Saturday, March 27, 2010

பதிவர் சந்திப்பு ஏமாற்றமே தந்தது..

கடந்த சில நாட்களுக்கு முன் சில பதிவர்கள்..சங்கம்/குழுமம் ஆரம்பிப்பது பற்றி 27 ஆம் நாள் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த நல்ல செய்தி..என்னைப் போன்ற பல பதிவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கக் கூடும்..உலக அளவில் உள்ள அனைத்து பதிவர்களும்..இந்தக் கூட்டத்திற்குப் பின் எடுக்கப்படும் முடிவுகளுக்காகக் காத்திருந்தனர்..இதுக் குறித்து இடப்பட்ட இடுகைகளின் பின்னூட்டத்தைப் பார்த்தாலே தெரியும்...

ஆனால் அன்றைய சந்திப்பு ஏமாற்றத்தையேத் தந்தது.முக்கியமாக இது போன்ற கூட்டத்திற்கு..கண்டிப்பாக நிகழ்ச்சியை நடத்திச் செல்ல ஒரு அனுபவமுள்ள கோ-ஆர்டினேட்டர் தேவை..அது இல்லாததால்..நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதே புரியாமல் இருந்தது.

மேலும்..வருகை புரிந்தவர்களின் பெயர் முகவரி வாங்கப்பட்டது...இதை வாங்கியவர்கள்..கூட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பதிவு செய்யவில்லை.இது போன்றக் கூட்டங்களில் மினிட்ஸ் எழுதப்பட வேண்டும்..

நேற்றையக் கூட்டத்தை பொறுத்தவரை..அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால்..கிட்டத்தட்ட 70 அங்கத்தினர் வந்திருந்த நிலையில்..சங்கம் ஆரம்பிக்க இருவரே எதிர்ப்பு தெரிவித்திருந்ததையும் பதிவு செய்துவிட்டு..இன்று சங்கம்...இந்த பெயர் வேண்டாமெனில்..இணைய பதிவாளர் பேரவை அமைக்க முடிவு செய்யப் பட்டது என்றும் பதித்திருக்கலாம்.

இப்போதாவது..கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள்..நடந்ததை பதிவு புத்தகத்தில் எழுதவும்..அடுத்தக் கூட்டத்தில் இது படித்துக் காட்டப் பட வேண்டும்..

இப்போது நடக்க வேண்டிய விஷயத்திற்கு வருவோம்..

ஒரு adhoc கமிட்டி அமைக்கட்டும்..கேபிள் பதிவில் குறிப்பிட்டிருந்தவர்களைத் தவிர.. மேலும் ஓரிருவர்..மொத்தம் 10க்கு அதிகமில்லாமல் கூடட்டும்..என்னுடைய சாய்ஸ் சிவராமன் மற்றும் வானம்பாடிகள் அந்தக் குழுவில் இருக்கட்டும்.

சங்கத்திற்கான விதிமுறைகள்..நோக்கம் ஆகியவற்றை அவர்கள் ஆலோசித்து..அவற்றை எழுத்தில் வடித்து சங்கத்தை பதிவு(register) செய்யலாம்..இதற்குக் குறைந்தது 7நபர்கள் வேண்டும்..(அதனால்தான் அட்ஹாக் கமிட்டி அமைக்கவேண்டியது அவசியம் ஆகிறது)

இதற்குப் பின் கூடி..நாம் நிரந்தரமாக நடத்திச் செல்பவர்களைத் தீர்மானிக்கலாம்..அவர்கள் சுழற்சி முறையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படலாம்..

என் பதிவுகளில் அடிக்கடி சொல்வதை மீண்டும் சொல்கிறேன்..இணையப் பதிவர்கள் கருத்துகள்..வளர்ச்சி பிரம்மாண்டமாய் இருந்து வருகிறது..இதை உபயோகமான வழிகளில் செலவிடுவோம்.

60 comments:

Cable சங்கர் said...

சார்.. தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் ஆரம்பிப்பது உறுதியாகிவிட்டது.. விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம்..:)

மணிஜி said...

