானகி அணி ) உருவானது ..அதனால் ஜானகி 23 நாட்களே முதல்வராய் இருந்தார்.
89ல் கலைஞர் முதல்வர் ஆனார்..ஆனால் இரு ஆண்டுகளில் அவர் ஆட்சிகவிழ..91 ல் மீண்டும் தேர்தல்..இச்சமயத்தில்..பிரசாரத்திற்கு சென்னை வந்த ராஜிவ் கொல்லப்பட்டார்.அனுதாப அலை வீச காங்கிரஸ் கூட்டணி கட்சியாய் இருந்த ஜெயலலிதா முதல்வரானார்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, வளர்ப்பு மகன் திருமணம் ஆகியவை ஜெ விற்கு எதிர்ப்பை அதிகமாக்கின.
1996ல் மீண்டும் கலைஞர் முதல்வர்..மூப்பனார் கூட்டணியில் கலைஞர் வென்றார்.இந்த சமயத்தில் தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்தது. ஜெ மீது பல ஊழல் வழக்குகள் போடப்பட்டன.ஜெ கைதானார்.
2001ல் மிண்டும் ஜெ முதல்வர்..பழிக்கு பழி என்ற போக்கில் பாலங்கள் கட்டியதில் ஊழல் என ஒரு நாள் நள்ளிரவு கலைஞர் கைது..அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது ஆயிரக்கணக்கான ஊழியர் கைது ஆகிய செயல்கள் ஜெ வை 2006ல் தோற்கடிக்க..பல இலவச திட்டங்கள் கலைஞரை மீண்டும் அரியணை ஏற்றின.(இச் சமயத்தில்தான் ஒரு தேர்தலில் நான்கு இடங்களில் வேட்பு மனுதாக்கல் செய்த ஜெ சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் இரண்டாம் நாள் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவி வகுத்தார். )
2006ல் பதவிக்கு வந்த தி.மு.க., அதன் நிறுவனத் தலைவரால் முடியாத காரியத்தை வெற்றிகரமாக செயலாக்கியது..ஆம்..ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடப்பட்டது.இது சாதனையாகும்..கண்டிப்பாக கலைஞரின் சாதனை.இந்த அரசின் மேலும் சில சாதனைகள்
இஸ்லாமியருக்கு 3.5 % இட துக்கீடு
விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி தள்ளுபடி
அருந்ததியற்கு 3% இட ஒதுக்கீடு
குடிசை வீடுகள் ஒழிக்கப்பட்டு அனைத்து தரப்பினருக்கும் கான்கிரீட் வீடுகள்..திட்டத்தில் முதல் படி துவங்கியது.ஆறு ஆண்டுகளில் திட்டம் முடியும்.
எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தார்போல சட்டசபைக்கான புது கட்டிடம் கட்ட ஓமந்தூரார் தோட்டம் தேர்ந்தெடுக்கப் பட்டு..2008ல் நவம்பர் 12ஆம் நாள் வேலைகள் ஆரம்பமாயின..கலைஞர் விடாது சென்று பார்வையிட்டார்.
இந்தியாவின் மிகச் சிறந்த பசுமை நிறைந்த அரசு கட்டிடமாக 450 கோடி செலவில்..உருவாகிய புது சட்டசபை கட்டிடம்.கடந்த 13-3-10 அன்று பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது.இனி சட்டசபை கூட்டங்கள் இங்குதான் நடைபெறும்..
இந்த கட்டிடம்..வடிவமைக்கப்பட்டுள்ள விதம்..பிரம்மாண்டம் எல்லாம் பார்க்கையில்..இனி வரும் நாட்களில் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கூட தேர்ந்தெடுக்கப் படலாம்..
கலைஞர் பால் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் போற்றும் வகையில் உருவான இது கலைஞரின் மணிமகுடத்தில் ஒரு வைரக்கல் என்றால் மிகையில்லை.
தமிழகத்தில் இது வரை ஜனாதிபதி ஆட்சி இருந்த காலங்கள்
31-1-76 முதல் 30-6-77 வரை
17-2-80 முதல் 9-6-80 வரை
30-1-88 முதல் 27-1-89 வரை
30-1-91 முதல் 24-6-91 வரை
20 comments:
//இனி வரும் நாட்களில் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கூட தேர்ந்தெடுக்கப் படலாம்..//
கொஞ்சம் அதிகபடியா இருக்குற மாதிரி தோணுது...
கட்டிடம் இன்னும் முடியலைன்னு கேள்வி பட்டேன்..உண்மையா?
வருகைக்கு நன்றி செந்தில்
..முழுதும் கட்டிமுடிக்கப் படவில்லை..19 முதல் சட்டசபை நடக்கும்
இந்த கட்டிடம்..வடிவமைக்கப்பட்டுள்ள விதம்..பிரம்மாண்டம் எல்லாம் பார்க்கையில்..இனி வரும் நாட்களில் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கூட தேர்ந்தெடுக்கப் படலாம்..
