எல்லா மொழிகளிலும்..சில வார்த்தைகள் இடம் வலம் படித்தாலும்..வலம் இடம் படித்தாலும் அதையேச் சொல்லும்..
உதாரணத்திற்கு தமிழில் சில உறவுகள்..தாத்தா, மாமா, பாப்பா போன்றவற்றை சொல்லலாம்.
ஆங்கிலத்தில் malayalam, idappadi போன்றவற்றை சொல்லலாம்.
சுஜாதா அவர்கள் தனது கற்றதும் பெற்றதும் தொகுப்பில் இது பற்றி கூறுகிறார்.
Redivider இந்த வார்த்தையை இடம் வலமாகவும்..வலம் இடமாகவும் ஒரே மாதிரி படிக்க முடியும்.இவற்ரை 'பாலிண்ட்ரோம்' (Palindrome) என்பார்கள்.
வாக்கியத்திற்கு 'Murder for a jar of red rum' என்பது எளிய உதாரணம்.
ஆங்கிலத்தில் பாலிண்ட்ரோம்களை போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள்.உலகின் மிக நீளமான பாலிண்ட்ரோம் 19000 எழுத்துகளுக்கு மேற்பட்டதாம்.
தமிழில்
மோரு போருமோ
விகடகவி
தேருவருதே
போன்ற சிறு உதாரணங்கள் மட்டுமே இருப்பதாக எண்ண வேண்டாம். 'மாலைமாற்று' என்கிற பாவகையே உள்ளது.இதில் தேர்ந்தவர் திருஞான சம்பந்தர்.'மாலை மாற்றாக' பதினோரு குறளைச் செய்யுள்களாக பாடியுள்ளார்.
யாமாமா நீயாமா மாயாழீ காமா
காணாகா காணா காமா காழீயா
மாமாயா நீ மாமாயா
அற்ப மனிதர்களால் ஒன்றும் பண்ண முடியாது.மகாசக்தி வாய்ந்த இறைவா உன்னால் தான் முடியும் என்பதே இதன் பொருளாகும்.
15 comments:
நல்ல பாடல், இப்படிப்பட்ட சம்பந்தரின் பாடலை இப்போதுதான் கேள்விப் படுகின்றேன். மிக்க நன்றி.
அழகு தமிழ்! நன்றி சார்:)
ஆங்கிலத்தில் பாலிண்ட்ரோம்களை போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள்.உலகின் மிக நீளமான பாலிண்ட்ரோம் 19000 எழுத்துகளுக்கு மேற்பட்டதாம்.
.......... :-)
அறிய படாத பாடலை அறிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி
இந்த போஸ்ட் கலக்கல் என்றால் போன போஸ்ட் கலகலக்கல் ஸார்.
//பித்தனின் வாக்கு said...
நல்ல பாடல், இப்படிப்பட்ட சம்பந்தரின் பாடலை இப்போதுதான் கேள்விப் படுகின்றேன். மிக்க நன்றி.//
வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு
//வானம்பாடிகள் said...
அழகு தமிழ்! நன்றி சார்:)//
நன்றி வானம்பாடிகள்
வருகைக்கு நன்றி Chitra
//தமிழ் உதயம் said...
அறிய படாத பாடலை அறிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி//
நன்றி தமிழ் உதயம்
//நர்சிம் said...
இந்த போஸ்ட் கலக்கல் என்றால் போன போஸ்ட் கலகலக்கல் ஸார்.//
நன்றி நர்சிம்
கம்ப்யூட்டர் லேபில் கொடுக்கப்பட்ட வார்த்தை பாலின்ட்ரோமா இல்லையான்னு செக் பண்ண புரோக்ராம் எழுதியது ஞாபகத்துக்கு வந்தது.
வருகைக்கு நன்றி அக்பர்
முன்பே கேள்விப்பட்டதுதான் என்றாலும் திரும்பப் படிக்கும் போது அருமை டி வி ஆர்
நன்றி thenammailakshmanan
:)
Post a Comment