எதற்கு. ஏன் என்ற கேள்விகளே நிறைய இருந்தது ! நல்ல விஷயம்தான். உரையாடல் அமைப்பினருக்கு இதில் உடன்பாடில்லை போலும். அவர்கள் தற்கொலை படையாகவே இயங்க விரும்புகின்றனர்.தற்கொலையே தவறு. அதை ஊக்குவித்தல் இன்னும் தவறு என்பதால், உரையாடல் அமைப்பின் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். குழுமம் பற்றிய அறிவிப்பு இரண்டொரு நாளில் வெளிவரும். விருப்பமுள்ளவர்கள் சேரலாம் . வெளியிலிருந்தும் ஆதரவு கொடுக்கலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Cable Sankar said...
சார்.. தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் ஆரம்பிப்பது உறுதியாகிவிட்டது.. விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம்..:)//


சிறிது முயன்றிருந்தால் அநாவசிய சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்

Unknown said...

இந்த சந்திப்பு பற்றிய புரிதல் நிறைய பேருக்கு இல்லை, நோக்கமே முதலில் ஆரம்பிப்போம் பிறகு படிப்படியாக அதனை கொண்டு போகலாம் என்பதுதான்,
நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் குழுமமாக நாம் வருவோம்,
கூட்டத்தில் உங்களின் கருத்தும், ஞாநியின் கருத்தும் தெளிவாக இருந்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிஜீ...... said...
எதற்கு. ஏன் என்ற கேள்விகளே நிறைய இருந்தது ! நல்ல விஷயம்தான். உரையாடல் அமைப்பினருக்கு இதில் உடன்பாடில்லை போலும். அவர்கள் தற்கொலை படையாகவே இயங்க விரும்புகின்றனர்.தற்கொலையே தவறு. அதை ஊக்குவித்தல் இன்னும் தவறு என்பதால், உரையாடல் அமைப்பின் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். குழுமம் பற்றிய அறிவிப்பு இரண்டொரு நாளில் வெளிவரும். விருப்பமுள்ளவர்கள் சேரலாம் . வெளியிலிருந்தும் ஆதரவு கொடுக்கலாம்.////


மணிஜி..அவசர முடிவு ஏதும் வேண்டாம்..கடைசியில் சிவராமன் தான் அதற்கு எதிப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்..கூடியவரை ஊர் கூடித் தேர் இழுப்போம்

பிரபாகர் said...

அய்யா,

பல்வேறு கருத்து உடையவர்கள் சங்கமத்தை முறையாக முனைத்தினால் மட்டுமே நல்ல்படியாய் முடியும். உங்களின் ஆலோசனைகள் அதற்கு ஏதுவாய் அமையும்...

பிரபாகர்...

Anonymous said...

அருமையான யோசனைகள்!உங்கள் யோசனைகள் குறைவின்றி நிறைவேறினால் பதிவர்களுக்கு சிறந்த திருப்புமுனையாய் விளங்கும்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
இந்த சந்திப்பு பற்றிய புரிதல் நிறைய பேருக்கு இல்லை, நோக்கமே முதலில் ஆரம்பிப்போம் பிறகு படிப்படியாக அதனை கொண்டு போகலாம் என்பதுதான்,
நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் குழுமமாக நாம் வருவோம்,
கூட்டத்தில் உங்களின் கருத்தும், ஞாநியின் கருத்தும் தெளிவாக இருந்தது//

நன்றி செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///பிரபாகர் said...
அய்யா,

பல்வேறு கருத்து உடையவர்கள் சங்கமத்தை முறையாக முனைத்தினால் மட்டுமே நல்ல்படியாய் முடியும். உங்களின் ஆலோசனைகள் அதற்கு ஏதுவாய் அமையும்...

பிரபாகர்...///

நன்றி பிரபா.

மதுரை சரவணன் said...

கருத்துக்களை நான் ஏற்கிறேன்.வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான யோசனைகள்!உங்கள் யோசனைகள் குறைவின்றி நிறைவேறினால் பதிவர்களுக்கு சிறந்த திருப்புமுனையாய் விளங்கும்//


நன்றி சதீஷ்

ttpian said...

pl.invite me!
pathiplans@sify.com

சிநேகிதன் அக்பர் said...

