Friday, March 5, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(5-3-10)

1)இதுவரை சச்சின் ஐந்து உலகக் கோப்பை விளையாட்டுகளில் விளையாடியுள்ளார்.இதில் இந்தியாவிலும்..தென்னாப்ரிக்காவிலும் நடை பெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்து 'மேன் ஆஃப் தி சீரிஸ்' விருது பெற்றிருக்கிறார்.
இவருக்கும்..தமிழக முதல்வருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு..அது என்ன..தெரியாதவர்களுக்கு இடுகையின் முடிவில் பதில்.

2)முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உரிமைகள் தமிழகத்தின் வசம் உள்ளது.ஆனால்..அதை பராமரிக்கவும்..தேவைப் பட்டால் உடைத்து செயல் இழக்கச் செய்யவும்..கேரள அரசுக்கு உரிமை உண்டு என கேரள அரசு இயற்றிய சட்டம் சொல்கிறது.சட்டம் செல்லாது என நாம் கோர்ட்டுக்கு சென்றால்..மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து ஐவர் குழு அமைக்க அறிவுறுத்துகிறது உச்ச நீதி மன்றம்.முன்னர் கர்நாடகா..காவிரி பிரச்னையில் நிதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை..இப்போது கேரளா..இவ்விஷயத்தில் ஐவர் குழுவிற்கு தமிழகம் பிரதிநிதி அமைக்கப் படமாட்டார் என கலைஞர் கூறியது முற்றிலும் சரி என்றே தோன்றுகிறது. சத்யமேவ ஜெயதே

3)சரித்திரம் என்பதற்கு வரலாறு என்று சொல்கிறோம்..வரலாறு என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? வரல்..ஆறு..வந்த வழி...என்பதே வரலாறு ஆயிற்று

4)சிலரை நாம் புரிந்துக் கொள்ளாததால் வெறுக்கிறோம்..சிலரை நாம் வெறுப்பதால்..அவர்களை புரிந்துக் கொள்ள முயல்வதில்லை

5)ஒரு குழந்தை பிறக்கையில் அதற்கு 350 எலும்புகள் உள்ளன.வயதான பிறகு 206 எலும்புகள் ஆகின்றன.குறிப்பாக மணிக்கட்டு,கால்,கை பகுதிகளில் உள்ள எலும்புகள் போகப் போக இணைந்துவிடுகின்றன.

6)கொசுறு ஒரு ஜோக்..

நான் இன்னிக்கு ஆஃபீஸ்ல தூங்கி எழுந்தப்போ மேலதிகாரி பார்த்துட்டார்
அப்புறம் என்ன ஆச்சு
டியூட்டி ஓவராயிடுச்சான்னு கேட்டார்


ஆரம்பக் கேள்விக்கான பதில்
சச்சின் ஐந்து உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடியுள்ளார்..கலைஞர் இதுவரை ஐந்து முறை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

36 comments:

ராம்ஜி_யாஹூ said...

we all busy with nithyanadha news, sun tv ethics

Unknown said...

ந‌ன்றி ... நான் கூட‌ இருவ‌ருக்கும் தான் அதிக‌ பார‌ட்டு விழாக்க‌ளோன்னு நினைச்சுட்டேன் .. ஹி ஹி

சங்கர் said...

//சச்சின் ஐந்து உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடியுள்ளார்..கலைஞர் இதுவரை ஐந்து முறை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.//

சச்சினை இப்படி அவமானப் படுத்துவீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை

vasu balaji said...

இந்த விருது எனக்கு தரலையேன்னு தலைவர் குடையப் போகிறார்:))

தமிழ் அமுதன் said...

///இந்த விருது எனக்கு தரலையேன்னு தலைவர் குடையப் போகிறார்:))///


;;))))))

பிரபாகர் said...

வரலாறு - அருமை.

சரிதான் அய்யா... சச்சினும் உலகக்கோப்பை வாங்கித்தந்ததில்லை, தலைவரும்...

பிரபாகர்.

க.பாலாசி said...

வரலாறு தெரிந்துகொண்டேன்....

வால்பையன் said...

சச்சின் மேன் ஆஃப் த மேட்ச் வாங்கியது போல் முதல்வர் எத்தனை பாராட்டு பத்திரம் வாங்கியிருக்கார்னு எழுதியிருக்கலாம்!

:)

Paleo God said...

நாலாவது அருமை சார்..:))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சிலரை நாம் புரிந்துக் கொள்ளாததால் வெறுக்கிறோம்..சிலரை நாம் வெறுப்பதால்..அவர்களை புரிந்துக் கொள்ள முயல்வதில்லை
//


உலகம்..., உலகம்..,

Unknown said...

"இதில் இந்தியாவிலும்..தென்னாப்ரிக்காவிலும் நடை பெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்து 'மேன் ஆஃப் தி சீரிஸ்' விருது பெற்றிருக்கிறார்"
--
Sachin received one man of the series award in the World Cups.
http://en.wikipedia.org/wiki/Cricket_World_Cup

Raghu said...