...........அப்படியா? :-)
சார் எனக்கு முதல் பானிப்பட்டு போர் , இரண்டாம் பானிப்பட்டு போர் நடந்த வருஷங்களே கன்புஸ் ஆகும் , நீங்க எப்புடி................................ இப்புடி, உங்களுக்கு ஏதோ லாங் டெர்ம் மெமெரி கெயின் (லாசுக்கு ஆப்போசிட் ) ப்ராபளம் இருக்குன்னு நினைக்கிறேன் , நல்ல டாக்டரா பாருங்க.
இதுக்குள போனப்புறமாவது, அடிச்சிக்காம, வேட்டி உருவாம இருந்தா போதும். உலக அதிசயம் போனா போகுது:))
//89ல் கலைஞர் முதல்வர் ஆனார்..ஆனால் இரு ஆண்டுகளில் அவர் ஆட்சிகவிழ //
முதல்முறை மிசாவில் கலைக்கப்பட்டபோதும்சரி, இந்த மமுறையும் சரி, சரியாக ஜனவரி 31 தேதிதான் கலைக்கப்பட்டது.
//எம்.எம்.அப்துல்லா said...
முதல்முறை மிசாவில் கலைக்கப்பட்டபோதும்சரி, இந்த மமுறையும் சரி, சரியாக ஜனவரி 31 தேதிதான் கலைக்கப்பட்டது.//
ஆகா..வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி அப்துல்லா
//Chitra said...
இந்த கட்டிடம்..வடிவமைக்கப்பட்டுள்ள விதம்..பிரம்மாண்டம் எல்லாம் பார்க்கையில்..இனி வரும் நாட்களில் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கூட தேர்ந்தெடுக்கப் படலாம்..
...........அப்படியா? :-)//
அப்படியேதான்..மீனாட்சி கோவிலுக்கு ஆன்லைன்ல ஓட்டு போட்டாங்களே ..அதே போலதான் :-))
வருகைக்கு நன்றி Chitra
T.V.ராதாகிருஷ்ணன் said...
//மங்குனி அமைச்சர் said...
சார் எனக்கு முதல் பானிப்பட்டு போர் , இரண்டாம் பானிப்பட்டு போர் நடந்த வருஷங்களே கன்புஸ் ஆகும் , நீங்க எப்புடி................................ இப்புடி, உங்களுக்கு ஏதோ லாங் டெர்ம் மெமெரி கெயின் (லாசுக்கு ஆப்போசிட் ) ப்ராபளம் இருக்குன்னு நினைக்கிறேன் , நல்ல டாக்டரா பாருங்க.//
:-))))
T.V.ராதாகிருஷ்ணன் said...
//வானம்பாடிகள் said...
இதுக்குள போனப்புறமாவது, அடிச்சிக்காம, வேட்டி உருவாம இருந்தா போதும். உலக அதிசயம் போனா போகுது:))//
:-)))
பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி
வருகைக்கு நன்றி Uzhavan
அறிஞர் அண்ணா இறந்த நாள் 3-2-1969
//அரவிந்தன் said...
அறிஞர் அண்ணா இறந்த நாள் 3-2-1969//
நீங்கள் சொல்வது சரி..அண்ணா இயற்கை எய்தியது 3-2-69..நான் சொல்வது பின் கலைஞர் பதவி ஏற்றது 10-3-69
வருகைக்கு நன்றி அரவிந்தன்
அருமையான தொகுப்பு சார்.
வருகைக்கு நன்றி அக்பர்
அருமை சார்,,:)
--
உலக நெருக்கடி கட்டிட வாழ்வின் அதிசயம்னு வேணா சொல்லலாம்..:))
--
முதல்முறை மிசாவில் கலைக்கப்பட்டபோதும்சரி, இந்த மமுறையும் சரி, சரியாக ஜனவரி 31 தேதிதான் கலைக்கப்பட்டது//
சூரியனுக்கே டார்ச் அடிக்கிறார் பாருங்க..:)
வருகைக்கு நன்றி ஷங்கர்
வீடு கட்டி பால் காய்ச்சும் போது முழுவதும் முடிந்திருக்கக்கூடாது என்றும் சில வேலைகள் பாக்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறார்களே
அப்படியா
நீங்கள் உங்கள் வீட்டிற்கு பால் காய்ச்சும் போது முழுவதும் வேலைகள் முழுவதும் முடிந்திருந்தனவா அல்லது ஏதாவது பாக்கியிருந்தனவா
சில விஷயங்கள் ஏன்..எதற்கு என்று தெரியாமல்..நம் பெரியவர்கள் செய்தார்கள்..சொன்னார்கள் என நாமும் செய்து வருவது போலத்தான் இதுவும்..கட்டிடம் முற்று பெறுவதற்கு முன்னால்..கிரகப்பிரவேசம்..பால் காய்ச்சுதல் போன்றவை செய்து வருகிறோம்..அது மட்டுமல்ல..கிரகப்பிரவேசம் நடந்த அன்று அந்த வீட்டில் இரவு தங்க வேண்டுமாம்..
வீட்டில் உள்ள சிறு குறைகள்..தேவையான மாற்றங்கள் ஆகியவை அப்போது தெரியும்..குடி வருவதற்குள் மாற்றிக் கொள்ளலாம் என்பதால் இருக்கும் என்பதே என் கருத்து.
வருகைக்கு நன்றி டாக்டர்
Post a Comment