சென்னை சின்மயாநகரில் உள்ள நிறுவனம் அது..மொத்தம் 600 ஊழியர்கள்..வேலை செய்கின்றனர்..அவர்களது விற்பனை பிரதிநிதிகளாக 250 ஊழியர்கள்....அவ்வளவு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுத்து..நிர்வாக செலவுகளையும் கவனித்துக் கொண்டு கோடிக் கணக்கில் லாபம் ஈட்டுகிறது..அந்த நிறுவனம்..
ஒரு சிடிஎஸ் ஸோ.டி.சி.எஸ் சோ இல்லை..அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர் மீனாட்சி சுந்தரம் என்பவர்..நிறுவனத்தின் பெயர் 'மீனா ஹெல்த் கேர்'..இந்த நிறுவனம் விற்கும் பொருள்..போலியான..காலாவதி ஆன உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்வதுதான்.
இப்படிப்பட்ட நிறுவனம்..எப்படி காவல்துறை கண்களிலோ..சுகாதார..மருத்துவத் துறை கண்களிலோ படாமல் இருந்தது..அதன் நதிமூலம் என்ன..யாமறியோம் பராபரமே
காலாவதியாகும் மருந்து கசிவுகளை எரிக்கும் இடம்..சென்னை கொடுங்கையூரில் உள்ளது.அந்த காலாவதி கழிவுகளை வழியிலேயே மடக்கி..மருந்து..மாத்திரை..ஊசி மருந்து ஆகியவற்றை இந்த மோசடி கும்பல் வாங்குமாம்.மேலும் குப்பை பொறுக்குபவர்கள் அவற்றை பொறுக்கி எடுத்து வந்தால் அவர்களிடம் கிலோ 150 ரூபாய்க்கு வாங்குமாம் இந்த மோசடி கும்பல்...
அந்த மருந்துகளுக்கு வேறு wrapper வேறு Expiry date போட்டு மீண்டும் விற்பனைக்கு விடுமாம்.
இதில் பலர் கைது செய்யப்பட்டாலும்..நேரடி தொடர்புள்ள ஐவர் இன்னும் தலைமறைவாய் உள்ளனர். மீனாட்சி சுந்தரம்,பிரதீப் சோர்டியா,சஞ்செய் குமார்,வெங்கடேசன் ஆகியோரை ..வழக்கம் போல காவல்துறை வலை வீசி தேடி வருகின்றனராம்..(அவர்கள் சரணடைந்து இவர்களது வேலையை எளிதாக்கட்டும்.)
இந்நிலையில் , நேற்று 6 கிடங்குகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்துகளை காவல் துறை நேற்று கைப் பற்றியுள்ளது.இந்த மருந்துகளில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கான மருந்துகளாம்..அடப் பாவிகளா...
பொதுமக்கள்.. இது போன்ற இடங்கள் என சந்தேகப்படும்படியான இடங்கள் தெரிந்தால் உடன் 24335068 தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக் கொண்டு..தெரிவிக்கலாம் என மருத்துவக் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
நாமும்..மருந்து வாங்குகையில் காலாவதி தேதி, அந்த மருந்து சரியானதுதானா என்றெல்லாம் சரி பார்ப்பதுடன்..கண்டிப்பாக அதற்கான ரசீதை கேட்டுப் பெற வேண்டும்.
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள துரோகிகள்..அரக்கர்கள்..நாளை சரணடைந்தாலும்..விசாரணை முடிந்து..வழக்கு பதிவு செய்யப்பட்டு..வருடக் கணக்கில் வழக்கு நடை பெறும்..சம்பந்தப் பட்டவர்கள் பண பலத்தால்..ஜாமீனில் வந்து உல்லாசமாக இருப்பார்கள்.வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும்..கீழ் கோர்ட்.மேல் கோர்ட்,உயர் நீதி மன்றம், உயர் நீதி மன்ற பெஞ்ச்,உச்ச நீதி மன்றம்,உச்ச நீதி மன்ற பெஞ்ச் என விசாரணை தொடரும். அதற்குள் அவர்கள் உலகச் சிறையிலிருந்து கூட வெளியேறிவிடுவார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்..இவர்கள் செய்த தவறுக்கு தண்டனை அளிக்க வேண்டுமானால்..இவர்களின் ஜாமீன் மனு அனைத்துக் கோர்ட்டிலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.அவர்களை சிறையிலிருந்து வெளியே அனுப்பக் கூடாது..
நடக்குமா...
23 comments:
பிடித்து தூக்கில் போட வேண்டும்... அப்போதுதான் திருந்துவார்கள் அய்யா!
பிரபாகர்.
//இப்படிப்பட்ட நிலையில்..இவர்கள் செய்த தவறுக்கு தண்டனை அளிக்க வேண்டுமானால்..இவர்களின் ஜாமீன் மனு அனைத்துக் கோர்ட்டிலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.அவர்களை சிறையிலிருந்து வெளியே அனுப்பக் கூடாது..//
இப்படி எல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும்
தூக்கில் போடக் கூடாது, உயிரோடு புதைத்து விட வேண்டும்.
//இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள துரோகிகள்..அரக்கர்கள்..நாளை சரணடைந்தாலும்..விசாரணை முடிந்து..வழக்கு பதிவு செய்யப்பட்டு..வருடக் கணக்கில் வழக்கு நடை பெறும்..சம்பந்தப் பட்டவர்கள் பண பலத்தால்..ஜாமீனில் வந்து உல்லாசமாக இருப்பார்கள்.வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும்..கீழ் கோர்ட்.மேல் கோர்ட்,உயர் நீதி மன்றம், உயர் நீதி மன்ற பெஞ்ச்,உச்ச நீதி மன்றம்,உச்ச நீதி மன்ற பெஞ்ச் என விசாரணை தொடரும். அதற்குள் அவர்கள் உலகச் சிறையிலிருந்து கூட வெளியேறிவிடுவார்கள்.
//
அவ்வளவு நாளெல்லாம் ஆகாது. 'நாங்கள் எக்ஸ்பெயரி ஆனதை தூக்கிப் போடத் தான் பாதுகாத்து(!) வைத்திருந்தோம் என்பார்கள். நம்ம ஊரில் வெளியே வருவது கடினம் இல்லையே
//காலாவதி ஆன உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்வதுதான்.//
அத்ற்கு பெயர் உயிர் கொல்லி மருந்துகள்.
//..வழக்கம் போல காவல்துறை வலை வீசி தேடி வருகின்றனராம்.//
நானும் சின்ன வயசிலேயிருந்து கேட்டுகிட்டு இருக்கேன் (இப்பவும் சின்ன வய்சுதான்) அதென்ன வலிஅ வீசி தேடுறது. ஒரு தடவை கூட எவனும் மாட்டினதில்லை. ஒரு வேளை வலையில மாட்டினாலும் தப்பிக்கிற அளவுக்கு ஓட்டை பெரிசா இருக்குமோ?
//நடக்குமா//
ஆனாலும் எனக்கு ஆசை அதிகம் தான்.
//அவ்வளவு நாளெல்லாம் ஆகாது. 'நாங்கள் எக்ஸ்பெயரி ஆனதை தூக்கிப் போடத் தான் பாதுகாத்து(!) வைத்திருந்தோம் என்பார்கள்.//
தலைவர் கரெக்டா சொன்னார். இதுதான் லா பாயிண்ட். உங்க( நம்ம)ளால என்ன பண்ண முடியும்?
வெந்ததை தின்னு விதிவந்தா சாவோம்ன்னு ஒரு பழமொழி உண்டு (இருக்கா?)
நம்பிக்கை துரோகத்துக்கு என்ன சார் தண்டனை?
நடக்கவே நடக்காது
//பிரபாகர் said...
பிடித்து தூக்கில் போட வேண்டும்... அப்போதுதான் திருந்துவார்கள் அய்யா!
பிரபாகர்.//
ஆமாம்..பிரபா..நீதித்திறை அப்படித்தான் ஆக வேண்டும்..ஆனால்...
//மங்குனி அமைச்சர் said...
இப்படி எல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும்//
ஆமாம் மங்குனி அமைச்சர்
//தராசு said...
தூக்கில் போடக் கூடாது, உயிரோடு புதைத்து விட வேண்டும்.//
ஆனாலும் ஆசை அதிகம் தான்
செய்தியில் பார்த்தபோதே அதிர்ந்தேன்.
அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விசயம், எப்படியெல்லாம் மனிதர்கள் வாழப் பழகிக் கொண்டார்கள். காவல்துறை விழிப்புடன் செயல்படட்டும், எனக்கும் ஆசை அதிகமே.
நடக்குமா...//
நம்ம ஊருலயா?
//
கோவி.கண்ணன் said...
அவ்வளவு நாளெல்லாம் ஆகாது. 'நாங்கள் எக்ஸ்பெயரி ஆனதை தூக்கிப் போடத் தான் பாதுகாத்து(!) வைத்திருந்தோம் என்பார்கள். நம்ம ஊரில் வெளியே வருவது கடினம் இல்லையே///
ஆமாம்..ஆனாலும் எனக்கு ஆசை அதிகம்
//அக்பர் said... நம்பிக்கை துரோகத்துக்கு என்ன சார் தண்டனை?//
தராசு அவர்களின் பின்னூட்டமே சரியான தண்டனையாக இருக்கக் கூடும்
//பாலாஜி said...
நடக்கவே நடக்காது//
தெரியும்..ஆனாலும் ஒரு நப்பாசை
// வித்யா said...
:( //
:((((
//அன்புடன் அருணா said...
செய்தியில் பார்த்தபோதே அதிர்ந்தேன்.//
என்ன ஒரு பெரிய நெட் ஒர்க்...அதிர்ச்சியுடன்..ஆச்சர்யப்படவும் வைக்கிறது
//V.Radhakrishnan said...
அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விசயம், எப்படியெல்லாம் மனிதர்கள் வாழப் பழகிக் கொண்டார்கள். காவல்துறை விழிப்புடன் செயல்படட்டும், எனக்கும் ஆசை அதிகமே.//
காவல்துறை விழிப்புடன் செயல்படட்டும்
////உழவன்" "Uzhavan" said...
நடக்குமா...//
நம்ம ஊருலயா?////
ஆசைதான்
//நடக்குமா... //
நடக்கனும்..
ஆனா... நடக்குமா!!!!
///ஈரோடு கதிர் said...
//நடக்குமா... //
நடக்கனும்..
ஆனா... நடக்குமா!!!!///
நடக்கனும்
தண்டனையாக, அவர்கள் வைத்திருந்த மருந்துகளை அவர்களுக்கு கொடுத்தால் என்ன?
//Chitra said...
தண்டனையாக, அவர்கள் வைத்திருந்த மருந்துகளை அவர்களுக்கு கொடுத்தால் என்ன?//
:-))))
Post a Comment