(இது நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது..யார் மனத்தையும் புண்படுத்த அல்ல)
படம் இரண்டு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என முன்னமயே சொல்லிவிட்டதால் உ.த., விவாதத்தில் முதலில் வெளிநடப்பு செய்கிறார்.
கேபிள்- என் கோரிக்கையை ஏற்று..இவ் விவாதத்தில் பங்கு பெற வந்ததற்கு நன்றி.முதல்ல நான் என்ன சொல்ல வரேன்னா..நம்ம விருகம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு ஒட்டி..வலப்பக்கம் திரும்பினா..'அய்யனார் ஒட்டல்னு ஒன்னு இருக்கு..அங்கே சாதம்..சும்மா அஜீத் கணக்கா..அதாங்க தும்பப் பூ கணக்கா இருக்கும்..கூடவே ஆட்டுக்கால் குழம்பு கொடுப்பாங்க..சாத்தில அதைக் கொட்டி..ஒரு பாத்திக் கட்டி அடிச்சோம்னா அடடா..என்ன ருசி தெரியுமா..
அதிஷா- (மனதிற்குள்) சம்பளம் வாங்கியதும் இராக் ஓட்டல் போறதை விட்டு..அய்யனாராம்..ஓட்டலாம்..
அப்துல்லா_ கேபிள்..நாம கதை விவாதத்திற்கு வந்திருக்கோம்..
கேபிள்- ஆமாம்..ஆமாம்..கதைக்கு பேர் கூட செலக்ட் பண்ணிட்டேன்..லெமன் ட்ரீயும்..இரண்டு ஷாட் டக்கீலாவும்...
தண்டோரா-சேச்சே..அந்த தலைப்பை வச்சா..ஏதோ மலையாள டப்பிங் படம்னு நினைச்சுப்பாங்க..தவிர..தமிழ் தலைப்பா இருந்தா..அரசாங்க வரி விலக்கும் கிடைக்கும்..
நர்சிம்- தமிழ் தலைப்புன்னா..'கம்பர்' ன்னு வைச்சுடலாம்.படத்தில கம்ப ராமாயணத்தில..சீதை குளிக்கிறமாதிரி சீன்ல..கம்பர் சொல்ற பாட்டையே போட்டுடலாம். குறுந்தொகையில பல்லி கத்தற மாதிரி ஒரு பாட்டு இருக்கு அதையும் போட்டுடலாம்.
பைத்தியக்காரன்-ஒரு காட்சியில் நம்ம கதாநாயகனுக்கு வெளிறிய அமைதியினுடே முகத்தில் துக்கத்தின் புன்னகை ஒளிருகிறது.வாழ்க்கையை அவன் நேசிப்பதாகச் சொல்வதாய் தெரிகிறது..இப்படியே காட்சிகள் அமைத்துக் கொண்டு போகலாம்
ஜ்யோவ்ராம்-சிவராமன் சொல்றது நல்லா இருக்கு..அதைக்காட்டிட்டு..எங்கிட்ட சிவாஜி..எம்.ஜி.ஆர்., சண்டை..ஸ்ரீதேவி..அப்படி..இப்படின்னு ஒரு பாட்டு இருக்கு..அதை குத்துப் பாட்டா போட்டுடலாம்..
தண்டோரா-(மெதுவாக) எவ்வளவு நாளானாலும் 'குத்து' மறக்கமாட்டார் போல இருக்கே..
நர்சிம்- என்ன..அப்துல்லா அண்ணன் ஒன்னும் பேசல
அப்துல்லா- நான் பேச என்ன இருக்கு..என் வீட்டிலேயே கம்பெனியை வைச்சுக்கலாம்..யார் வேணும்னா வந்து தங்கிக்கலாம்..எல்லாருக்கும் கேடரிங் என் செலவு.
கேபிள்- இதுக்கு என்ன கைமாறு செய்யப் போறோமோ..
தண்டோரா- நம்ம ஒடம்பை செருப்பா தைச்சு அண்ணனுக்கு போட்டுடலாம்
கேபிள்-(தனக்குள்) அடடா..காலைலயே ஆரம்பிச்சுட்டார் போல இருக்கே
அப்துல்லா-கைமாறு அப்படி இப்படின்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம்..எனக்கு படத்தில இரண்டு பாட்டு பாட சந்தர்ப்பம் கொடுங்க போதும்
(அப்போதுதான் கார்க்கி உள்ளே நுழைகிறார்)
கார்க்கி- சாரி..இந்த பப்லு வால கொஞ்சம் லேட்டாயிடுச்சு..மேலும் நான் வரும்போ சிக்னல்ல ஒரு இளம் பொண்ணு வண்டியை நிறுத்தி எங்கிட்டே..'நீங்க கார்க்கி தானே'ன்னு கேட்டுட்டு..ஒரேயடியா பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க..