இது பற்றிய விபரங்கள் எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் சொல்வது சரியாகவே படுகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sukumar Swaminathan said...
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...
பதிவர் சந்திப்பு புகை படங்களுக்கு
http://valaimanai.blogspot.com/2010/03/blog-post_28.html//

பார்த்தேன்..அனைத்து படங்களும் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Madurai Saravanan said...
கருத்துக்களை நான் ஏற்கிறேன்.வாழ்த்துக்கள்.//

நன்றி Madurai Saravanan

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அமைப்பாளர்கள் சற்று ஊக்கமுடன் செயல்பட்டிருந்தால் நேற்றே தீர்வு கண்டு இருக்கலாம் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ttpian said...
pl.invite me!
pathiplans@sify.com//

என்ன சொல்ல வருகிறீர்கள் எனத் தெரியவில்லை..

பதிவர்கள் சந்திப்பிற்கான அழைப்பு என்றால்..தனியே அழைப்பிதழ் இல்லை..பதிவைப்பார்த்து நேரில் வரலாம்..

butterfly Surya said...

ஊர் கூடித் தேர் இழுப்போம். வழி மொழிகிறேன்.

நல்லதே நடக்கும்.

sathishsangkavi.blogspot.com said...

//இணையப் பதிவர்கள் கருத்துகள்..வளர்ச்சி பிரம்மாண்டமாய் இருந்து வருகிறது..இதை உபயோகமான வழிகளில் செலவிடுவோம்.//

ஐயா,

உண்மைதான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்....

Starjan (ஸ்டார்ஜன்) said...

//அக்பர் said...

இது பற்றிய விபரங்கள் எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் சொல்வது சரியாகவே படுகிறது.///

அக்பர் சொல்வதை வழிமொழிகிறேன். இது பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்றிருக்கிறேன். உங்கள் கருத்தை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

Unknown said...

உங்களை சந்தித்ததில்(பார்த்ததில்?) மகிழ்ச்சி.உங்களுடைய பாசீட்டீவ் ஆர்வம் பதிவில் தெரிகிறது.

நல்லது நடக்கும்.

உங்கள் வலது பக்கத்தில் (வேஷ்டி/மூக்கு கண்ணாடி)
உடகார்ந்திருக்கும் பதிவர் யார்?

Paleo God said...

சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி சார்..:))

துபாய் ராஜா said...

எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதால்தான் இந்த ஏமாற்றம் ஐயா... எல்லாம் நலமாய் நடக்கும் என நம்புவோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
இது பற்றிய விபரங்கள் எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் சொல்வது சரியாகவே படுகிறது.//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
அமைப்பாளர்கள் சற்று ஊக்கமுடன் செயல்பட்டிருந்தால் நேற்றே தீர்வு கண்டு இருக்கலாம் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்//

உண்மை...எந்த ஒரு நல்ல காரியமும்..சற்று சலசலப்புடன் தான் ஆரம்பமாகும்..கடைசியில் நல்லது நடக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//butterfly Surya said...
ஊர் கூடித் தேர் இழுப்போம். வழி மொழிகிறேன்.

நல்லதே நடக்கும்.//


நன்றி Surya

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

தங்களையும் நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

ஒருங்கிணைப்பாளர் இல்லாத குறையை நானும் உணர்ந்தேன். மேலும் , ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கையில் நாம் கும்பல் கும்பலாக பேசிக்கொண்டிருப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதாகப்படுகிறது. கேபிள்/பரிசல் புத்தக வெளியீட்டு விழாவின் போதும் இது நிகழ்ந்தது.

உங்கள் ஆலோசனைகள் செயலாக்கம் பெற்று "குழுமம்" உயிர் பெறும் என்ற நம்பிக்கையுடன்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
உண்மைதான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்....//

நன்றி Sangkavi

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அக்பர் சொல்வதை வழிமொழிகிறேன். இது பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்றிருக்கிறேன். உங்கள் கருத்தை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.//

தாராளமாக எழுதுங்கள்..கருத்துகளை சொல்வதில் தப்பேயில்லை..அதேசமயம்...பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் என இல்லாது சிறந்த மற்றவர் கருத்தையு ம் மதிப்போம்.நன்றி ஸ்டார்ஜன்..வலைச்சரம் ஆசிரியர் பணி சிறப்பாய் முடித்தமக்கு பாராட்டுகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ரவிஷங்கர் said...
உங்களை சந்தித்ததில்(பார்த்ததில்?) மகிழ்ச்சி.உங்களுடைய பாசீட்டீவ் ஆர்வம் பதிவில் தெரிகிறது.

