தமிழில் ஒரு சொலவடை உண்டு..
கூரைஏறி கோழி பிடிக்காதவன்..வானமேறி வைகுண்டம் போனானாம்..
வேறுவிதத்தில் சொல்வதானால் 'உள்ளூரில் விலை போகாத சரக்கு வெளியூரில் விற்குமா"
விற்றிருக்கிறது...கூரை ஏறத் தெரியாதவர் வைகுண்டம் போகப் போகிறார்..
அவர்தான்..
காங்கிரஸ் தலைவியின் குடும்ப நண்பர் மணிஷங்கர் ஐயர்..(ஐயர் என்ன படித்து வாங்கின பட்டமா)
காங்கிரஸ், தி.மு.க., வலுவான கூட்டணி இருந்த போதும்..தன் சொந்தத் தொகுதியிலேயே மக்களால் புறக்கணிக்கப் பட்டவர்..மக்கள் அவர் தேவையில்லை என்று ஒதுக்கியப் பிறகு..அதற்கு மதிப்புத் தராமல் அவரை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்குகிறது காங்கிரஸ்..
இது மக்களின் எண்ணத்தை...மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது..
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லிக் கொண்டே இருந்தால்..அந்த சகஜத்தை என்றுதான்..யார்தான் ஒழிப்பார்களோ?
19 comments:
ம்ம்ம்
இந்த ஆள் காங்கிரஸ் என்றால் காமராஜ் கல்லறை இல் இருந்து வந்து நம்மை அடித்து விடுவார்.இவர் ராஜீவ் குடும்பத்தின் எடுபிடி.ஒருமுறை திருநாமுள் காங்கிரஸ் போய் வந்தவர்.பல்வேறு துறைகளில் சிறப்பானவர்களுக்கு ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் MP பதவி இது.இதில் இந்த ஆளுக்கு ஏது இடம்.வேண்டுமானால் இவர் கட்சி நாளை dmk உடன் சேர்ந்து இவருக்கு ராஜ்ய சபா சீட் தரட்டும். இந்த ஆள் ஒருமுறை இந்தியன் எக்ஸ்பிரஸ் இல் காமராஜை பற்றி எழுதிகையில் அவர் இந்திராவை எதிர்த்த ஒரு சாதாரண பிராந்திய தலைவன்தான் என்று குறிப்பிட்டார்.தமிழ்நாட்டில் இன்னும் மானமுள்ள காங்கிரஸ் காரன் இருக்கிறானா.
ஆமாங்கய்யா! இதையெல்லாம் பாத்துகிட்டு சும்மா இருக்கிறோமே, நம்ம விதி!
பிரபாகர்...
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லிக் கொண்டே இருந்தால்..அந்த சகஜத்தை என்றுதான்..யார்தான் ஒழிப்பார்களோ?
........... பூனை கழுத்தில யார்தான் மணி கட்டுறது?
வருகைக்கு நன்றி Raji
வருகைக்கு நன்றி vijayan . உங்களது கருத்துகள்தான் என்னுடையதும்
வருகைக்கு நன்றி பிரபாகர்
வருகைக்கு நன்றி Chitra
மத்த ராஜ்ய சபா எம்பிக்கள்(எல்லா எம்பிக்களும்னு வச்சுக்கலாம்) எல்லாம் மக்கள் சேவை செய்ய வந்தவங்களா சார்.
அருமையான செய்தி;
///அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லிக் கொண்டே இருந்தால்..அந்த சகஜத்தை என்றுதான்..யார்தான் ஒழிப்பார்களோ?///
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப்பாருங்க... :)))
ப்ரொபைல் போட்டோல இருக்கிறது உங்க பேரனா சார்.. பேரென்ன?...
//அக்பர் said...
மத்த ராஜ்ய சபா எம்பிக்கள்(எல்லா எம்பிக்களும்னு வச்சுக்கலாம்) எல்லாம் மக்கள் சேவை செய்ய வந்தவங்களா சார்.//
அஞ்சு வருஷ பதவிக்கே வேணாம்னு மக்கள் புறக்கணிச்சவருக்கு ஆறு வருஷ பதவி...-))
//அக்பர் said...
மத்த ராஜ்ய சபா எம்பிக்கள்(எல்லா எம்பிக்களும்னு வச்சுக்கலாம்) எல்லாம் மக்கள் சேவை செய்ய வந்தவங்களா சார்.//
அஞ்சு வருஷ பதவிக்கே வேணாம்னு மக்கள் புறக்கணிச்சவருக்கு ஆறு வருஷ பதவி...-))
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான செய்தி;
///அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லிக் கொண்டே இருந்தால்..அந்த சகஜத்தை என்றுதான்..யார்தான் ஒழிப்பார்களோ?///
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப்பாருங்க... :)))//
உடனே யாராவது தலைவர்களின் அடிவருடியாக ஆகுங்கள்..
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ப்ரொபைல் போட்டோல இருக்கிறது உங்க பேரனா சார்.. பேரென்ன?...//
ஆம்..பெயர் கபில்...இப்போது ஒரு வயது
இதுக்கு பேசாம போட்டியிடாம விட்டிருந்தா கட்சிக்காவது தேர்தல் செலவு ஆட்டைய போட விடாம இருந்திருக்கலாம்:)
//வானம்பாடிகள் said...
இதுக்கு பேசாம போட்டியிடாம விட்டிருந்தா கட்சிக்காவது தேர்தல் செலவு ஆட்டைய போட விடாம இருந்திருக்கலாம்:)//
:-))))
ஹி... ஹி... இந்தியா அய்யா.. இந்தியா... நோ டென்ஷன்... இப்படித்தான் நடக்கும்.
வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா
Post a Comment