நர்சிம்- அடடா..தன் புராணத்தை ஆரம்பிச்சுட்டாரே..விட்டா அவ்வளவுதான்..தற்புகழ்ச்சிக்கு இலக்கியத்துலே..
கார்க்கி-(அவரை சட்டைசெய்யாமல்)கேபிள்..கதை விவாதம் முடிஞ்சுதா..வேணும்னா பரிசல் கதை ஒன்னு சொல்லியிருக்கார்...
கேபிள்- வேண்டாம்..எல்லாம் நான் தீர்மானிச்சுட்டேன்..பணம் மட்டும்தான் இப்போ பிரச்னை..
அதிஷா- அப்படி எல்லாமே நீங்க தீர்மானம் பண்ணிட்டா எப்படி..இன்னும் லக்கி வேற வரலே..
கார்க்கி- அதானே..அப்ப நாங்க எதுக்கு..நாங்க என்ன ஸ்கூல் பசங்களா..லாலிபாப் கொடுத்துடுவீங்க போல இருக்கே
(திடீரென சப்தம் அதிகமாகிறது..ஒவ்வொருவர் கத்துகின்றனர்)
தண்டோரா- என்ன நடக்குது இங்க..
(உள்ளே நுழைகிறார்..வடகரை வேலன்..அங்கு சத்தம் நிலவுவதைப் பார்த்து)
வேலன்- எங்க வந்தாலும்..இந்த சண்டையை தீர்த்துவைக்கறதே நம்ம வேலையாய்ப் போச்சு..(சமாதான முயற்சியில் இறங்க)
(எதைப் பற்றியும் கவைப்படாமல் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆதி)
39 comments:
செம காமடி....
சிவராமன்...சுந்தர்....கார்க்கி பற்றியவை சிரிப்பு குலுங்க வைத்தது.
:))))))
சார்..நீங்களா? சூப்பர் சார்..குறிப்பாக ஜ்யோவ்ராம் குத்து கமெண்ட் !!
//படம் இரண்டு மணி நேரத்திற்குள் முடிக்க வெண்டும் என முன்னமயே சொல்லிவிட்டதால் உ.த., விவாதத்தில் முதலில் வெளிநடப்பு செய்கிறார்.//
அதனாலதான் இடுகையும் சீக்கிரம் முடிஞ்சி போச்சா :)
சமீபத்தில் படித்த நல்ல சிச்சுவேசன் காமெடி இது. எல்லோரையும் நன்கு கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள்.
அதிலும் ஆதி, வாய்ப்பே இல்லை!
//நீங்க கார்க்கி தானே'ன்னு கேட்டுட்டு..ஒரேயடியா பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க.//
//எல்லோரையும் நன்கு கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள்//
இந்த ரெண்டுதுதுக்கும் ஏதோ லின்க் இருக்கிற மாதிரி இருக்கே :))
சூப்பர் சார்... அடுத்த டதடவ எழுதும் போது சொல்லுங்க.. நமக்கு கொஞ்சம் கருணை காட்டவும்
:)). முடியல சார்.
(கூட்டம் கலைந்த பின் சோகத்துடன் தமிழா தமிழா)
தமிழா தமிழா : எப்படியாவது கூட்டத கூட்னம்னா, ஒரு பார்டி கீர்டி வப்பானுகன்னு பார்த்தா
கடைசில ஒரு வடை கூட கிடைக்கலையே. (நம்மள பத்தி புரிசுகிட்டான்களோ )
சார்.. அட்ட்டகாசம். அதிலும் தண்டோரா, சிவராமன், கார்க்கி, ஆதி அப்துல்லா என்று எல்லோரையும் சரியாக கவனித்து கலக்கியிருக்கிறீர்கள்.
கேபிள் சங்கர்
அருமை சார். செமையா எழுதிருக்கீங்க
கலக்கல் சார்.
எனக்கு பிடித்தவர்கள். நீங்கள் கூறிய பதிவர்கள் அனைவரும்.
செம காமெடி...
அப்படியே கேபிள்ட்ட சொல்லி எனக்கு ஒரு வெயிட்டான ரோல் (கல் இல்லை) தரச் சொல்லுங்க...
:)))
சின்ன பட்ஜெட் படத்துலயெல்லாம் சூப்பர் ஸ்டார் கௌரவ வேஷத்துலதான் கலந்துக்குவாராமே.. அப்படி நினைச்சுக்கறேன்... என்ன பண்றது...?
குத்து மேட்டர் சூப்பர்
முதலிலேயே என்னை வெளியேற்றமைக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
கோவி
தண்டோரா
சங்கர்
வடகரை வேலன்
கார்க்கி
வானம்பாடிகள்
மங்குனி அமைச்சர்
கேபிள்
மோகன் குமார்
அக்பர்
Starjan ( ஸ்டார்ஜன் )
கலக்கல் சார்:)
சான்ஸே இல்ல..:))
//பரிசல்காரன் said...