நல்லது நடக்கும்.

உங்கள் வலது பக்கத்தில் (வேஷ்டி/மூக்கு கண்ணாடி)
உடகார்ந்திருக்கும் பதிவர் யார்?//

தங்களை சந்திக்க வேண்டும்..நிறைய பேச வேண்டும் என்றெல்லாம் எண்ணம்..ஆனால் முதல் சந்திப்பு பார்த்த அளவில் நின்றுவிட்டது.விரைவில் மீண்டும் சந்திப்போம்.
எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் வானம்பாடிகள்.(பாலா)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி சார்..:))//

நன்றி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//துபாய் ராஜா said...
எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதால்தான் இந்த ஏமாற்றம் ஐயா... எல்லாம் நலமாய் நடக்கும் என நம்புவோம்.//

தங்கள் வருகைக்கும்..அன்பு கருத்திற்கும் நன்றி துபாய் ராஜா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்.. கருத்திற்கும் நன்றி ஜெ.ஜெயமார்த்தாண்டன்

அக்னி பார்வை said...

uriya nerathithil pathivittamaikku nanri

அக்னி பார்வை said...

do not relese the comment, email me your phone n umber sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்னி பார்வை

பழமைபேசி said...

தகவலுக்கு நன்றிங்க ஐயா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பழமைபேசி said...
தகவலுக்கு நன்றிங்க ஐயா!//

நன்றி பழமைபேசி

goma said...

இன்னின்ன தேதியில் கூட்டம் நடைபெறும் அனைவரும் வருக என்று அழைப்பு அனுப்பி கூடுகிறோம்.
கூட்டத்தின் நோக்கம்,ஆற்ற வேண்டிய கடமைகள்,அங்கத்தினரில் ,வழி நடத்துனர் ,அவருக்கு ஒரு உதவியாளர் ,எல்லாம் கன கச்சிதமாக தேர்ந்தெடுக்கப்பட்டு செய்யப்படவேண்டுமென்றால் ,முதல் கூட்டத்திலேயே அது வெற்றிகரமாக முடிக்க இயலாது.
பதிவாளர்கள் அனைவரும் பலமுறை கூடி ,முடிவெடுத்தபின் சங்கம் தொடங்கப்படும் விழா ,அரங்கேற வேண்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தங்கள் வருகைக்கு நன்றி goma

ILA (a) இளா said...

சங்கம் வெச்சு? நல்லதுதான். பிரச்சினை அங்கே இல்லே. உறுப்பினர் தலைவர்னு தேர்ந்தெடுக்க வேண்டி வரும். அப்போ நாம ரெண்டாவோ நாலாவோ பிரிவோம். இதுதான் தமிழனுக்குத் தேவை. பாலபாரதி செய்யாததா? அட போங்க.. சும்மாவா சொல்லொ வெச்சாங்க “ ”ரெண்டு தமிழன் சேர்ந்தா ஒரு கட்சி. மூணு பேர் சேர்ந்தா ரெண்டு கட்சி”

மங்குனி அமைச்சர் said...

எப்படியோ ஒரு நல்ல முடிவு கிடச்சா சரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

///
ILA(@)இளா said...
சங்கம் வெச்சு? நல்லதுதான். பிரச்சினை அங்கே இல்லே. உறுப்பினர் தலைவர்னு தேர்ந்தெடுக்க வேண்டி வரும். அப்போ நாம ரெண்டாவோ நாலாவோ பிரிவோம். இதுதான் தமிழனுக்குத் தேவை. பாலபாரதி செய்யாததா? அட போங்க.. சும்மாவா சொல்லொ வெச்சாங்க “ ”ரெண்டு தமிழன் சேர்ந்தா ஒரு கட்சி. மூணு பேர் சேர்ந்தா ரெண்டு கட்சி”//

எந்த ஒரு காரியமும்..நல்லபடியாகவே நடக்கும் என்றுதான் ஆரம்பிக்கப்படுகிறது..அதற்குப் பிறகு......அது நம் கையில் இல்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
எப்படியோ ஒரு நல்ல முடிவு கிடச்சா சரி//

நல்லதே நடக்கும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

டிவிஆர் சார் உங்களுக்கு, அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுக் கொள்ளுங்கள்.

creativemani said...