//தமிழகம் பிரதிநிதி அமைக்கப் படமாட்டார் என கலைஞர் கூறியது முற்றிலும் சரி என்றே தோன்றுகிறது//

என‌க்கும் அதேதான் தோன்றுகிற‌து, எல்லாவ‌ற்றுக்கும் த‌லையாட்டிக்கொண்டே இருந்தால், "ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்ன்ன்" இமேஜை த‌விர‌ வேறொன்றுமே கிடைப்ப‌தில்லை

Chitra said...

3)சரித்திரம் என்பதற்கு வரலாறு என்று சொல்கிறோம்..வரலாறு என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? வரல்..ஆறு..வந்த வழி...என்பதே வரலாறு ஆயிற்று

4)சிலரை நாம் புரிந்துக் கொள்ளாததால் வெறுக்கிறோம்..சிலரை நாம் வெறுப்பதால்..அவர்களை புரிந்துக் கொள்ள முயல்வதில்லை


..........நல்ல தகவல்கள். அருமை.

இராகவன் நைஜிரியா said...

// 4)சிலரை நாம் புரிந்துக் கொள்ளாததால் வெறுக்கிறோம்..சிலரை நாம் வெறுப்பதால்..அவர்களை புரிந்துக் கொள்ள முயல்வதில்லை //

நன்று.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராம்ஜி_யாஹூ said...
we all busy with nithyanadha news, sun tv ethics//

வருகைக்கு நன்றி ராம்ஜி_யாஹூ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ச‌ங்க‌ர‌ராம் said...
ந‌ன்றி ... நான் கூட‌ இருவ‌ருக்கும் தான் அதிக‌ பார‌ட்டு விழாக்க‌ளோன்னு நினைச்சுட்டேன் .. ஹி ஹி//

வருகைக்கு நன்றி ச‌ங்க‌ர‌ராம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சங்கர் said...
சச்சினை இப்படி அவமானப் படுத்துவீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
இந்த விருது எனக்கு தரலையேன்னு தலைவர் குடையப் போகிறார்:))//

இந்தப் பின்னூட்டம் ஜகத்ரட்சகனுக்கு அனுப்பப்படுகிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
தலைவரும்...//


தலைவரும்... ????!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
///இந்த விருது எனக்கு தரலையேன்னு தலைவர் குடையப் போகிறார்:))///


;;))))))//


வருகைக்கு நன்றி ஜீவன்(தமிழ் அமுதன் )

cheena (சீனா) said...

அன்பின் டீவிஆர்

அருமையான அவியல் - சச்சினுக்கு உலகக் கோப்பையைக் கைப்பற்ற நல்வாழ்த்துகள்.

வரலாறு - புரிதலுணர்வு - எலும்பின் இணைப்பு - தகவல்களுக்கு நன்றி

மாதேவி said...

நல்ல தகவல்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
வரலாறு தெரிந்துகொண்டேன்....//

வருகைக்கு நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வால்பையன் said...
சச்சின் மேன் ஆஃப் த மேட்ச் வாங்கியது போல் முதல்வர் எத்தனை பாராட்டு பத்திரம் வாங்கியிருக்கார்னு எழுதியிருக்கலாம்!

:)//

வருகைக்கு நன்றி அருண்..ஆனால் நீங்கள் கேட்டிருக்கும் எண்ணிக்கை அவரே அறிவாரா என்று தெரியவில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நாலாவது அருமை சார்..:))//

ந‌ன்றி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//சிலரை நாம் புரிந்துக் கொள்ளாததால் வெறுக்கிறோம்..சிலரை நாம் வெறுப்பதால்..அவர்களை புரிந்துக் கொள்ள முயல்வதில்லை
//


உலகம்..., உலகம்..,//

எம்.ஜி.ஆர்., படப் பாடலை ஞாபகப் படுத்தி விட்டீர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//shyam said...
Sachin received one man of the series award in the World Cups.
http://en.wikipedia.org/wiki/Cricket_World_Cup//

தகவலுக்கு நன்றி ஷ்யாம்..நான் விகடன் தந்த தகவலையே சொல்லியுள்ளேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ர‌கு said...
என‌க்கும் அதேதான் தோன்றுகிற‌து, எல்லாவ‌ற்றுக்கும் த‌லையாட்டிக்கொண்டே இருந்தால், "ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்ன்ன்" இமேஜை த‌விர‌ வேறொன்றுமே கிடைப்ப‌தில்லை//

வருகைக்கு நன்றி ர‌கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said..........நல்ல தகவல்கள். அருமை.//

ந‌ன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//cheena (சீனா) said...
அன்பின் டீவிஆர்

அருமையான அவியல் - சச்சினுக்கு உலகக் கோப்பையைக் கைப்பற்ற நல்வாழ்த்துகள்.

வரலாறு - புரிதலுணர்வு - எலும்பின் இணைப்பு - தகவல்களுக்கு நன்றி//

வருகைக்கு நன்றி Cheena sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
நல்ல தகவல்கள்.//


ந‌ன்றி மாதேவி

Ashok D said...

4th one :)

சிநேகிதன் அக்பர் said...

டேஸ்ட் நல்ல இருந்தது சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி D.R.Ashok

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
டேஸ்ட் நல்ல இருந்தது சார்.//

ந‌ன்றி அக்பர்