சின்ன பட்ஜெட் படத்துலயெல்லாம் சூப்பர் ஸ்டார் கௌரவ வேஷத்துலதான் கலந்துக்குவாராமே.. அப்படி நினைச்சுக்கறேன்... என்ன பண்றது...?//
நடிகர்கள் தேர்வு செய்கையில் தான் பரிசல் உள்ளே வரவேண்டும்..
//KVR said...
குத்து மேட்டர் சூப்பர்//
நன்றி KVR
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
முதலிலேயே என்னை வெளியேற்றமைக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!//
நாம இரண்டுபேரும் சேர்ந்து மூன்று மணி நேர படத்திற்கு விவாதிப்போம்..அவர்களை விட்டுடுவோம்
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
கலக்கல் சார்:)
சான்ஸே இல்ல..:))//
நன்றி ஷங்கர்
சூப்பரு!
சார்... கலக்கிட்டீங்க... நர்சிம் இதுமாதிரி பதிவுகள் எழுதுவதுல கில்லாடி.
நல்ல அவதானிப்பு.. இன்னும் எழுதியிருக்கலாம்.
//அப்துல்லா- நான் பேச என்ன இருக்கு..என் வீட்டிலேயே கம்பெனியை வைச்சுக்கலாம்..யார் வேணும்னா வந்து தங்கிக்கலாம்..எல்லாருக்கும் கேடரிங் என் செலவு.
//
இது இப்படி
அப்துல்லா- நான் பேச என்னண்ணே இருக்கு..என் வீட்டிலேயே கம்பெனியை வைச்சுக்கலாம்ணே..யார் வேணும்னா வந்து தங்கிக்கலாம்ணே..எல்லாருக்கும் கேடரிங் என் செலவுண்ணே.
அப்துல்லா-கைமாறு அப்படி இப்படின்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம்ணே..எனக்கு படத்தில இரண்டு பாட்டு பாட சந்தர்ப்பம் கொடுங்க போதும்ணே
அப்பிடின்னு இருந்திருந்தா பெர்ஃபெக்டா இருக்கும்.வாழ்த்துக்கள் சார்.
அருமை ஐயா
அண்ணே,
ரஜினி, விவேக், வைரமுத்து, மணிரத்னம், கமல் எல்லாம் வச்சு ஏறக்கொறய, வரிக்குவரி இதே மாதிரி ஓர் எழுத்தாக்கத்தப் படிச்ச நினைவு! அந்த லிங்க அல்லது எழுதினவர் பேரப் போட்டிருக்கலாம்!
ஆதி கார்க்கி கலக்கல் சாரே.....!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வால்பையன்
D.R.Ashok
மயில்ராவணன்
நசரேயன்
வசந்த்
//zero said...
அண்ணே,
ரஜினி, விவேக், வைரமுத்து, மணிரத்னம், கமல் எல்லாம் வச்சு ஏறக்கொறய, வரிக்குவரி இதே மாதிரி ஓர் எழுத்தாக்கத்தப் படிச்ச நினைவு! அந்த லிங்க அல்லது எழுதினவர் பேரப் போட்டிருக்கலாம்!//
அப்படியா...அந்த லிங்க்கை தேடிப் பிடித்து அனுப்பவும்..நான் பதிவையே எடுத்து விடுகிறேன்
அருமை
//ஜ்யோவ்ராம்-சிவராமன் சொல்றது நல்லா இருக்கு..அதைக்காட்டிட்டு..எங்கிட்ட சிவாஜி..எம்.ஜி.ஆர்., சண்டை..ஸ்ரீதேவி..அப்படி..இப்படின்னு ஒரு பாட்டு இருக்கு..அதை குத்துப் பாட்டா போட்டுடலாம்..
//
வெகு நேரம் ஆனது சிரிப்பு அடங்க..கலக்கல் ஸார்.
//நர்சிம் said...
வெகு நேரம் ஆனது சிரிப்பு அடங்க..கலக்கல் ஸார்.//
//Hamitha said...
அருமை//
நன்றி Hamitha
சூப்பர்! கலக்கல்!
//படம் இரண்டு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என முன்னமயே சொல்லிவிட்டதால் உ.த., விவாதத்தில் முதலில் வெளிநடப்பு செய்கிறார்.//
இங்கதான்யா நச்சுன்னு நிக்கிறீரு!
வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி
எப்படியாவது படம் எடுத்தால் சரிதான், நல்லதொரு நகைச்சுவை.
வருகைக்கு நன்றி V.Radhakrishnan
செம....:))
நன்றி ஜெட்லி
Post a Comment