சார். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது கருத்தைப் பதிந்து இருக்கிறேன்.. படித்துவிட்டு கமெண்ட் செய்யவும்..
http://anbudan-mani.blogspot.com/2010/03/blog-post.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
டிவிஆர் சார் உங்களுக்கு, அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுக் கொள்ளுங்கள்.///


நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அன்புடன்-மணிகண்டன் said...
சார். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது கருத்தைப் பதிந்து இருக்கிறேன்.. படித்துவிட்டு கமெண்ட் செய்யவும்..
http://anbudan-mani.blogspot.com/2010/03/blog-post.html//

அன்பு மணி
இது விஷயமாக நிறைய பேச வேண்டும்..பலருக்கு தகுந்த பதில் சொல்ல வேண்டும் என மனம் விழைந்தாலும்...சூடு சற்று ஆற மௌனியாய் இருக்க வேண்டியுள்ளது.

மரா said...

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தங்களுடைய கருத்துக்கள் மிகச்சரியானவை. மூத்தவர் என்ற முறையில் உங்களின் பங்கு மிக முக்கியம்(like drafting the union's mission,ideas,goal...etc..etc) செய்வீர்கள் என நம்புகிறோம்.நன்றி

கல்வெட்டு said...

//.உலக அளவில் உள்ள அனைத்து பதிவர்களும்..இந்தக் கூட்டத்திற்குப் பின் எடுக்கப்படும் முடிவுகளுக்காகக் காத்திருந்தனர்..//

?????????
கிணற்றுத் தவளைகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மயில்ராவணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கல்வெட்டு said...
?????????
கிணற்றுத் தவளைகள்///

சென்னைப் பதிவாளர் குழுமமா..? அல்லது பொதுவாக அனைத்துப் பேருக்குமான தமிழ் இணைய பதிவாளர் குழுமமா? என்பதையே அப்படி கூறியிருந்தேன்..இங்கு யாரும் கிணற்றுத்தவளைகள் அல்ல

பீர் | Peer said...

நானும் ஏமாற்றத்துடனே வெளியேறினேன். :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

பீர்..நீங்க வந்திருந்தீர்களா? நான் பார்க்கவே இல்லையே!
ஆமாம்..அம்மா எப்படி இருக்காங்க?

Vidhoosh said...

உங்களைச் சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி சார். முடிந்த போது தொலைபேசுங்கள். :)

Radhakrishnan said...

//சங்கத்திற்கான விதிமுறைகள்..நோக்கம் ஆகியவற்றை அவர்கள் ஆலோசித்து..அவற்றை எழுத்தில் வடித்து சங்கத்தை பதிவு(register) செய்யலாம்..இதற்குக் குறைந்தது 7நபர்கள் வேண்டும்..//

நோக்கமே இல்லாமல் ஒரு அமைப்பினை எப்படி ஆரம்பிக்க நினைத்தீர்கள் ஐயா? இருப்பினும் இன்னும் பேச நிறைய இருக்கிறது, நல்லதொரு ஆலோசனைகள்

"உழவன்" "Uzhavan" said...

//இதை உபயோகமான வழிகளில் செலவிடுவோம்//
 
நல்லது ஐயா.. வழிமொழிகிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Vidhoosh

T.V.ராதாகிருஷ்ணன் said...

//V.Radhakrishnan said
நோக்கமே இல்லாமல் ஒரு அமைப்பினை எப்படி ஆரம்பிக்க நினைத்தீர்கள் ஐயா? இருப்பினும் இன்னும் பேச நிறைய இருக்கிறது, நல்லதொரு ஆலோசனைகள்//


ஐயோ..ராதாகிருஷ்ணன்..இங்கே நடந்த விஷயங்கள் பாவம் உங்களுக்குத் தெரியாது..அதனால்தான் இப்படி பின்னூட்டம் போட்டிருக்கீங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உழவன்" "Uzhavan" said...
//இதை உபயோகமான வழிகளில் செலவிடுவோம்//

நல்லது ஐயா.. வழிமொழிகிறேன்.//

நன்றி Uhavan